Saturday, 28 April 2012

கணினியை இனிமேலும் கற்றுக்கொள்ள முடியுமா?


செயங்கொண்டத்தில் பெரியார் மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டுவிழாவில்(8.4.2012)  தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றும்போது இந்தப் பள்ளியில் ஜாதி, மதம், அரசியல் கிடையாது. மனிதநேய கண்ணோட்டம் மட்டும்தான். கல்வி என்பது சமுதாய மாற்றத்திற்கு பயன்பட வேண்டும். இந்தப் பள்ளிக்கு மேலும், ஒரு கோடி ரூபாயில் கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கே வந்திருக்கின்ற பெற்றோர்கள் மாணவர்களிடம் நேரத்தைச் செலவிட வேண்டும். ஆசிரியரே பார்த்துக் கொள்வார் என்று விட்டுவிடக் கூடாது. இனி வரும் காலங்களில் கணினி பயிலாத வர்கள் கற்காதவர்கள் ஆவார்கள் என்ற நிலை வரும். ஆகவே, பெற்றோர்கள் வயதாகி இருந்தாலும் கணினி கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் கணினி கற்றுக்கொள்வதற்காக பள்ளி வளாகத் திலேயே குறைந்த கட்டணத்தில் மாலை நேர கணினி வகுப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்து தரப்படும். அதுதான் இந்த ஆண்டின் திட்டமாக செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கின்றார்கள்.

கணினியை பெற்றோர் கற்றுக் கொள்வதா, அதுவும் கிராமப்புரத்து பெற்றோர் கற்றுக் கொள்ளமுடியுமா என்னும் கேள்வி எழுகிறது. கணினி கற்க என்ன படித்திருக்க வேண்டும்?  நம்மில் பல பேருக்கு கணினி கற்பதென்றால் நிறையப் படித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வருகின்றது. 2, 3 ஆம் வகுப்பு படிக்கும் தன் மகன் கம்ப்யூட்டரில் கேம் விளையாடுவதையும், டைப் செய்வதையும் பார்த்துக்கொண்டிருக்கும் பெற்றோர் கூட கணினி முன் அமர்ந்து கற்றுக் கொள்ளத் தயங்குகின்றனர்.
பெரியார் இயக்கத்தை பொறுத்தவரை கல்வி என்பதாக இருந்தாலும் சரி, வாழ்க்கை என்பதாக இருந்தாலும் சரி  அது மற்றவர்களுக்கு, சமூகத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் பயன்படவேண்டும் என்பதுதான் அடிப்படைக் கொள்கை. அவ்வகையில் பெற்றோர்கள் கணினி  கற்றுக் கொள்வது அவர்களுக்கும், அவர் களது குழந்தைகளுக்கும், சமூகத்திற்கும் பயன்படும் என்னும் நோக்கில் கணினியை கற்றுக்கொள்ளலாம். கணினி கற்றுக் கொள்ள தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும், அத்தோடு ஆங்கில எழுத்துகளைப் பற்றிய அறிமுகமும், எந்தத் தமிழ் எழுத்துக்கு  எந்த ஆங்கில எழுத்தை டைப் செய்ய வேண்டும் எனும் அறிமுகமும் இருந்தால் போதும். கொட்டிக் கிடக்கும் தகவல்கள்
இணைய தளத்தில் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. நூலகத்திற்கு சென்று, நூல்களை தேடிக் கண்டுபிடித்து அவற்றில் நமக்கு வேண்டிய தகவல்களை குறிப்பதெல்லாம் அந்தக் காலம்.
கூகிள் சர்வரிலோ அல்லது மற்ற தேடு தளங்களிலோ சென்று நமக்கு வேண்டி யதைப் பெறுவது இந்தக்காலம். நேர விரயம் குறைவு, பல்வேறு நூல்களில் உள்ள தகவலகளை ஒரே நேரத்தில் பெறக்கூடிய வசதி. அதனைப் போலவே இணைய தளத்தில் உள்ள பேஸ் புக் போன்ற குழுமங்களின் மூலமாக, வெகு காலமாக நாம் சந்திக்க இயலாத நமது ஊர்க்காரர்களை, நமது பழைய கல்லூரி நண்பர்களை, பள்ளி நண்பர்களையெல் லாம் அடையாளம் கண்டு அவர்களோடு மீண்டும் நட்பினை புதுப்பித்துக் கொள்ளலாம்.
நமது ஒத்த கருத்தோட்டமுடையவர் களின் கருத்துகளை தெரிந்து கொள்ள லாம். நமது பரம்பரை எதிரிகள் எப்படிப்பட்ட கருத்துகளோடு இருக்கிறார்கள், அவர் களின் எண்ணம் என்ன? வெளியே சொல் லும் செய்திகள் என்ன போன்றவற்றை எல்லாம் அறிந்து கொள்ளலாம். பல்வேறு பத்திரிகைகளைப் படித்துக் கொள்ளலாம். இணையமும் இடையூறுகளும்   நமது குழந்தை வேற்று நாட்டு மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டுமா?  ஆங்கிலத்தில் இன்னும் புலமை பெற வேண்டுமா? தமிழ் இலக்கணத்தை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டுமா? மேடையிலே பேசுவது எப்படி என்பதனைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? போட்டித் தேர்வுகளில் வினாக்கள் எப்படி வரும் என்று அறிந்து கொள்ள வேண்டுமா?  போட்டித் தேர்வுகளுக்கு எப்படி தயாரிக்க வேண்டும் என்பதனை ஏற்கெனவே வெற்றி பெற்றவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டுமா? அத்தனைக்கும் வலைத் தளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இணையத்தை சரியாகப் பயன்படுத்த தெரிந்த ஒரு மாணவரால் பல வகையிலும் முன்னேற முடியும். இவையெல்லாம் நேர் மறையான செய்திகள். எதிர்மறையான செய்திகளும் இணையத்துக்குள் இருக் கின்றன. இணையத்தைப் பயன்படுத்து பவர்களில் மூவரில் ஒருவர் ஆபாச படம் பார்க்க அதனைப் பயன்படுத்துகின் றார்கள் என்று புள்ளி விவரங்கள்  சொல்கின்றன. 10, 12 வயது சிறுவனிடம் மிக வேகமாக செல்லும் இரு சக்கர வண்டியைக் கொடுத்து, அதிக டிராபிக் உள்ள சாலையில் அனுப்புவது போன்றது, எந்த விதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் மாணவர்களை, மாணவிகளை இணைய தளத்தினை பயன்படுத்த சொல்வது  விபத்தில்  எந்த நேரத்திலும் நமது பிள்ளையைப் பறிகொடுக்க நேரிடலாம் என்பது போன்றதே, இணைய தளப் போதையால் நமது குழந்தையின் எதிர்கால வாழ்வும், நிகழ்கால அமைதியும் தொலைய நேரிடலாம்.
அதனால் பெற்றோரின் நிம்மதி முற்றிலுமாக தொலைந்து போகலாம். தமது குழந்தைகளின் நல்வாழ்வுக்காக பெற்றோர்களும் கொஞ்சம் கணினி கற்றுக் கொள்ளலாம். கண்காணிப்பு அவசியம் மாணவ, மாணவிகளுக்கு பெற் றோர்கள் மிகுந்த செலவு செய்து, புதிய மாடல் கண்னிகளை வாங்கிக் கொடுக் கின்றார்கள். அதனை வீட்டின் ஏதேனும் ஒரு மூலையில், இருட்டறைக்குள் வைத்து விடுகின்றார்கள். குடும்பத்தில் எல்லோ ரும் வந்து புழங்கும் இடமாக இருக்கக் கூடிய இடத்திலேயே கணினியை வைக்க வேண்டும் என்பது என் கருத்தாகும். மடிக்கணினியாக (லேப் டாப்) இருந்தால் கூட அதனை பெற்றோர்கள் பயன் படுத்தத் தெரிய வேண்டும்.

