Friday 19 August 2011

காந்திக் குல்லாய் அணிந்து

குருவிக்கூட்டைக்
கலைக்காதீர்கள்
குரங்குகள்
உண்ணாவிரதம் இருந்தன

தவளைகளைக்
காப்பாற்றுங்கள்
பாம்புகள் குரல் எழுப்பின

பசுவைக் காக்க
பசுந்தோல் போர்த்திய
புலிகள்
போராட்டம் நடத்தின

குண்டு வைக்கும்
காவித் தீவிரவாதிகள்
ஆதரவில்
காந்திக் குல்லாய் அணிந்து
ஊழலுக்கு எதிராக
அகிம்சைப் போராட்டம்
நடத்தினர்

பூனைக்குட்டி வெளியில் வந்தது

ஊழல் ! ஊழல் !
என ஓலமிட்ட
கதர்க்குல்லாய்
அணிந்த பூனைக்குட்டி
வெளியில் வந்தது !

வன்முறையை மட்டுமே
வழியாய்க் கொண்ட
காந்தியாரைக் கொன்ற
வன்முறைக் கூட்டம்
ஏவிய அம்பு
மிகக் கவனமாய்
காந்தியார் சொன்ன
அகிம்சைப் படி
நடக்க அறிவுரை சொன்னது !

நான் சொன்னபடி நட!
இல்லையேல் நடக்க
விடமாட்டேன் பாராளூமன்றத்தை
என்று அடாவடி செய்யும்
குரங்குக் கூட்டத்தலைவி
பெருமிதமாய்ச் சொன்னார்

எங்கள் மாணவர் அணிதான்
கதர்க்குல்லாய் பின்னால்
இதிலென்ன குற்றம் !

குற்றமில்லை குரங்குத் தலைவியே !
வெளிப்படையாய் நாங்கள்
என்று அறிவித்து செய்தால்-
அதுதான் உங்களுக்கு
வழக்கமே இல்லையே !

ஒளிந்திருந்தே அம்பு
எய்யும் இராமனக் கூட்டமே !
சுன்னத் செய்து
காந்தியைக் கொன்ற
காலிகள் கூட்டமே !

அன்றே சொன்னார்
எங்கள் ஆசிரியர் வீரமணி!
பாபா ராம்தேவும்
அன்னா கசாரேவும்
காவியின் பினாமிகள்!
கவனமாய் இருங்களென்று !
தும்பை விட்டு
வாலைப் பிடிக்கும்
காங்கிரசு இயக்கமே !

பம்மினால் நடக்காது!
பதுங்கினால் தீராது !
ஒட்ட நறுக்குங்குள்
முகமூடிகளை -
இவர்கள் யாரென
உலகுக்கு காட்டுங்கள் !
அப்படியானால் தப்பிப்பீர்கள்!
இல்லையேல் தவிப்பீர்கள் !



Tuesday 16 August 2011

விதவை என்றே சொல்லே நம் புழக்கத்திலிருந்து எடுக்கப்படவேண்டிய ஒன்று.


பெண்ணுரிமை என்பது பெரியார் காலத்தில் பேச்சளவில் இருந்தது இப்ப
நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ரது என்றாலும் முழுமை அடையாமல் வீக்கமாய்
நகரங்களில் மட்டுமே வெற்றியடைந்துள்ளது.. ஒருபக்கம் வேதனைக்குறிய
முன்னேற்றமாகவும் ஆகியுள்ளது.


நாம் இவ்விழையில் விதவை மறுமணத்தை , அதன் பிரச்னைகளை , அதற்கான தீர்வுகளை
குறித்து நல்லதொரு முடிவெடுக்கும் கருத்துகளை பகிர்ந்துகொள்வோம்.


சேவையாக நினைத்து நம்மால் இயன்ற பங்களிப்பை தர முயல்வோம்..


நான் வாசித்த ஒரு கவிதையை பகிர்கிறேன்.. யோசிக்க வைத்தது..


பெண்களால்
பெரியார் எனப் பெயர் சூட்டப்பட்ட
பெருந்தகையே!
உலக மகளிர்
தினம் என்றவுடன்
உன் நினைவுதான்
எங்கள் முன்னால்


ஆனால் சிலர்
மகளிர் நாள்
எனச்சொல்லி
மார்ச் 8ல்
கோலப்போட்டி
நடத்திக்
கொண்டிருக்கிறார்கள்


நல்ல
பட்டுப்புடவை
ஒன்றுபோல் எடுத்து
பெண்கள் எல்லாம்
மார்ச் 8ல்
அலுவலகத்திற்கு
கட்டிவர வேண்டுமாம்
சில மாமிகள்
அலுவலகத்தில்
ஆணையிட்டுக்
கொண்டிருக்கிறார்கள்


சிலர் கோயில்
பிரசாதங்கள்
வழங்க
பட்டியல்
தயாரிக்கின்றார்கள்
மகளிர் தினத்தை
முன்னிட்டு
எந்த நாளையும்
மாமிகள்
விடுவதாயில்லை
இந்துமத
வளையத்துக்குள்
கொண்டு வருவதிலேயே
குறியாய் இருக்கிறார்கள்


பெண்ணுரிமை
எனும் பேச்சு
வரும் இடமெல்லாம்
பெரியார் எனும்
பெயர் நினைவில் வரும்
நம் எதிரிகளுக்கும்


