Tuesday, 28 August 2012

மதத்தின் அளவு மட்டுமே


ஆயிரமாயிரம்
சடங்குகள்
ஆயிரமாயிரம்
நடைமுறைகள்
அத்தனையும்
மனிதர்களை
ஒன்று சேராமல்
தடுக்கும் கோடுகளாய்

கயிற்றை கட்டி
கிணற்றுக்குள்
இறக்கிவிடப்படும்
தவளை போல
மனிதன்
மதக் கிணற்றுக்குள்
இறக்கிவிடப்படுகிறான்
சடங்குகள் என்னும்
கயிறால்
குழந்தைப் பருவம் முதல்

கிணற்றுக்குள் இறங்கி
நீந்தவும் முடியாமல்
கிணற்றுக்கு மேலேவந்து
குதிக்கவும் இயலாமல்
கயிற்றின் அளவு மட்டுமே
வாழும் தவளைபோல்
மதத்தின் அளவு மட்டுமே
சிந்திக்கவும்
செயல்படவும்
இயலும் மனிதர்கள்
உலகமாய்
நாம் வாழும் உலகம்

நன்றி :  http://eluthu.com
இந்தக் கவிதைக்கு கருத்துரைத்தோர்
உங்கள் படைப்பு மதத்தின் அளவு மட்டுமே இல் , எழுத்து நண்பர் agan ஒரு கருத்து பதிந்துள்ளார்.
கருத்து: மதம் மக்களுக்கு அபின்....... 
உங்கள் படைப்பு மதத்தின் அளவு மட்டுமே இல் , எழுத்து நண்பர் நிலாசூரியன் ஒரு கருத்து பதிந்துள்ளார்.
கருத்து: அருமையான பதிவு... மனிதன் என்ற ஒரு மதம் மட்டுமே போதும் என்பதுதான் எனது கொள்கை. 
உங்கள் படைப்பு மதத்தின் அளவு மட்டுமே இல் , எழுத்து நண்பர் பரிதி.முத்துராசன் ஒரு கருத்து பதிந்துள்ளார்.
கருத்து: ஆயிரமாயிரம் சடங்குகள் ஆயிரமாயிரம் நடைமுறைகள் அத்தனையும் மனிதர்களை ஒன்று சேராமல் தடுக்கும் கோடுகளாய் ...அருமை 
உங்கள் படைப்பு மதத்தின் அளவு மட்டுமே இல் , எழுத்து நண்பர் KS.Kalai ஒரு கருத்து பதிந்துள்ளார்.
கருத்து: அன்பு தான் மதம், அன்பு தான் மார்க்கம்... மூட நபிக்கைகளை ஒதுக்கி மதத்தை பார்க்க சமூகம் தொடங்கும் போது மதங்கள் கூறும் மார்க்கம் தெளிவாகத் தெரியும் மக்களுக்கு. மதங்கள் தப்பானதை போதிக்கவில்லை...மதத்தின் பெயரைக் கூறி மக்கள் தான் தப்பான போதனைகளை செய்கிறார்கள் ! இது மதத்தின் தப்பா? மனிதர்களின் தப்பா? அன்புடன் கே.எஸ்.கலை 




No comments:

Post a Comment