என்ன வலைத் தளங்கள் பார்க்கப் பட்டிருக்கின்றன, எவ்வளவு நேரம் இணைய தளத்தினைப் பயன்படுத்தியி ருக்கின்றார்கள், பேஸ் புக் போன்ற குழுக்களில் யார் யாரெல்லாம் நமது குழந் தைகளோடு தொடர்பில் இருக்கின் றார்கள், எப்படிப்பட்ட மன நிலை உள்ள கணினி விளையாட்டுகளை (கேம்ஸ்)  விளையாடுகிறார்கள் என்பதையெல்லாம் கவனிக்க வேண்டும்.  விபரம் தெரியாத வயதில், வெளுத்த தெல்லாம் பால் என்று குழந்தைகள் நினைத்துக்கொண்டிருப் பார்கள்,  பெற்றோர்கள்தான் இதனைக் கண்காணிக்க வேண்டும். கணினியையும், குழந்தையையும் கட்டுப்படுத்தலாம்
பெற்றோர்கள் கணினி கற்றுக் கொள்வதன்மூலம், தன்னுடைய குழந்தை கணினியில் எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்க்கக்கூடாது, எவ்வளவு நேரம் பார்க்கலாம், கேம்ஸ் எவ்வளவு நேரம் விளையாடலாம் போன்ற பல்வேறு விசயங்களை கட்டுப்படுத்த முடியும். பெற்றோர்கள் கட்டுப்படுத்த (ஞயசநவேயட ஊடிவேசடிடள) என்ற ஒரு வசதியே கணினியில் இருக்கிறது. கணினியில் ளவயசவ-ழூஉடிவேசடிட யீயநேட-ழூ ரளநச யஉஉடிரவேள என்ற பகுதிக்குள் உள்ளே சென்றால்,     என்ற வசதி இருக் கிறது. இந்த வசதியை ஓ.கே. கொடுப் பதன் மூலம் பல்வேறு கட்டுப்பாடுகளை இணைய தளத்திற்கு கொடுக்க முடியும்.
இணைய தளத்தில் தேடு தளத்தில் ஓர் எழுத்தினை வைத்து தேடச் சொல்லும்போது பல்வேறு விதமான வலைத்தளங்களும் வருகின்றன. ஆபாசப் படங்களோடு கூடிய வலைத் தளங்களும் வருகின்றன. பல பெற்றோருக்கு இதனை எப்படி தவிர்ப்பது என்பது தெரியவில்லை.
இந்த ளநவரயீ யீயசநவேயட உடிவேசடிடள-ல் சிறுவர்கள் பார்க்கக்கூடிய வலைத் தளங்களை மட்டும் அனுமதிக்கவும் என்று கொடுப்பதன் மூலம் தேவையற்ற குப்பை களை நமது கணினிக்குள் வருவதை தவிர்க்கலாம்.  எவ்வளவு நேரம் குழந் தைகள் கணினியைப் பயன்படுத்தலாம் என்பதற்கு நீங்கள் குறிப்பிட்ட நேரத்தை கொடுத்து பயன்படுத்தச் சொல்லலாம், அந்த குறிப்பிட்ட நேரம் முடிந்தவுடன் தானகவே கணினி வேலை செய்வதை நிறுத்திவிடும். இதனைப் போன்ற பல்வேறு வசதிகள் இதில் உள்ளன. எந்த வயதில் கற்றுக் கொள்வது?
தமிழர் தலைவர் அவர்கள் கூறும் போது, பெற்றோர்கள் வயதாகி இருந் தாலும், கணினி கற்றுக் கொள்ள முடியும் என்று கூறியிருக்கின்றார். வயதுக்கும், கணினி கற்றுக் கொள்வதற்கும் தொடர் பில்லை. ஆர்வமும், வாய்ப்பும் இருந்தால்  எந்த வயதிலும் கற்றுக் கொள்ள முடியும். எனக்குத் தெரிந்த ஒருவர், மிகப் பெரிய பொறுப்பினை அரசாங்கத்தில் வகித்தவர். மிகச் சிறந்த  பேச்சாளர், எழுத்தாளர், எத்தனையோ நல்ல விசயங் களை எனக்கு கற்பித்தவர். 65-க்கு மேற்பட்ட வயதில் கணினி கற்றுக் கொள்ள விரும்பினார். பெரிய வாய்ப்பாக எண்ணி கணினி பயன்பாட்டின் வழிமுறைகளைக் கூறினேன். ஒரு பத்தாவது படிக்கும் மாணவனைப்போல குறிப்புகளை எடுத்துக்கொண்டு, ஒவ்வொன்றாக செய்முறை பயிற்சி செய்து கற்றுக் கொண்டார். இரண்டு நாளில் ஒரு மாணவர் 2 மாதத்தில் படிக்கும் கணினி விசயங் களைக் கற்றுக்கொண்டார், இப்பொழுது அவராகவே மின் அஞ்சல் அனுப்புகிறார், மின் அஞ்சல் பெற்று வாசிக்கிறார். தேவை யான விசயங்களை கூகிள் போன்றவற்றில் தேடி எடுக்கின்றார், தமிழில் செய்தி அனுப்புகின்றார், ஆங்கிலத்தில் அனுப்பு கின்றார், தனக்கு விருப்பமான வலைத் தளங்களில் உலவுகின்றார், சும்மா கணினியில் புகுந்து விளையாடுகின்றார்.
முப்பதுகளில் இருக்கும் எனக்குத் தெரிந்த மற்றொருவர், அலுவலகத்தில் கணினியைப் பயன்படுத்தி வேலை பார்க்க வேண்டும், தனக்கு வேண்டிய அளவுகூட கணினியைக் கற்றுக் கொள்ள விருப்ப மில்லை, ஏதேனும் எழுத்து வேலை கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டு, கணினியைப் பார்த்துப் பயந்து  காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார். விருப்பம் இருப்பின், எந்த வயதிலும் கற்றுக் கொள்ள முடியும். சமூக நலன் கருதி கற்றுக் கொள்ளுங்கள்  கிராமப் புற பகுதியில் இருக்கும் பெற்றோர்கள் கணினி கற்றுக் கொள் வதன் மூலம், இணையத்தைப் பயன்படுத்தி மின் அஞ்சல் போன்றவற்றை அனுப்பத் தெரிவதன் மூலம் தங்களது குறை பாடுகளை எளிதாக அதிகாரிகளுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் போன்றவர் களுக்கு அனுப்ப முடியும். தங்களது தொகுதி எம்.எல்.ஏ., எம்.பி., போன்றவர் களைத் தொடர்பு கொள்ள முடியும். கிராமத்தில் நிலவும் பிரச்சினைகளை, சமூக அமைதிக்கு எதிரான செயல்பாடு களை விடுதலை ( viduthalaimalar@gmail.com) போன்ற செய்தித் தாள்களுக்கு அனுப்ப முடியும்.
இலக்கிய நாட்டம் உள்ளவர்கள் தங்களுக்கு பிடித்த கவிஞர்களின், எழுத்தாளர்களின் படைப்புகளைப் படிக்கலாம், படி எடுக்கலாம். தங்களது குழந்தைகளுக்கு இருக்கும் வாய்ப்புகள் மட்டுமல்லாது, மற்ற கிராமப்புறத்தில் படிக்கும் மாணவர்களுக்கான வாய்ப்பு களையும் அறிந்து அவர்களுக்கு எடுத்து சொல்லலாம். ... இன்னும் பல வகையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், உங்கள் ஊருக்கும், சமூகத்திற்கும்  பலன் கொடுக்கும் படிப்பு கணினி படிப்பு  எனவே பெற்றோர்களே, வாருங்கள், கணினி கற்றுக் கொள்ளுங்கள்.
நன்றி - விடுதலை 27.4.12 @28.4.12