ஆதலால்
என்ன செய்யலாம்
இந்நாளில்
பெரியார் பெயர்
வராமல் இருக்க ?
யோசித்து யோசித்து
பாரதியை
முன்னிறுத்துகின்றார்


எங்கள்
ஈரோட்டுச்சூரியனே
தன்னிகர் இல்லா
பெண் விடுதலைக்
கருத்துகளை
தரணியில் எவரும்
சிந்திக்கா நிலையில்
கனலாய் கக்கிய
எரிமலையே!
மண்ணில்
ஆணுக்கு
என்னென்ன
உரிமை உண்டோ
அத்தனையும்
பெண்ணுக்கு
வேண்டுமெனக்
கேட்டவர் நீ !
மதம்
தோற்றுவிக்கப்பட்டதே
பெண்களை
அடிமைப்படுத்த என்றாய்
கடவுள் எனும்
வார்த்தையே
பெண்விடுதலை
எனும் சொல்லுக்கு
எதிர்ப்பதம் என்றாய்
கற்பு என்ற
சொல்லே பெண்ணை
வீட்டுக்குள்ளே
பூட்டிவைக்க சிலர்
சொல்லிவைத்த
வார்த்தை என்றாய்
கர்ப்பப்பையை
கழற்றி எறி என்றாய்
எனக்கு தாலி என்றால்
உனக்கு என்னடா
அடையாளம்?
எனக்
கேட்கச் சொன்னாய்
பெண்ணை விதவை என்றால்
விதவன் எனப்பெயர் ஏன்
ஆணுக்கு இல்லை?
வினவச் சொன்னாய்
ஆரியப் பார்ப்பான்
மனுவைச் சொல்லி
அடங்கிப் போ என்றான்
கல்வியை
ஆயுதமாக்கு!
துணிச்சலை
துணையாகக் கொள்!
மனு தர்மத்தை
பொசுக்கு என்றாய்
நடுங்கித்தான் போனது
பார்ப்பனியம்


பெண் ஏன்
அடிமையானாள்?
எண்பது ஆண்டுகளுக்கு
முன்னால் நீ
சொல்லிய வார்த்தைகளை
திருப்பிச் சொல்வதற்கே
பயம்
நிறைய முற்போக்குகளுக்கு
இன்றைக்கும்


எங்கள் முன்னால்
எனது தங்கையும்
எனது தாயும்
எனது துணையும்
நன்றியோடு
உனை நினைத்து
புகழ்கிறார்கள்!
மண்ணில் மகளிர்
சுயம்ரியாதையாய்
வாழ வழிகாட்டியவர்
நீங்கள் என்பதால் ...


------------------- ப.க.தலைவர். மானமிகு - வா நேரு அவர்கள்


இனி கேள்விகளை தொடுப்போம்..


என் அப்பா அடிக்கடி சொல்லும் நிகழ்வு இது ....காந்திஜியிடம் ,விதவைகள்
மறுமணம் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது ,அவர் "மனைவியை இழந்தவர்கள் மறுமணம்
செய்யக்கூடாது "என்றாராம் .இதனால் கோபமான பாரதியார் ,"காந்தி மகானிடம் நாம்
விதவைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு வழிகேட்டால் அவர் விதவர்கள் (இந்த சொல்
எனக்கு சரியாக நினைவில்லை )எண்ணிக்கையை அதிகமாக்க வழி சொல்கிறார் ,"என்று
எழுதினாராம் .இதை பாரதியார் கட்டுரை தொகுப்பில் காண முடியும் .


நகரத்தில் மட்டுமல்ல சாந்தி ,சில கிராமங்களில் எப்போதும் இது இயல்பாக
நடந்ததுண்டு .


2009/9/23 jmms





>
>Subject: Re: [தமிழமுதம்] Re: இந்திய விதவை மாதருக்கு மறுவாழ்வு தருவது எப்படி ?
விதவைகள் வாழ்வுரிமை இயக்கம் எனும் அமைப்பு துவங்கியுள்ள கலங்கரை என்ற
தன்னார்வத் தொண்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ள ஒரு ஐ.நா சபையின் ஆய்வுப்படி
இந்தியாவில் 15 முதல் 59 வயதுவரை உள்ள பெண்களில் ஆயிரத்தில் 53பேர் விதவைகளாம்
(குமுதம் ரிப்போர்ட்டர், 17.7.08). தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் இந்த
விகிதம் நூற்றுக்கு ஏழுபேராம். அதன்படி ஆயிரத்திற்கு எழுபது பேர். நாட்டிலேயே
விதவைகளின் விகிதம் தமிழ்நாட்டில்தான் அதிகமாம். இந்த அதிக விதவை விகிதத்திற்கு
என்ன காரணம்?


தமிழ்நாடு குடிகாரர்களின் தேசமாக மாறிவருவதுதான் இந்த நிலைக்கு காரணம்.
டாஸ்மாக் விற்பனையின் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 9000 கோடி ரூபாய்
வருமானம் வருகிறது என்றால் குடிப்பவர்களின் எண்ணிக்கையையும், குடியின் அளவையும்
ஊகித்தறியலாம். நகரமயமாக்கம் உருவாக்கியிருக்கும் புதிய உடழைப்பு வேலைகள்
காரணமாக உதிரிப் பாட்டாளிகள் அன்றாடம் பெறும் கூலியில் கணிசமான அளவை
சாராயக்கடையில் அள்ளிக் கொடுக்கின்றனர். மிதமாக ஆரம்பிக்கும் குடிப்பண்பு
பின்பு மிதமிஞ்சியதாக மாறி குடிக்கு அடிமையாக மாற்றிவிடுகிறது.


