Friday, 26 December 2025

ஒரு பின்னோட்டமும் நினைவுகளும்

 ஒரு பின்னோட்டமும் நினைவுகளும்

"நண்பர் நேரு அவர்களின் புதல்வியின் ஆழினி கதை படித்தேன்.முதலில் நேர்த்தியாக அச்சடித்தவர்களுக்கு நன்றி.சில புத்தகங்களைப் படிக்கத் தெளிவாக இல்லாமல் H,2H பென்சிலில் எழுதியது போல இருக்கும். எல்லாம் கணினி எவ்வளவு சுருக்க முடியுமோ அவ்வளவு சுருக்கி அச்சாகியிருக்கும்.ஆனால் இந்தப் புத்தகம் B,2B. பென்சிலால் எழுதியது போலத் தெளிவாக எவ்வளவு வயதானவர்களும் படிக்க முடியும். கதை சொல்லும் நேர்த்தி ஆசிரியரின் பெயருக்குப் பொருத்தமாக உள்ளது.சொ.நே.அறிவுமதிக்கு வாழ்த்துக்கள்.சிறு வயதில் படித்த முத்து காமிக்ஸ், கன்னித்தீவுவிட்டலாச்சாரியின் மாயக்கதைகளை நவீனப்படுத்தியதைப்போல உள்ளது.கதையின் ஆரம்பத்திலேயே BSNL ன் தடைபடும் நெட் ஒர்க்கையும் நகைச்சுவையாக சொல்கின்றார். இந்தக் கதையை ஐயா ஞானசம்பந்தம், பார்த்திபன்,வடிவேல்,ஊர்வசி,கோவைசரளா ஆகியோரை வைத்து சினிமாவாக எடுக்கலாம்.மேலும் மேலும் நல்ல கதைகளை எழுத வாழ்த்துகிறேன்."

முக நூலில் திரு முனியாண்டி சுந்தரம் அவர்கள்...

திரு சுந்தரம் சார் அவர்கள் என்னோடு BSNL நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றியவர். நிறையப் புத்தகங்களை அப்போதே வாசிப்பார். இப்போது ஓய்வு பெற்றபின்பு இன்னும் நிறைய வாசிக்கிறார் என்று நினைக்கிறேன்.முதலில் இந்தப் புத்தகத்தை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இருந்து எடுத்து வந்ததை ,முக நூலில் பதிவிட்டிருந்தார். நன்றியும் மகிழ்ச்சியும் சார்.என் மகள் எழுதிய புத்தகத்தை வாசித்துப் பாராட்டி எழுதியது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.ஆழினி ஒரு மிகை புனைவு நாவல்.நகைச்சுவை நாவல்.சிங்கப்பூரைச் சார்ந்த பேரா லெட்சுமி அவர்கள் நீண்ட வருடங்களுக்குப் பின்பு ஒரு நாவலைப் படித்து அவ்வளவு சிரிப்பு சிரித்தேன் என்று குறிப்பிட்டிருந்தார்.அவரும் அணிந்துரை கொடுத்திருக்கிறார். 

அய்யா கலைமாமணி பேரா முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் எனது முனைவர் பட்டத்திற்கான நெறியாளர். இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டுப் பாராட்டி மகிழ்ந்து,அணிந்துரை அளித்தார்.

திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் இந்தப்புத்தகத்தை ஒரு தயக்கத்துடன் கொடுத்தேன்.மிகப் புனைவு நாவல். இதற்கு என்ன சொல்வாரோ என்று..ஆனால் அய்யா ஆசிரியர் அவர்கள் படித்துவிட்டு , அறிவுமதியையும் அழைத்து மனமாரப் பாராட்டியதோடு,எழுதுவது அற்புதமாக வருகிறது,விட்டுவிடாதே,தொடர்ந்து எழுது என்றார் என் மகளிடம்.

வடிவமைப்பை அழகாக அமைத்து, சிறப்பாக எல்லோரும் பாராட்டும்வண்ணம் அச்சடித்துக்கொடுத்த எழிலினி பதிப்பகத்திற்கு(எமரால்டு பதிப்பகம்) பாராட்டும் நன்றியும்.












2 comments:

  1. டாக்டர் கோ.ஒளிவண்ணன்26 December 2025 at 21:33

    அண்ணே மற்றவர்களுக்கு எல்லாம் கிடைக்காத வாய்ப்பு புத்தகம் உருவாகுவதற்கு முன்பே நான் படித்து இரசித்தவன்.

    மீண்டும் மீண்டும் அந்த நூலைப் பற்றி மற்றவர்கள் சொல்லும்போது கூடுதலாக பெருமையும் பெருமிதமும் கொள்கிறோம். அவருடைய எழுத்து இன்னும் மென்மேலும் பல உயரங்களுக்குச் செல்ல வாழ்த்து

    ReplyDelete
  2. மகிழ்ச்சி.நன்றிங்க அண்ணே

    ReplyDelete