Wednesday, 25 April 2012


நூல்
பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்
முனைவர் வா.நேரு எழுதிய புதுப்பாக்களின் தொகுப்பு நூல் இது. பகுத்தறிவுக் கருத்துகளும் சமூகப் பார்வையும் நிரம்பி வழியும் புதுப்பா வரிகள் படிக்க இனிக்கின்றன.
கிராமங்கள் / சொர்க்கம் என்று / எவன் சொன்னது? / இன்றும்கூட / ஜாதியைக் / கெட்டியாகப் / பற்றியிருக்கும் / நரகம் அவை/...
நாங்கள் / உள்ளே நுழைவதற்கு / முத்தாலம்மன் / கோவிலுக்குள் / அனுமதி / இல்லையென்றால் / அந்தக் கோவில் / தேவைதானா எங்களுக்கு / மதியாதார் தலைவாசல் / மிதியாதே என்றார்கள் / எங்களை / மதியாத / மதத்தில் மட்டும் / இருக்க வேண்டுமா?...
இவை பொறுக்கி எடுக்கப்பட்ட சில வரிகள்.
வெளியீடு: மானமிகு பதிப்பகம், 3/20 ஏ, ஆதிபராசக்தி நகர், திருப்பாலை, மதுரை_625 014. பக். 128 ரூ. 60.
நன்றி :  உண்மை மாதம் இருமுறை இதழ்- ஏப்ரல் 16-30- 2012 

Thursday, 19 April 2012

பயன்படு பேஸ்புக்கே !பயன்படு !