எனவே இந்தப்பிரிவினர் 40, 50 வயதுகளில் கல்லீரல் கெட்டு மரணத்தைத்
தழுவுகின்றனர். இம்மக்கள் பார்க்கும் கடின உழைப்பு வேலைகள் உடல் சோர்வை மறக்கக்
குடித்தே ஆகவேண்டும் என்ற நிலையை உருவாக்கியிருப்பதும் உண்மைதான். குடிக்கும்
நடுத்தரவர்க்கம் போதிய உணவை எடுத்துக்கொள்வதாலும், அவர்களுக்கு கடின உழைப்பு
வேலைகள் இல்லை என்பதோடு குடியும் அளவுக்குட்பட்டு இருப்பதாலும் இளவயது மரணம்
இவர்களிடத்தில் பொதுவில் இல்லை. ஆனால் உழைக்கும் வர்க்கமோ சத்தான உணவைச்
சாப்பிட வாய்ப்பில்லாமலும், இருக்கும் காசை குடியில் கொட்டுவதாலும் மரணம்
வாசலைத் தட்டுகிறது. ஆக திருமணம் ஆன பெண்கள் இளம் வயதிலேயே விதவையாகிறார்கள்.


விதவைகள் மற்றவர்களைப் போல வாழ்வதும், மறுவாழ்வு பெறுவதும் இயல்பாக முடியுமென்ற
நிலை இன்னும் வரவில்லை. விதவைகளைப் புறக்கணிக்கும் பிற்போக்குச் சமூகமாகவே
தமிழகம் நீடிக்கிறது. புத்தாடை அணிந்தாலே மினுக்கிகிட்டுத் திரிகிறாள் என்று
பேசுவதும், மங்கல நிகழ்ச்சிகளில் ஒதுக்குவதும் இன்றும் சமூகத்தில்
சாதாரணம்தான். அவ்வளவு ஏன் மேற்கண்ட விதவைகள் சங்கம், கூட்டம்
நடத்துவதற்குக்கூட பல திருமண மண்டப உரிமையாளர்கள் புனிதத்தைக் காரணம் காட்டி
அனுமதி மறுத்துவிட்டனராம்.


பெண்கள் கைம்பெண்களாவதும், வளைகுடா தொழிலாளர்கள் தற்கொலை செய்வதும்
நாளிதழ்களின் செய்தியலைகளில் ஒதுங்கிவிட்ட இருபிரிவினரின் வாழ்க்கை மட்டுமல்ல.
அதன் சங்கிலித் தொடர் வாழ்க்கையில் அல்லல் படும் மக்கள் ஏராளம் இருக்கின்றனர்.
தோல்வியும், விரக்தியும், சலிப்பும், சோர்வும் இன்னபிற சோகங்களையும்
ஏற்றுக்கொண்டு வாழ்வதற்கு பழக்கப்படுத்தப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் “இந்தியா
முன்னேறுகிறது, வல்லரசாகிறது” என்று சொல்வது சிரமம் இல்லையே?
> என் அப்பா அடிக்கடி சொல்லும் நிகழ்வு இது ....காந்திஜியிடம் ,விதவைகள்
> மறுமணம் பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது ,அவர் "மனைவியை இழந்தவர்கள் மறுமணம்
> செய்யக்கூடாது "என்றாராம் .இதனால் கோபமான பாரதியார் ,"காந்தி மகானிடம் நாம்
> விதவைகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு வழிகேட்டால் அவர் விதவர்கள் (இந்த சொல்
> எனக்கு சரியாக நினைவில்லை )எண்ணிக்கையை அதிகமாக்க வழி சொல்கிறார் ,"என்று
> எழுதினாராம் .இதை பாரதியார் கட்டுரை தொகுப்பில் காண முடியும் .


இருக்கும் பூங்குழலி.

நண்பர் ஒருவர் பதில் பாருங்கள்.


[[



> கணவனை இழந்த பெண்களை திருமணம் செய்த நாத்திக இயக்கத்தினரும், கலவரத்தில்
> பலாத்காரப்படுத்தப்பட்டு கணவனை இழந்த பெண்களை காந்தியின் கட்டளையின் பேரில்
> திருமணம் செய்த ஆத்திகரும் நம் நாட்டில் உண்டு.விதவை மறுமணம் குறித்து பாரதி
> நிறைய எழுதி இருக்கிறான். ]]
> நகரத்தில் மட்டுமல்ல சாந்தி ,சில கிராமங்களில் எப்போதும் இது இயல்பாக
> நடந்ததுண்டு .


ஒஹ்..

--
சாந்தி




Discussion subject changed to "[தமிழமுதம்] Re: இந்திய விதவை மாதருக்கு மறுவாழ்வு தருவது எப்படி ?" by Poongulali








Subject: Re: [அன்புடன்] Re: [தமிழமுதம்] Re: இந்திய விதவை மாதருக்கு மறுவாழ்வு தருவது எப்படி ?
Print | Individual message | Show original | Report this message | Find messages by this author
". நாட்டிலேயே விதவைகளின் விகிதம் தமிழ்நாட்டில்தான் அதிகமாம்"


இதற்கு காரணம் நம் மாநிலத்தில் கணக்கு தெரிந்திருப்பதாக கூட இருக்கலாம் ...


