அண்மையில் படித்த புத்தகம் : மிட்டாய் கதைகள் -கலீல் கிப்ரான்
நூலின் தலைப்பு : மிட்டாய் கதைகள்
ஆசிரியர் : கலீல் கிப்ரான்
தமிழில் : என்.சொக்கன்
பதிப்பகம் : கிழக்கு
முதல் பதிப்பு : செப்டம்பர் 2005
பக்கங்கள் : 94, விலை ரூ 40
" கிப்ரானின் கவிதைகளையும் , சின்னச்சின்ன பொன்மொழிகளையும் ஆங்காங்கே வாசித்திருக்கிறேன். பளிச்சென்ற கருத்துக்களை எளிய மொழியில் சொல்லும் அவரது பாணி, நேரடியானது. அதே சமயம் விஷ்ய கனத்தை சமரசம் செய்து கொள்ளாதது. " என்று முன்னுரையில் சொல்லும் இந்த் நூலின் மொழி பெயர்ப்பாளர் , என். சொக்கன் கதை சொல்லியாக கிப்ரான் தன்னைக் கவர்ந்த தன்மையை விவரித்திருக்கிறார். கிப்ரானின் பல நூல்களிலிருந்து இவற்றைத் தேடித் தொகுத்ததாக குறிப்பிட்டிருக்கின்றார். உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய பணி. ஆங்காங்கே பரவிக் கிடந்த முத்துக்களைத் தொகுத்து நல்ல ஆபரணமாய் இந்த நூலைக் கொடுத்திருக்கின்றார் என்.சொக்கன் எனலாம்.
மொத்தம் 50 கதைகள். சின்னச்சின்ன கதைகள் .ஆனால் சொல்லும் கருத்து பல நாள் சிந்தனையை அடைத்துக்கொள்ளும் அளவிற்கு வலிமையாய். சில எடுத்துக்காட்டுக்கள் மட்டும் இங்கு.
கதை 17. தலைப்பு : கைதிகள் . " என் அப்பாவின் தோட்டத்தில் இரண்டு கூண்டுகள் இருந்தன. ஒரு கூண்டில் , அப்பாவின் அடிமைகள் பிடித்து வந்த ஒரு சிங்கம் அடைக்கப்பட்டிருந்தது. இன்னொரு கூண்டில் , ஒரு சிறு குருவி இருந்தது. தினந்தோறும் பொழுது விடியும்போது, இந்தக் குருவி , வலிமையான அந்தச்சிங்கத்தை கை சொடுக்கி அழைத்து, ' என் சக கைதியே, குட்மார்னிங்' என்று சொல்லும் "
கதை 49 : தலைப்பு : தேவதைகளும் சாத்தான்களும். " தேவதைகளும் சாத்தான்களும் என்னைப் பார்ப்பதற்கு வருகின்றன. ஆனால், அவற்றை விரட்டுவதற்கு நான் ஒரு வழி கண்டு பிடித்துவிட்டேன்.
தேவதைகள் என்னைத் தேடி வந்தால், பழைய பிரார்த்தனைப் பாடல் ஒன்றைப் பாடுகிறேன். அவை சலிப்படைந்து , வெளியேறி விடுகின்றன.
சாத்தான்கள் என்னைப் பார்ப்பதற்கு வந்தால், பழைய பாவம் ஒன்றைச்செய்கிறேன். அவையும் சலிப்படைந்து ஓடிப்போய்விடுகின்றன. "
நிறையக் கதைகள், மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கின்றன. படித்துப் பார்ப்பதற்கு மட்டுமல்ல, மேடைகளில் கதை சொல்ல, தத்துவம் சொல்லப் பேச்சாளர்களுக்கு பயன்படும் நூல் . மற்றவர்கள் படித்து, ரசிக்கலாம், சில கதைகளைப் படித்து விட்டு சிரிக்கலாம்.

என்னுடைய மொழிபெயர்ப்பு நூல்பற்றித் தங்களுடைய அறிமுகம் + விமர்சனத்துக்கு நன்றி ஐயா
ReplyDeleteஎன். சொக்கன்,
பெங்களூரு.
This comment has been removed by the author.
ReplyDeleteநூலின் எழுத்தாளரே வந்து , எனது வலைத்தளத்தைப் பார்த்து நன்றி கூறியது மிகப்பெரிய அங்கீகாரம் எனக் கருதுகின்றேன். தொடர்ந்து இயங்கும் , தங்கள் எழுத்துப் பணி மேலும் , மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடனும் , தோழமையுடனும்
வா. நேரு.