உனைப் பார்த்து
ஆண்டுகள் பல ஆயின


ஒரே பள்ளியில்
படித்ததும்
ஒன்றாய்க் குளித்ததும்
கிணற்றில் டைவ்
அடித்து குதித்ததும்
வீட்டில் மின்விளக்கு
இல்லாமையால்
இரவல் வெளிச்சங்களில்
ஒன்றாய் படித்ததும்
திண்பண்டங்களை
பகிர்ந்ததும்
சிரித்து மகிழ்ந்ததும்
மறந்தே போய்
வருடங்கள் பல
ஆயின நண்பா !

பேஸ்புக்கில் வந்து 
நட்பு செய்ய விருப்பம் 
எனத் தகவல் 
கொடுத்திருந்தாய் 

புதிதாய் நட்பா ? 
நீயும் நானும் 
ஒன்றாய் இருந்த 
தகவல்கள் அனைத்தும் 
மூளையில் இருந்து 
பதிவிறக்கம் 
செய்யப்பட்டு 
பட பட வென 
மனதில் ஓடிக்கொண்டிருக்க 
விருப்பம் என 
விடை கொடுத்தேன் 

நன்றி ! நன்றி 
இணையத்திற்கும் 
பேஸ் புக்கிற்கும் 

இன்னும் சிலர் 
முகம் அப்படியே 
மனதில் ஊஞ்சலாடுகிறது 
அவர்களின் முகமும் 
பாவனையும் 
உரிமையாய் பேசிய 
பேச்சுகள் மட்டுமே 
மனதில் இருக்க 

வெகு காலமாய் 
தொடர்பு எல்லைக்கு 
அப்பால் இருக்கும் 
அவர்களையும் 
தொடர்பு கொள்ள 
பயன்படு பேஸ்புக்கே ! 
பயன்படு !

வா. நேரு - 

17-4-12 கவிதையை வெளியிட்ட eluthu.com - ற்கு இனிய நன்றிகள்  

                                 


Thursday, 12 April 2012

பகுத்தறிவாளர் கழகம் துணை நிற்க வேண்டும்

தஞ்சை, ஏப்.12- 5.4.2012 அன்று மாலை தஞ்சை கீழராச வீதி பெரியார் இல்லத்தில் தஞ்சை மாவட்ட ப.க. கலந்து ரையாடல் கூட்டம் நடைபெற்றது.




தொடக்கத்தில் கட வுள் மறுப்புக்கூறி அனை வரையும் வரவேற்று, கூட்ட நோக்கத்தினை விளக்கியும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளை சிறப்பாக நடத்த தோழர்கள் நல்ல ஆலோசனை வழங்க வேண்டும் எனக்கூறிய தைத்தொடர்ந்து தஞ்சை ஒன்றிய ப.க. தலைவர்ஆசிரியர் ச.அழகிரி, ஒன்றிய ப.க. அமைப்பாளர் ஆசிரியர் பொ.ராஜீ,அம்மா பேட்டை ஒன்றிய ப.க. அமைப்பாளர் ஆசிரியர் இரா.பன்னீர்செல்வம், வெ.ரவிக்குமார், ஆசிரி யர் தங்கவெற்றிவேந்தன், நகரச் செயலாளர் கரந்தை முருகேசன், டேவிட், திருவையாறு ஒன்றிய ப.க. தலைவர் கோ.கவு தமன், மாவட்ட மாண வரணி செயலாளர் த.பர் தீன், பெரியார் பெருந் தொண்டர் சா.தண்டா யுதபாணி, புலவர் அன் பரசு, ஒரத்தநாடு ஒன்றிய தலைவர் ஆ.இலக்கு மணன், செயலாளர் அ. அருணகிரி, அம்மாப் பேட்டை ஒன்றிய அமைப் பாளர் செ.காத்தையன், தஞ்சை ஒன்றிய செய லாளர் ஆட்டோ ஏகாம் பரம், ஆசிரியர் மா. இலக்குமணசாமி, மாவட்ட இணை செய லாளர்ச.சந்துரு, மாவட்ட து.தலைவர் ப.தேசிங்கு, மாவட்ட செயலாளர் த.ஜெகநா தன், மண்டல செயலா ளர் மு.அய்யனார், மாவட்ட தலைவர் வழக் குரைஞர் சி.அமர்சிங், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக பெரி யார் உயராய்வு மய்யத் தின் இணை இயக்குநர் கழகப் பேச்சாளர் முனை வர் அதிரடி க.அன்பழ கன், மண்டலத் தலைவர் வெ.செயராமன், மாவட்ட ப.க. தலைவர் ஆசிரியர் ந.காமராசு, மாநில மாணவரணி செயலா ளர் கலைச்செல்வி அமர் சிங் ஆகியோர் உரைக் குப்பின் மாநிலஇளை ஞரணி செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார், உரையில் எதிர்கால இளை ஞர்களை இயக்கத்திற்கு ஈர்க்கும் சக்தி ஆசிரியர் களுக்குதான் உண்டு. மாணவர்களிடையே பாடம் நடத்தும்போது பகுத்தறிவுக் கருத்துக ளையும் கூறி மாணவர் களின் வழியை நல்வழிப் படுத்தி இயக்கத்திற்கு அறிமுகப்படுத்த வேண் டும் என்றார். தொடர்ந்து நிகழ்ச் சிக்கு முன்னிலை வகித்த மாநில ப.க. பொதுச் செயலாளர் வடசேரி வ. இளங்கோவன், உரை யாற்றும் போது, தந்தை பெரியார் காலம் முதல் நம் தமிழர் தலைவர் காலம் வரை இயக்க தலைமை எந்தப் பணியை அறிவித்தாலும், அதை உடனே நடைமுறைப் படுத்தும் மாவட்டம் தஞ்சை மாவட்டம்தான். அப்பெருமையை தக்க வைத்துக்கொண்டு புரட்சிக் கவிஞர் விழாவை நடத்தி எழுச்சியை ஏற் படுத்த வேண்டும் என்று கூறினார்.
வா.நேரு உரை