உதிரிப் பாட்டாளிகள் அன்றாடம் பெறும் கூலியில் கணிசமான அளவை சாராயக்கடையில்
அள்ளிக் கொடுக்கின்றனர்
இது பல காலமாக நடக்கிறது சாந்தி..என் சிறு வயதில் என் அம்மா வீட்டில்
பணிபுரியும் பெண்கள் பலர் இப்பேற்பட்ட குடிகார கணவன்களால் அவதிப்பட்டதைக்
கண்டிருக்கிறேன் .அதில் ஒருவர் தன் கணவருக்கு வைத்த செல்லப் பெயர் "புட்டி ":)


புத்தாடை அணிந்தாலே மினுக்கிகிட்டுத் திரிகிறாள் என்று பேசுவதும், மங்கல
நிகழ்ச்சிகளில் ஒதுக்குவதும் இன்றும் சமூகத்தில் சாதாரணம்தான்.


என் பேஷன்ட் ஒருவர் தன் தம்பி கல்யாணத்தில் நகை அணிந்து கொண்டு நிற்க ..ஊரார்
கேலிப் பேச்சில் மனநோயாளியே ஆகிப் போனார் .


படித்து பட்டம் பெற்று தன்னம்பிக்கையோடு இல்லை குடும்ப ஆதரவோடு வாழும்
பெண்களின் நிலை பரவாயில்லை ...மற்றவர்களுக்கு பாலியல் தொல்லைகள் ,பொருளாதார
சிக்கல்கள் என்று ஏகப்பட்ட இன்னல்கள் .


பல வருடங்களுக்கு முன்பு ஒரு வார இதழில் வந்த கவிதை இது .
"விதவைகளுக்கும் பொட்டில்லை
விதவை என்ற சொல்லுக்கும் பொட்டில்லை "


இதற்கு அடுத்த வாரமே பதில் கவிதை வந்தது ,
"விதவைகளுக்கு மறுமணம் செய்ய வேண்டும் என்பதாலோ
கைம்பெண் என்ற சொல்லுக்கு இரண்டு பொட்டுகள் "


> விதவைகள் வாழ்வுரிமை இயக்கம் எனும் அமைப்பு துவங்கியுள்ள கலங்கரை என்ற
> தன்னார்வத் தொண்டு நிறுவனம் குறிப்பிட்டுள்ள ஒரு ஐ.நா சபையின் ஆய்வுப்படி
> இந்தியாவில் 15 முதல் 59 வயதுவரை உள்ள பெண்களில் ஆயிரத்தில் 53பேர் விதவைகளாம்
> (குமுதம் ரிப்போர்ட்டர், 17.7.08). தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் இந்த
> விகிதம் நூற்றுக்கு ஏழுபேராம். அதன்படி ஆயிரத்திற்கு எழுபது பேர். நாட்டிலேயே
> விதவைகளின் விகிதம் தமிழ்நாட்டில்தான் அதிகமாம். இந்த அதிக விதவை விகிதத்திற்கு
> என்ன காரணம்?
> தமிழ்நாடு குடிகாரர்களின் தேசமாக மாறிவருவதுதான் இந்த நிலைக்கு காரணம்.
> டாஸ்மாக் விற்பனையின் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டொன்றுக்கு 9000 கோடி ரூபாய்
> வருமானம் வருகிறது என்றால் குடிப்பவர்களின் எண்ணிக்கையையும், குடியின் அளவையும்
> ஊகித்தறியலாம். நகரமயமாக்கம் உருவாக்கியிருக்கும் புதிய உடழைப்பு வேலைகள்
> காரணமாக உதிரிப் பாட்டாளிகள் அன்றாடம் பெறும் கூலியில் கணிசமான அளவை
> சாராயக்கடையில் அள்ளிக் கொடுக்கின்றனர். மிதமாக ஆரம்பிக்கும் குடிப்பண்பு
> பின்பு மிதமிஞ்சியதாக மாறி குடிக்கு அடிமையாக மாற்றிவிடுகிறது.


> எனவே இந்தப்பிரிவினர் 40, 50 வயதுகளில் கல்லீரல் கெட்டு மரணத்தைத்
> தழுவுகின்றனர். இம்மக்கள் பார்க்கும் கடின உழைப்பு வேலைகள் உடல் சோர்வை மறக்கக்
> குடித்தே ஆகவேண்டும் என்ற நிலையை உருவாக்கியிருப்பதும் உண்மைதான். குடிக்கும்
> நடுத்தரவர்க்கம் போதிய உணவை எடுத்துக்கொள்வதாலும், அவர்களுக்கு கடின உழைப்பு
> வேலைகள் இல்லை என்பதோடு குடியும் அளவுக்குட்பட்டு இருப்பதாலும் இளவயது மரணம்
> இவர்களிடத்தில் பொதுவில் இல்லை. ஆனால் உழைக்கும் வர்க்கமோ சத்தான உணவைச்
> சாப்பிட வாய்ப்பில்லாமலும், இருக்கும் காசை குடியில் கொட்டுவதாலும் மரணம்
> வாசலைத் தட்டுகிறது. ஆக திருமணம் ஆன பெண்கள் இளம் வயதிலேயே விதவையாகிறார்கள்.


> விதவைகள் மற்றவர்களைப் போல வாழ்வதும், மறுவாழ்வு பெறுவதும் இயல்பாக
> முடியுமென்ற நிலை இன்னும் வரவில்லை. விதவைகளைப் புறக்கணிக்கும் பிற்போக்குச்
> சமூகமாகவே தமிழகம் நீடிக்கிறது. புத்தாடை அணிந்தாலே மினுக்கிகிட்டுத்
> திரிகிறாள் என்று பேசுவதும், மங்கல நிகழ்ச்சிகளில் ஒதுக்குவதும் இன்றும்
> சமூகத்தில் சாதாரணம்தான். அவ்வளவு ஏன் மேற்கண்ட விதவைகள் சங்கம், கூட்டம்
> நடத்துவதற்குக்கூட பல திருமண மண்டப உரிமையாளர்கள் புனிதத்தைக் காரணம் காட்டி
> அனுமதி மறுத்துவிட்டனராம்.


> பெண்கள் கைம்பெண்களாவதும், வளைகுடா தொழிலாளர்கள் தற்கொலை செய்வதும்
> நாளிதழ்களின் செய்தியலைகளில் ஒதுங்கிவிட்ட இருபிரிவினரின் வாழ்க்கை மட்டுமல்ல.
> அதன் சங்கிலித் தொடர் வாழ்க்கையில் அல்லல் படும் மக்கள் ஏராளம் இருக்கின்றனர்.
> தோல்வியும், விரக்தியும், சலிப்பும், சோர்வும் இன்னபிற சோகங்களையும்
> ஏற்றுக்கொண்டு வாழ்வதற்கு பழக்கப்படுத்தப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் “இந்தியா
> முன்னேறுகிறது, வல்லரசாகிறது” என்று சொல்வது சிரமம் இல்லையே?











> பல வருடங்களுக்கு முன்பு ஒரு வார இதழில் வந்த கவிதை இது .
> "விதவைகளுக்கும் பொட்டில்லை
> விதவை என்ற சொல்லுக்கும் பொட்டில்லை "


> இதற்கு அடுத்த வாரமே பதில் கவிதை வந்தது ,
> "விதவைகளுக்கு மறுமணம் செய்ய வேண்டும் என்பதாலோ
> கைம்பெண் என்ற சொல்லுக்கு இரண்டு பொட்டுகள் "



அருமை..

--
சாந்தி












தீபா மேத்தாவின்
வாட்டர் !
விதவைகளின் மறுவாழ்வு !


இவ்வார பீ.பீ.சி தமிழழோசை செய்திகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும்
33.000 விதவைகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. யாழ் குடாநாட்டை எடுத்துப்
பார்த்தால் இந்தத் தொகை மேலும் நெஞ்சங்களை நடுங்க வைக்கும். அலைகள் மூவீஸ்
எடுத்துள்ள இளம்புயல் திரைப்படம் விதவைகள் மறுவாழ்வு பற்றிய செய்திகளுடன்
திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் தீபா மேத்தாவினால் எடுக்கப்பட்ட
விதவைகள் மறுவாழ்வை குறிக்கும் வாட்டர் திரைப்படம் பற்றிய தகவல்களை இக்கட்டுரை
தருகிறது.


ஓரின பாலியலை விபரிக்கும் பயர், மற்றும் ஏர்த் போன்ற சர்ச்சைக்குரிய படங்களை
எடுத்த தீபா மேத்தாவினால் எடுக்கப்பட்ட படமே வாட்டராகும். உலகளவில் பலத்த
விவாதங்களை கிளப்பிய திரைப்படம் இதுவாகும்.


இந்திய, இலங்கைக் கலாச்சாரத்தில் திருமணமான பெண் கணவனை இழந்துவிட்டால் பாதி
இறந்தவளாகிவிடுகிறாள். அவளுக்கு மூன்று வழிகள்தான் இருக்கிறது. 1. கணவனின்
சிதையில் விழுந்து உயிர்விடுவது 2. கணவனின் தம்பியை மறுமணம் செய்வது 3.
மொட்டையடித்து வெள்ளைப் பிடவையுடன் எங்காவது ஒரு மடத்தில் நாட்களை கழிப்பது.
2000 ம் வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதாகக் கூறப்படும் மனுசாஸ்திரம் என்னும்
நூல் பெண்களின் வாழ்வுரிமையை அடியோடு மறுத்ததை இந்தத் திரைப்படம் சுட்டிக்காட்ட
முற்பட்டது.


படப்பிடிப்பு ஆரம்பித்தவுடனேயே இந்து மத அடிப்படைவாதிகளும், இந்து
அமைப்புக்களும் பெரும் அடாவடித்தனங்களை கட்டவிழ்த்து விட்டன. படப்பிடிப்பு
கருவிகளை பறித்து கங்கையில் வீசினார்கள். இதனால் படப்பிடிப்பு பாதியிலேயே
தடைப்பட்டது. தொடர்ந்து தீபா மேத்தாவுக்கு கொலை மிரட்டல்கள் வந்தவண்ணமிருந்தன.
இதனால் இலங்கையில் படப்பிடிப்பை நடாத்தி ஆறு வருடங்களாக போராடி 2007ம் ஆண்டு
படத்தை திரைக்குக் கொண்டு வந்தார் தீபா மேத்தா.


முதலில் இந்தியாவில் திரையிடாமல் உலகின் மற்றய நாடுகளில் திரையிட்டு பெரும்
பாராட்டுக்களை பெற்றார். படத்திற்கு அடிப்படைவாதிகள் கொடுத்த எதிர்ப்பு பெரிய
விளம்பரமாக அமைந்த காரணத்தால் ஆஸ்கார் விருதுக்கு நியமனம் பெறும் வரை படத்தின்
பயணம் தொடர்ந்தது.