கூட்டத்திற்கு தலைமை வகித்த மாநில ப.க. தலைவர் முனைவர் வா.நேரு உரையாற்று கையில் திராவிடர் கழ கம் எந்தப்பணியை செய் தாலும் அவற்றுக்கு துணையாக இருந்து நம் அமைப்பு செயல்பட வேண்டும். நாம் நேரடி யாக களப்பணி ஆற்ற முடியவில்லை என்றா லும், விடுதலை, உண்மை, போன்ற நம் இதழ் களுக்கு சந்தா சேர்த்தல், மாதாந்திரக் கூட்டம் நடத்தி நம் தோழர்களின் சிந்தனையை கூர்மைப் படுத்திக் கொள்ள வேண் டும் தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டு தலின்படி, பார்ப்பன மூடப்பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும். நம் இயக்க வெளியீடு களைப் பரப்ப வேண் டும். தமிழரின் கலை, இலக்கியத்தை வளர்க்க மாணவர்களிடையே பேச்சுப்போட்டியும், கட்டுரைப்போட்டியும் நடத்திட வேண்டும். புரட் சிக் கவிஞர் விழாவை நடத்திடவும், விடுதலை இதழ் வளர்ச்சி நிதியை யும் திரட்டி மாநில பகுத் தறிவாளர் கழகத்திற்கு தஞ்சை மாவட்ட பகுத் தறிவாளர் கழகம் உறு துணையாக இருக்க வேண்டும் என கூறினார்.

கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங் களை மாநில மாணவரணி செயலாளர் ம.திரா விட எழில் வாசித்தார். தஞ்சை நகர தி.க. தலைவர் வ.ஸ்டாலின் நன்றி கூறினார். நிகழ்ச் சியில் கலந்துகொண்ட கழகப் பேச்சாளர் முனை வர் அதிரடி அன்பழகன், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் செயல்படும் பெரியார் உயராய்வு மய்யத்தின் துணை இயக்குநராகப் பொறுப்பேற்றதைப் பாராட்டியும், மாநில ப.க. தலைவர் வா.நேரு அவர்கள் முனைவர் பட் டம் பெற்றதைப் பாராட்டியும், இருவருக் கும் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர் சிங் அவர்கள் பட்டாடை போர்த்தி பெருமைப் படுத்தினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பொறியா ளர் ந.நேரு, மாவட்ட மாணவரணி து.தலை வர் இரா.மோகன்தாஸ், திருவையாறு ஒன்றிய அமைப்பாளர் இரா. மதுரகவி, மாவட்ட மக ளிரணி அமைப்பாளர் ச.அஞ்சுகம், யோகி ராச மாணிக்கம், பா.நரேந் திரன், அ.பெரியார்செல் வன், கா.இமயவரம்பன், உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.

தீர்மானங்கள்

1. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர் களின் பிறந்த நாள் விழா வினை மிகச்சிறப்பாகக் கொண்டாடும் வகை யில் வரும் 28.4.2012 அன்று மாலை தஞ்சையில் பட் டிமன்றம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி, தமிழர் கலை, பண்பாட்டு புரட்சி நாளாக கொண்டாடிட தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் விழா நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

2. பகுத்தறிவாளர் கழகத்த்தின் சார்பில் அறிஞர் பெருமக்களை அழைத்து மாதாந்திர சிறப்புக்கூட்டம் நடத்து வது என முடிவு செய் யப்படுகிறது.

3. பகுத்தறிவாளர் கழ கப் பொறுப்பாளர்கள் அனைவரும் விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மார்டன் ரேசன லிஸ்ட் இதழ்களுக்கு சந்தா சேர்ப்பது என முடிவு செய்யப்படுகிறது.

4. தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவினை யொட்டி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டு ரைப்போட்டி, ஓவியப் போட்டி நடத்துவது என முடிவு செய்யப்படு கிறது.

5. ராமன் பாலத்தை தேசிய சின்னமாக அறி விக்கக்கோரி, தமிழக முதல்வர் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு கடிதம் எழுதியதை கண்டிக்கும் வகையில், அதற்கு மறுப்பு தெரிவித்து பிரதமர் அவர்களுக்கு தந்தி அல் லது மெயில் அனுப்ப வேண்டும் என அறிவித்த திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் கட்டளையை ஏற்று நடைமுறைப்படுத்துவது என முடிவுசெய்யப்படு கிறது.