இப்படத்தின் கதை 1930 ம் ஆண்டில் நடைபெறுகிறது. படத்தின் கதை நாயகி
சுய்யாவுக்கு எட்டு வயது. தனக்கு நடைபெற்ற திருமணம் கூட நினைவில் இல்லாத வயது.
அவள் ஒரு கிழவனுக்கு மணம் முடித்து வைக்கப்படுகிறாள். அவள் கணவனான கிழவன்
மரணிக்கவே மொட்டை மழிக்கப்பட்டு மடத்திற்கு அனுப்பப்படுகிறாள். மற்ற
விதவைகளுடன் சேர்ந்து வாரணாசிப் பகுதியில் பக்திப் பாடல்களை பாடி பிச்சை
எடுக்கிறாள்.


மற்றவர் முன் விதவை தோன்றினால் அப சகுனம் என்று புறந்தள்ளப்படுகிறாள். அந்த
மடத்தின் தலைமை விதவையால் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட கல்யாணியை சந்திக்கிறாள்.
விபச்சாரத்திற்காக வேண்டி அவள் முடி வளர்க்க அனுமதிக்கப்பட்டிருந்தாள். அவள்
உதவியால் நாராயணன் என்ற விதவைகள் மறு மணத்தை வலியுறுத்தும் காந்தியவாதியை
சந்திக்கிறாள். அவனுடன் இணைந்து இந்து மதத்தின் மூடத்தனமான அடிப்படைக்
கொள்கைகளை எதிர்க்கிறாள். மற்ற விதவைகளும் மனு சாஸ்திரத்தை தூக்கி வீசிவிட்டு
அவளைப் போலவே மறுமணத்தை நாடுகிறார்கள்.


மதம், கட்டுப்பாடு, கலாச்சாரம் என்ற போர்வையில் பெண்கள் வாழ்வை தேங்க வைக்கக்
கூடாது. ஒரு காலமும் வாட்டர் தேங்கி நிற்கக் கூடாது. அது
ஓடிக்கொண்டிருப்பதுதான் புனிதமானது. விதவை வாழ்வானது பெண்களை தண்ணீர் போல தேங்க
வைப்பதால் எஞ்சுவது சமுதாய அவலமே என்று திரைப்படம் முடிவடைகிறது.


இந்தியாவில் மறு மணமின்றி வாடிக் கிடக்கும் 33 மில்லியன் விதவைகளே இதற்கு நல்ல
சாட்சியமாகும். வாட்டர் இந்துமதம் தரித்துள்ள போலியான கொள்கைகளுக்கு எதிராக
குரல் கொடுத்த காரணத்தால் உலகப் புகழ் பெற்ற திரைப்படமாக போற்றப்பட்டது.


இயக்குநர் - தீபா மேத்தா
இசை- ஏ.ஆர். ரகுமான்.
மொத்தம் 10 விருதுகள் பெற்றது. ஆஸ்கார் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டது.
மேலும் 11 விருதுகளுக்கு அனுப்பப்பட்டது.


ஆதார நூல் - உலகைக் கலக்கிய திரைப்படங்கள்.










> விதவை வாழ்வானது பெண்களை தண்ணீர் போல தேங்க வைப்பதால் எஞ்சுவது சமுதாய அவலமே
> என்று திரைப்படம் முடிவடைகிறது.



சிறப்பான கருத்து.

இவர்களுக்கென்று சிறப்பு ஒதுக்கீடுகள் தரப்படணும்..


--
சாந்தி


இன்றைய தேதியில் பரவாயில்லை ..எத்தனையோ பெண்கள் விதவை என்பதற்கான அந்த வெள்ளை
உடையையாவது களைந்திருக்கிறார்கள் .பால்ய விவாகங்களும் தமிழ்நாட்டில் வெகுவாக
குறைந்திருக்கின்றன .என் அம்மாவின் ஆச்சி ,இருந்தார் .நான் கல்லூரி படிக்கும்
காலத்தில் அவருக்கு தொண்ணூறு வயது .நாற்பது வயதில் விதவையானவர் .அதோடு வெள்ளை
சேலை ,நகைகள் ஏதும் இல்லாமல் வாழ்ந்தவர்.இந்த தொண்ணூறு வயதில் தன்னை பார்க்க
வருபவர்கள் அணிந்திருக்கும் நகைகளை அணியக் கேட்பார் ,குறிப்பாக மோதிரம்
.என்னிடமும் ஒருமுறை ,சிறிது நேரம் அணிந்து விட்டு திரும்ப தந்தார் .என்ன வேதனை
,பாருங்கள் ....இப்படி எத்தனை ஆசைகள் தேக்கி வைத்திருந்தாரோ ?
2009/9/23 jmms



- Hide quoted text -
- Show quoted text -

> விதவை வாழ்வானது பெண்களை தண்ணீர் போல தேங்க வைப்பதால் எஞ்சுவது சமுதாய
>> அவலமே என்று திரைப்படம் முடிவடைகிறது.

> சிறப்பான கருத்து.


> இவர்களுக்கென்று சிறப்பு ஒதுக்கீடுகள் தரப்படணும்..