திருவிழாச் செய்திகளும் சமூகமும் (2)

திருவிழாச் செய்திகளும் சமூகமும் (2)

- முனைவர் வா.நேரு, தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்

சரி சாமி என்று சொல்லிக் கும்பிடப் போகிறார்களே? கோவிலுக்கு உடம்பில் போட்டுப்போகும் உடைமைக்குப் பாது காப்பு இருக்கின்றதா? அப்பொழுது மட்டும் எப்படி எல்லாம் வல்ல கடவுள் காணாமல் போய் விடுகிறார்? அடுத்த செய்தி : செங்குன்றம் லட் சுமி அம்மன் கோவில் விழாவில் 9 பெண் களிடம் 80 பவுன் நகை திருட்டு .போலீஸ் அதிகாரியை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டம் (பக்கம் -23) .அட, இது என்னய்யா கொடுமையா இருக்கு - கடவுள் நம்மைக் காப்பாத்தும், அம்மன் நமக்கு அருள் பாலிக்கும்ன்னு பார்ப்பனப் பத்திரிகை எல்லாம் பக்கம் பக்கமா எழுதறா? தங்கம் விக்கிற விலையில , இப்படி 9 பெண்கள் நகையைப் பறிகொடுத்திருக் காங்களே! போலீஸ் அதிகாரியை முற்றுகையிடுவதற்கு முன்னாலே கோவில் அர்ச்சகரை அல்லவா முற்றுகையிட்டிருக்கணும், ஏம்பா எங்கிட்ட இருந்து காணிக்கையெல்லாம் வாங்கிக் கடவுள்கிட்டே கொடுத்தியே , இப்போ நகை காணாமல் போச்சே, கடவுளுக்கும் எங்களுக்கும் இடையிலே நீதானே மிடில் மேன், கடவுள்கிட்ட சொல்லி கண்டு பிடிச்சு சொல்லுன்னு சொல்லியிருக் கணும் , அதை விட்டுட்டு போலீசை முற்றுகையிட்டா, 300 பேர் நிக்கிற இடத்திலே 3000 பேர் நின்னு கன்னத் திலே நீங்க கை போட்டுக்கிட்டு இருக்கிற நேரத்திலே, திருடன் உங்க கழுத்திலே கையப்போட்டு திருடிக்கிட்டு போயிட றான், போலீஸ் என்ன செய்யும் ?

சரி சாமி என்று சொல்லிக் கும்பிடப் போகிறார்களே அவர்களின் உயிருக் காவது பாதுகாப்பு இருக்கிறதா? எல்லாம் வல்ல ? கடவுள் அப்போதும் காணாமல் போய்விடுவார், மாட்டிக்கொண்டவர் களின் உறவினர்கள்தான் அய்யோ பொய்யோவென்று கூக்குரலிடவேண்டும். இதோ அடுத்த செய்தி, சேலம் அருகே பெரிய மாரியம்மன் கோவில் தேரோட் டத்தின்போது உயர் அழுத்த மின் கம்பி உரசியதால் 34 அடி உயர தேர் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 4 சிறுவர்கள் உடல் கருகினர். சேலம் மாவட்டம் பெரிய வீராணத்தில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. . கோவிலின் பங்குனி திருவிழா கடந்த 27ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. எதிர்பாராத விதமாய் மின் கம்பி உரசியதில் இன்வெட்டருக்கும் மின்சாரம் பாய்ந்து வெடித்தது. இதனால் தேரின் உள்ளே அமர்ந்திருந்த வீரா ணத்தை சேர்ந்த பிரகாஷ் (வயது 14), சந்திரன் (10), தனுஷ் (10) மற்றும் 5 வயது சிறுவன் மணிகண்டன் ஆகியோர் இன் வெட்டர் வெடித்ததில் உடல் கருகினர் (பக்கம் 23) மேலே கண்ட செய்தி அனைத்தையும் படித்துப் பாருங்கள். பக்தர்களின் உடை மைக்கு பாதுகாப்பில்லை, பக்தர்களின் உயிருக்கு பாதுகாப்பில்லை, பக்தர்களுக் குள் நடக்கும் குழுச் சண்டைகளால் ஊரில் பதற்றமான சூழ்நிலை, ஒருவரின் விருப்பத்திற்கு மாறாக கட்டப் பஞ்சாயத்துகாரர்களால் கட்டாயமாக வசூலிக்கப்படும் வரி முறை, இது தவிர ஆபாச நடனங்கள், கலாச்சாரச் சீரழி வுகள், இவை அனைத்தையும் சேர்த்த தாகத்தான் இந்த மாத(பங்குனி) திரு விழாக்கள் அமைந்திருக்கின்றன.

பொருளாதார ரீதியாகவும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலே இந்த திருவிழாக்கள் அமைகின்றன. குடிக்காத இளையோரை குடிப்பதற்கு பழக்கும் விதமாகவும் சில ஊர்களில் இவை அமைகின்றன. ஊரில் மூன்று நாள் திருவிழா என்றால் பக்தி கரை புரண்டு ஓடி, இலட்சக்கணக்கில் டாஸ்மார்க் கடைகளில் மது விற்பனையாகின்றது. ஊரில் உள்ள ஒரு மாரியம்மனோ, முத்தாலம்மனோ, காளியம்மனோ எல்லா சாதிக்காரர்களுக்கும் பொதுவாக இல்லாமல் போவதால், சாதிக்கு ஒரு வாரம் வைத்து, சாதிக்கு ஒரு அம்மனை வைத்து மாதம் முழுவதும் ஊரில் ஒலிபெருக்கியும், டாஸ்மார்க் விற்பனை யும் ஓடிக்கொண்டிருக்கிறது.