> --
> சாந்தி


> Forgiveness is to offer no resistance to life - to allow life to live
> through you


> http://punnagaithesam.blogspot.com/ =============================













You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.



jmms View profile
More options Sep 23 2009, 10:27 am

From: jmms
Date: Wed, 23 Sep 2009 12:27:19 +0700
Local: Wed, Sep 23 2009 10:27 am
Subject: Re: [அன்புடன்] Re: இந்திய விதவை மாதருக்கு மறுவாழ்வு தருவது எப்படி ?
Print | Individual message | Show original | Report this message | Find messages by this author
2009/9/23 Poongulali



> விதவை வாழ்வானது பெண்களை தண்ணீர் போல தேங்க வைப்பதால் எஞ்சுவது சமுதாய அவலமே
> என்று திரைப்படம் முடிவடைகிறது.
> நிதர்சனம் ....

ஊடகத்துறை

ஊடகத்துறையில் பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்போம்!
மதுரையில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை தொடக்க விழாவில் சூளுரை

மதுரை, மார்ச் 5_ தந்தை பெரியாரின் பகுத்-தறிவு, சமூக நீதிக் கருத்து-களை ஊடகங்களின் வாயிலாக பரப்புவதற்-காகத் தொடங்கப்பட்ட பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை அமைப்பை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உருவாக்க வேண்டும் என்ற தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கட்டளை-யிட்டிருந்தார். அதன்படி மதுரையில் பெரியார் சுயமரியாதை ஊடகத்-துறையின் தொடக்க-விழாவும், கருத்தரங்கமும் பிப்ரவரி 7-ஆம் தேதி-யன்று மதுரை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்-தால் ஏற்பாடு செய்யப்-பட்டிருந்தது. மதுரை மூட்டா அரங்கில் நடை-பெற்ற இவ்விழாவிற்கு வருகை தந்திருந்தவர்-களை மாவட்ட ப.க. செயலாளர் பா.சட-கோபன் வரவேற்று உரை-யாற்றினார்.

குறும்படம் திரையிடல்

ஊடகத்துறையின் அவசியம் குறித்தும், சென்னையில் நடை-பெற்ற பெரியார் திரை குறும்படப்போட்டி உருவாக்கிய தாக்கம் குறித்தும் மாநில பகுத்தறி-வாளர் கழகத் தலைவர் வா.நேரு தனது தலைமை-யுரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து நீதிய-ரசர்(ஓய்வு) பொ.நடராசன் மற்றும் மாநில திராவி-டர் கழக சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் கி.மகேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். பிறகு, 2002-இல் குஜராத் இந்துத்துவாவினரால் நடத்தப்பெற்ற இனப்-படுகொலை தொடர்-பாக, ச.பிரின்சு என்னா-ரெசு பெரியார் இயக்கிய திற குறும்படம் திரை-யிடப்பட்டது. அரங்கம் நிறைந்திருந்த நிலையி-லும், சலனம் ஏற்படாத அளவு, படம் பார்வை-யாளர்களிடம் தாக்-கத்தை ஏற்படுத்தியி-ருந்தது. பார்ப்பனர்களின் திட்டமிட்ட செயல்

திரையிடலின் நிறை-வில் படம் தொடர்பான விவாதமும் விளக்கமும் சிறிது நேரம் இடம்-பெற்றது. பெரியார் சுய-மரியாதை ஊடகத்துறை அமைப்பாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஊடகங்களும் பார்ப்பனி-யமும் என்ற தலைப்பில் உரையாற்றினார். பத்திரிகை, தொலைக்-காட்சி, திரைப்படம் மற்றும் இணைய ஊட-கங்களில் பார்ப்பனர்-களின் திட்டமிட்ட செயல்பாடுகள் எவ்-வாறு இருக்கின்றன என்பதை ஆதாரங்களுடன் விளக்-கினார். மேலும் தனது உரையில், ஊடகங்களில் என்ன செய்தி வெளிவர-வேண்டும் என முடிவு செய்யும் இடத்தில் உயர்-ஜாதியினரும் குறிப்பாக பார்ப்பனர்களுமே ஆதிக்கம் பெற்றுள்ளனர் என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. நம்மவர்களின் பல்லவியோ!

மக்களின் பொதுப்புத்-தி-யில் உலவ வேண்டிய கருத்தாக்கங்களை பார்ப்-பனர்கள் திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். அதை உண்மையென்றும், நடுநிலையானதென்றும் நம்பி தங்களின் கருத்தாக பார்ப்பனரல்லாத மக்களும் ஏற்கின்றனர். இதனால் தான் இட-ஒதுக்கீடு, ஈழத் தமிழர் பிரச்சினை உள்ளிட்ட அனைத்திலும் பார்ப்-பனர்களின் கருத்துக்கு ஒப்ப படித்த பாமரர்-களான நம்மவர்களும் கருத்து கொண்டிருக்-கிறார்கள். தகுதிக்குதான் சார் மதிப்பு கொடுக்-கணும் என்று பார்ப்ப-னர்களின் பல்லவியை நம்மவர்களும் பாடுகி-றார்கள்.