பல ஊர்களில் ஜாதிச் சண்டையை துவக்கி வைக்கும் விசில்களாக இந்தப் பங்குனி திருவிழாக்கள் அமைகின்றன. ஜாதிகளாய் நம்மை பிரித்து வைத்து, நம்மை படிக்க விடாமல் ஆக்கிய பார்ப்பனர்கள் தங்கள் பத்திரிகைகள் மூலம் இந்த அம்மன் திருவிழாக்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுத்து நமது படிப்பை, நமது பொருளாதாரத்தை, நமது வளர்ச்சியைக் கெடுக்கின்றனர். பல வண்ணங்களில் நோட்டீஸ்களை அச்சடித்து, ஏதோ ஆகாயத்தில் ராக் கெட் ஏவுவதற்கு நேரம் குறிப்பதுபோல, நேர அட்டவணை போட்டு கொடி ஏற்றுதல் என ஆரம்பித்து, காப்பு கட்டுதல், அம்மன் கரகம் எடுத்து வருதல். அம்ம னுடன் முளைப்பாரி, ஆயிரம் கண்பானை, காவடி எடுத்து வருதல். பெண்கள் கோடு கீரி வருதல், ஆண்கள் உருண்டு கொடுத்து வருதல், தீச்சட்டி எடுத்து வருதல், பறவைக் காவடி தீச்சட்டியுடன் வருதல் என மிகப் பெரிய பட்டியலை ஒவ்வொரு கோவில் விழாக் கமிட்டி யாரும் அச்சடித்து கொடுத்து வசூல் செய்கிறார்கள். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பல ஊர்களில் தீச்சட்டியை கையில் ஏந்தி, இது கடவுள் செயல் இல்லை என்பதனைக் காட்டி யிருக்கிறார், திராவிடர் கழகத் தோழர் களும் தோழியர்களும் பல்வேறு ஊர்களில் மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலங்களில் கைகளில் தீச்சட்டியை ஏந்தி, தீச்சட்டி இங்கே, மாரியாத்தா எங்கே? எனக் குரல் கொடுக்கின்றார்கள், ஒரு ஆத் தாளும் இதோ நான் இருக்கிறேன் என வரக்காணோம். கடவுள் பேர் சொல்லி பக்தர்கள் தேர் இழுத்தால், கடவுள் இல்லை எனச் சொல்லி திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் கார் இழுக்கிறார்கள், எந்த கடவுளும் காரை நகர விடாமல் நிப்பாட்டக் காணோம். ஆனால், நாம் செயல் வடிவத்தில் காட்டும் பகுத்தறிவு செயல்பாடுகளை, மூட நம்பிக்கை ஒழிப்பு செயல் விளக் கங்களை பத்திரிகைகளும், ஊடகங்களும் பெரிய அளவில் வெளியிடுவதில்லை. விளைவு மூடநம்பிக்கை வைரஸ் கிருமிகள் பன்றிக்காய்ச்சலை விட வேகமாகப் பரவு கின்றன. சிலர் இது மக்களின் கொண் டாட்டம், கடவுள் பக்தி இல்லை என் கிறார்கள். மக்கள் நிலை கொண்டாடும் நிலையிலா இருக்கிறது. நாளில் பாதி நேரம் மின்சாரம் இல்லை, அடுப்பெரிக்க எரிவாயு இல்லை, பேருந்து கட்டண உயர்வு, மின் கட்டணம் உயர்வு , பால் விலை உயர்வு என மக்கள் விழி பிதுங்கி நிற்கும் நிலை. இந்த நிலையில் கட்டாயமாக நடத்தப்படும் செயற்கை கொண்டாட்டங்கள் மக்கள் வாழ்க்கையில் எந்த நல்ல விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லை, மாறாக பல குடும்பங்களில் இந்த பண்டிகைக்காக கடன் வாங்கி செலவழித்துவிட்டு பின்பு வட்டி கட்டி திணறும் நிலைதான் உள்ளது. இந்த திருவிழாக்களைப் புறக்கணிப்போம். சாதாரண மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி புறக்கணிக்க வைப்போம்.நன்றி - விடுதலை 11-4-12

Tuesday, 10 April 2012

திருவிழாச் செய்திகளும் சமூகமும்

திருவிழாச் செய்திகளும் சமூகமும்

- முனைவர் வா.நேரு, தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்

சென்ற மாதம் +2 மாணவர்களுக்கு தேர்வு ஆரம்பித்து சில நாட்களுக்கு முன் தான் முடிந்திருக்கிறது. 10-ஆம் வகுப்பு தேர்வுகள் ஆரம்பித்து இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இனிமேல்தான் முழு ஆண்டுத் தேர்வுகள் நடக்க இருக் கின்றன. படிக்கும் மாணவ மாணவி களைப் பாதிக்கும் வகையிலே ஒலி பெருக்கிகள் ஊர் தோறும் அலறிக் கொண்டிருக்கின்றன. மாதந்தோறும் பண்டிகைகளும், திரு விழாக்களும் தமிழர்களின் மானத்தையும், பணத்தையும் அழித்தாலும் இந்த்ப் பங்குனியில் வரும் உத்திரமும் பொங்கலும் ஆங்கிலத்தில் கொஞ்சம் ஓவரா இல்லே என்று சொல்லுவார்களே, அதனைப் போலவே கொஞ்சம் ஓவராகவே தமிழர் களின் மானத்தையும், உழைப்பினால் கிடைத்த பொருளையும் வாங்கும் திரு விழாக்களாக இருக்கின்றன. காளி யம்மன், மாரியம்மன், முத்தாலம்மன், இப்படி பல்வேறு பெயர்களில், அதனைப் போலவே பங்குனி உத்திரம், கொடை, பங்குனிப் பொங்கல் என்று பங்குனி மாதத்தில் வரும் செவ்வாய், புதன், வியாழன், சில ஊர்களில் வெள்ளி தொடங்கி என்று இந்தத் திருவிழாக்கள் நடக்கின்றன. நம்மைப் போன்ற சமுதாய நலன் இயக்கங்கள் ஆயிரம் முறை அனுமதி வாங்கியதை உறுதி படுத்திக் கொண்டு பின்பு 10 மணிக்குள் முடிக்க வேண்டு மென்றால் நமது பேச்சாளர்களிடம் கையைக் காட்டி, கடிகாரத்தைக் காட்டி, மைக் செட்டுக்காரரைக் காட்டி எவ்வளவு முக்கியமான பிரச்சனையாக இருந் தாலும், சுருங்கச்சொல்லி விளங்க வையுங்கள் என்று வேண்டுகோள் வைத்து கூட்டத்தை முடிக்கின்றோம். ஆனால் திருவிழா என்று சொல்லி நீங்கள் நடத் தினால்,10 மணிக்குள்ளா, தேவையே இல்லை, விடிய விடிய நீங்கள் நடத்தலாம்,. நடக்கும் பாதையை மறிக்கலாம், நோயாளி படுத்திருக்கும் வீட்டிற்கு நேரே மைக்கைக் கட்டி விடிய விடிய கத்த விடலாம், ஆபாசக் குத்தாட்டத்தை ஏற்பாடு செய்யலாம், நடு இரவில் சாமி ஊர்வலம் என்று சொல்லி காது வெடிக்கும் அளவுக்கு பட்டாசுகளைக் கொளுத்தலாம் ஏனென்றால் இது பக்தி சம்பந்தப்பட்ட விசயம், யாரும் தடுக்கக் கூடாது, போலீஸ் வரலாம், ஆனால் கேள்வி கேட்கக்கூடாது, எந்த கண்டிசனும் போடக்கூடாது.இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை. ஒரு கல்லை அம்மன் என்று சொல்லி தூக்கி வைத்துக்கொண்டு அடிக்கும் கூத்துகள் பார்க்க சகிக்கவில்லை நம்மால். இவ்வாறு நான் சொன்னவுடன் `பக்த கோடிகள் சிலர் வருத்தப்படக்கூடும். சனிக்கிழமை (7.4.2012) தினத்தந்தி (மதுரை) நாளிதழில் வந்த செய்திகள் சிலவற்றைத் துணைக்கு வைத்துக்கொள் கின்றேன். முதல் செய்தி கெங்குவார்பட்டி கோவில் திருவிழாவில் போலீஸ் இன்ஸ் பெக்டர் மீது தாக்குதல் ( பக்கம் 8).


தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியில் முத்தாலம் மன் கோவில் உள்ளது, இக்கோவிலில் பங்குனித் திருவிழா நடைபெற்று வரு கிறது. மஞ்சள் நீராட்டத்தின்போது ஒரு சிலர் தப்பு மேளம் அடித்தபடி வந்தனர். உடனே அந்தப்பிரிவை சேர்ந்த மற்ற வர்கள் கரகம் எடுத்து வருபவர்கள் மட் டுமே ஆடிவர வேண்டும் என எச்சரித் தனர். அதனால் அந்தப்பிரிவினருக்கு இடையில் மோதல் ஏற்பட்டது, இதனை அடுத்து காவலர் அங்கு விரைந்து வந்து தகராறில் ஈடுபட்டவர்களைத் தடியடி நடத்திக் கலைத்தனர். அப்போது கூட்டத் தில் நின்ற சிலர் கற்களை வீசினார்கள் . அதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிய ராஜன் ஆகியோர் தலை மற்றும் கைகளில் கற்கள் தாக்கி காயம் அடைந்தனர் இதன் காரணமாக கெங்குவார்பட்டியில் பதற்ற மான சூழ்நிலை நிலவுகிறது முத்தாலம் மன் திருவிழாவால் ஊரில் கோஷ்டி கலாட்டா, மண்டை உடைப்பு , கைது எல்லாம் யார் உபயம் எல்லாம் அந்த ஆத்தா முத்தாலம்மன் உபயம்தான் ஒரு பகுதியில் திருவிழா நடத்துகின்றார்கள் என்றால் காரியக்காரர்கள் சிலர் களத் தில் - பண வசூலில் இறங்கிவிடுகின் றார்கள். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1000 வரி. இது சட்டம் போல, கட்டாயம் கட்ட வேண்டும், ஆயரமாயிரமா வசூலித்து என்ன நிகழ்ச்சி? குடிக்க நல்ல தண்ணிர் இல்லை குளம் வெட்டப் போகின் றார்களா? ஊரில் உள்ள பெரிசுகள் பலருக்கு குடிக்க கஞ்சி ஊற்ற நாதி யில்லை, ஊர்ப் பொதுவிலிருந்து ஊற்றப் போகின்றார்களா? என்னதான் பண் றாங்க பணத்தை வசூல் பண்ணி? சரி ஒருத்தருக்கும் கொடுக்க விருப்பமில்லை, ஓஞ்சாமியுமாச்சு, ஓந் திருவிழாவுமாச்சு, நான் ஆட்டைக்கு வரலைன்னு சொல்லி வரியைக் கொடுக்கவில்லையென்றால் என்ன செய்வார்கள் ?

இதோ அடுத்த செய்தி புதுக் கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா கரையான்பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது எங்கள் கிராமத்தில் பத்திர காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 13ஆம் தேதி திருவிழா நடக்க உள்ளது. இதையொட்டி கிராமிய ஆடல் ,பாடல் பல்சுவை நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச பாலியல் வக்கிர நடனத்தை நடத்த விழா கமிட்டியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கு வரி கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர், இதற்கு நாங்கள் மறுத் தோம். இதனால் பழனியாண்டி மகன் சின்னாண்டி தலைமையில் கட்டப் பஞ்சாயத்துக்கூடி என்னையும், எனது தந்தை பழனிக்கண்ணு , எனது உறவினர் ராஜா ஆகியோரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகவும் , எங்களுடன் ஊரில் உள்ள வேறு யாரும் பேசக்கூடாது என்றும் உத்தரவிட்டனர். (பக்கம் 26). வரி கொடுக்கணும், வரி கொடுக்கலைன்னா ஊரை விட்டு ஒதுக்கி வைப்பாங்களாம்.
தொடரும்...
நன்றி -விடுதலை- 10-04-2012