திரைப்படத்துறை-யிலும் முற்போக்கு, சமூகப்பார்வை என்ற பார்வையில் பாலச்சந்தர், மணிரத்னம், சுஜாதா உள்ளிட்ட பார்ப்பனர்-களும், ஷங்கர் போன்ற கன்வர்ட்டட் பார்ப்ப-னர்களும் தூவியிருக்கும் விஷ விதைகள் தமிழர்-களை படுகுழியில் தள்ளியிருக்கிறது. எனவே பொது ஊடகத்துறையில் பெருமளவில் பங்கேற்க, பணியாற்ற நம் இளை-ஞர்களை உருவாக்கும் பணியைத்தான் தமிழர் தலைவர் அவர்கள் உருவாக்கிய பெரியார் சுயமரியாதை ஊடகத்-துறை செய்துவருகிறது. அதனைப் பயன்படுத்திக் கொண்டு ஊடகத்-துறையில் இருக்கும் பார்ப்பனிய ஆதிக்-கத்தைத் தகர்க்க முன்வர-வேண்டும் என்று தமி-ழின இளைஞர்களுக்கு அழைப்புவிடுத்து உரையாற்றினார். வாழ்க்கை இணைஏற்பு

பின்னர் பெரியார் திடலில் பணியாற்றும் சிவகங்கை மாவட்டம் கோவனூரைச் சேர்ந்த கண்ணன் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த லெட்-சுமி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழா நடைபெற்றது. மாநில ப.க. தலைவர் வா.நேரு, மதுரை மாவட்ட திராவிடர் கழக ஒருங்-கிணைப்பாளர் வே. செல்வம் ஆகியோர் முன்னிலையில் மாநில சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் கி.மகேந்-திரன் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியை ஏற்கச்-செய்து இணையேற்பை நடத்திவைத்தார். சுயமரியாதைத் திருமண முறையில் வாழ்க்கை இணையேற்பு நடப்பதன் வரலாற்றுப் பின்ன-ணியையும் வாழ்வியல் சிறப்பையும் எடுத்துக் கூறி, பெரியார் கொள்-கைப்படி தமிழர் தலை-வர் இளைஞர்களுக்கு விடுத்த கட்டளைகளில் ஒன்றான மணவிலக்குப் பெற்ற மகளிரைத் திரு-மணம் செய்தல் என்ற அடிப்படையில் இணை-யேற்றிருக்கும் மண-மக்களை வாழ்த்தி உரையாற்றினார். விழாவில் தி.க. மாவட்டத் தலைவர் க. அழகர், மாவட்டச் செய-லாளர் திருப்பதி, மாவட்ட துணைத்-தலை-வர் அ. வேல்-முருகன், பொதுக்குழு உறுப்பினர் முனியசாமி மற்றும் எண்ணற்ற இயக்கத் தோழர்களும், இயக்கம் சாராத புதுமுகங்களும் பங்கேற்றனர். மாவட்ட இளைஞரணி செயலா-ளர் விடுதலை ராசா நன்றி கூறினார். தொடர்ந்து மதுரையில் பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சார்பில் திரையிடல்களை நடத்து-வது என முடிவு செய்-யப்பட்டுள்ளது.

Sunday 7 August 2011

உரமாய் இளந்தளிர்களிடத்தில்

இளந்தளிர்
ஒன்று தன்னைத்தானே
மண்ணெண்ணய் ஊற்றி
கருக்கிக்கொண்டது

ஆடு மாடு
மேய்த்துக்கொண்டே
பகுதி நேரம் போல
பள்ளியில் படித்து
மாநில அளவில்
முதலிடம் பெற்றோரைப்
பற்றி பெருமையுடன்
படித்துக் கொண்டே
வந்தபொழுது
+2 வில் தோல்வி
மாணவி தற்கொலை
அதுவும் நான்
படித்த அரசு பள்ளியில்
என்ற செய்தி கண்டு
இதயம் நொந்தது

வெற்றி பெறுவது எப்படி
என்று பாடம் நடத்துவோரே!
தோல்வியை எப்படி
தாங்குவது என்பதையும்
சேர்த்து சொல்லுங்களேன்
பாடத்தில் தோற்று
வாழ்க்கையில் ஜெயித்தோரின்
வரலாற்றை பாடமாய்
நடத்துங்களேன் !

விழுவதும் எழுவதுமே
வாழ்க்கை
வீணாய் உயிரைத்
தொலைத்தல் கொடுமை
எனபதை உரமாய்
இளந்தளிர்களிடத்தில்
விதைக்க ஒரு
வழி காண்போமா ?

மகிழ்ச்சியாய் நம்பிக்கையாய்

மகிழ்ச்சியாய் நம்பிக்கையாய்
முகத்தில் அரும்பும்
வியர்வையை
தவழ்ந்து வரும்
இளந்தென்றல்
முகத்தில் படர்ந்து துடைக்கும் !

பறவைகள் தங்கள்
இன்னிசையால் எழுப்பும்
ஓசை உற்சாகத்தை
அள்ளி அள்ளி கொடுக்கும்

மகிழ்ந்து பேசி நடக்க நடக்க
நேற்றைய கவலையெல்லாம்
நம்மை விட்டு விலகி ஓடும

நடைப்பயிற்சியால்
மகிழ்ச்சியாய் நம்பிக்கையாய்
புலரும் காலைப் பொழுது

டால்பின் விலங்கா ?



கேளிக்கையாய்
டால்பினைக் கொல்லுதல்
வேடிக்கையாம் டென்மார்க்கில் !

வெள்ளை நிறக் கடல்
சிவப்பு நிறமாய்
மாறி நிற்கும் கொடுமை பாருங்கள் !

அறிவானது என்பார்கள்
விலங்குகளில் டால்பினை !

கத்தியால் குத்தி குத்தி
இரத்தம் வடியும் கொடுமையை
பார்த்து இரசிக்கும்
இவர்கள் விலங்கா ?

வழி தெரியாமல் செத்து
மடியும் டால்பின் விலங்கா ?
விளங்கவில்லை உலகில் !
வா. நேரு