நிகழ்வும் நினைப்பும்(22) : மழையும் வருண பூசையும்
நேற்று 30.4.2014, மதுரையில் நல்ல மழை. சரியான நேரத்தில், எப்போது மழை பெய்யும் என்று மக்கள் ஆர்வமாக இருந்த நேரத்தில் பெய்த மழை. மகிழ்ச்சியாக இருந்தது. இடியும், மின்னலும், காற்றும் என கோடை மழைக்கே உரித்தான பக்க வாத்தியங்களோடு கொட்டித் தீர்த்தது மழை. ஒரு தமிழ் பத்திரிக்கையில் ' வருண பூசை ' செய்தலால் மழை என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டு இருந்தார்கள். என் மகள் அறிவு மதி , 'அப்பா 5 மாதமாக மழை இல்லை, கடந்த 5 மாதமா கடவுளுக்கு எதுவும் பூசை செய்யாமலா இருந்தார்கள் ? இப்படி போயி , அறிவுக்கு பொருந்தாமல் பத்திரிக்கையில் செய்தி போட்டிருக்கின்றார்களே ? " என்றாள். அப்படித்தான் போடுவார்கள் என்றேன் நான் அவளிடம் .
200, 300 ஆண்டுகளுக்கு முன்னால் இப்படி செய்தி போட்டிருந்தால் ,ஏதோ தெரியாமல் போட்டிருக்கின்றார்கள். மழை எப்படி பெய்கின்றது என்று தெரியவில்லை. அதற்கான அறிவியல் காரணங்கள் புர்யவில்லை என்று ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இன்றைக்கு பத்திரிக்கைகள் இப்படி செய்தி போடுகின்றன, தமிழக அரசின் இந்து சமய்அறநிலையத்துறை வருண பகவான் பூசை செய்யச்சொல்கின்றது என்று சொன்னால், நமது மக்களை எவ்வளவு ஏமாளிகளாக ,கோமாளிகளாக நினைக்கின்றார்கள் இவர்கள்
ஒரு மாதத்திற்கு முன்னால், பால் விற்கும் பெண்மணி சொல்லிக்கொண்டிருந்தார் பக்கத்தில் இருக்கும் பெண்மணியிடம். "என்னங்க, ரிசர்வ் லைன் மாரியாத்தாளுக்கு, கூழ் ஊத்தி, கும்பிட்டும் மழையைக் காணாமே" என்று . அவர் படிக்காத பெண்மணி , ஏதோ மாரியாத்தாளுக்கு கூழ் ஊத்துறதுக்கும், மழை பெயவதற்கும் தொடர்பு உண்டு என்று நம்புகிறார் என எண்ணலாம்.
பக்கத்தில் இருக்கும் கேரளாவில் நல்ல மழை பெய்கின்றது , மழைக்காலங்களில். பெரும்பாலும் அவர்களின் வீடுகளைப் பார்த்தால், வீட்டிற்குள் மரம் வளர்ப்பதற்குப் பதிலாக, மரங்களுக்குள் வீடு கட்டுகின்றார்கள். ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் 30, 40 மரங்கள் இருக்கின்றன, தமிழகத்தில் ,கிராமப்புறங்களில் கூடவீடுகளுக்குள்ளோ, வீட்டைச்சுற்றியோ மரங்கள் இல்லை. மரம் வளர்ப்பதற்கான மன்நிலை மக்கள் மனதில் இல்லை. ஊர் ஊருக்கு, பங்குனி உத்திரமும், பங்குனிப்பொங்கலும் கொண்டாடி, மாரியாத்தாளுக்கும் , காளியாத்தாளுக்கும் இலட்சக்கணக்கில் செலவு செய்து கூழ் ஊற்றும் இந்த கோமாளிகளுக்கு மரத்திற்கும் மழைக்குமான தொடர்பு தெரியவில்லை. பெரும்பாலான கண்மாய்கள் அழிக்கப்பட்டு , பிளாட்டுகளாக மாறிவிட்டன., இருக்கும் கண்மாய்கள் தூர் வாரப்படவில்லை. சின்ன சின்ன நீர்த்தேக்கங்கள் இல்லை. மழை நீர் சேகரிப்பு ஏட்டளவில் இருக்கிறது. இப்போது நடைமுறையில் இல்லை. ஊர்த்திருவிழாக்கள் என்னும் பெயரில் இலட்சக்கணக்கில் செலவு செய்து வான வேடிக்கைகள் போடுகிறார்கள் . போட்டி போட்டிக்கொண்டு போடப்படும் இந்த வெடிகள் , சுற்றுப்புற சூழலுக்கு கேடு என்பதையோ, மழை வராமல் போவதற்கு கார்பன் டை ஆக்சைடு கூடுவதும் ஒரு காரணம் என்பதையோ இந்த மக்களுக்கு தெரிவிப்பதில்லை. டேய், மழை வருவதற்கும் , மழை வராமல் போவதற்கும் கட்வுள்தான் காரணம் என்று ஒற்றை வரியில் முடித்து விடுகிறார்களே, இது கொடுமை இல்லையா ? மூடத்தனம் இல்லையா? முட்டாள்தனம் இல்லையா?
சின்னப்பிள்ளைகளாக நாங்கள் இருந்த காலத்தில், கிராமத்தில் மழை பெய்கிற போது, சிலர் மழையை கடவுள் ஒன்னுக்கு அடிக்கிறார் என்பார்கள், அவர் ஒன்னுக்கு அடிக்க மறந்து போனால் என்ன ஆகும் என்பார்கள் . அப்படிப்பட்ட மன்நிலையில் பத்திரிக்கைகளும், அரசாங்கமும் இருந்தால் நாம் எங்கே போய் இந்தக் கொடுமையை சொல்வது . எல்லாவற்றிற்கும் கடவுளோடு கனெக்சன் கொடுத்து விடுகின்றார்கள். கடவுள் சிலை கோவிலிலேயே காணாமல் போகிறதே, அப்போ உங்க கடவுள் எங்கே போயிருந்தார், ஏதாவது லீவு போட்டுட்டு நம்மாளுக வீடடைப் பூட்டி போன நேரத்திலே கொள்ளை போவது மாதிரி, உங்க கடவுள் டூர் போயிருந்தாரா ? என்று கேட்டால் நம்மை முறைக்கின்றார்கள்.

5 மாதமாக மழைவராத போது பூஜை செய்யவில்லையா ? என்று அறிவுமதி கேட்டதை என் மகளிடம் சொன்னேன். ஒரு வேளை மழைவர வேண்டாமென்று அப்போது கும்பிட்டோம் என்று சொல்வானுக என்றார்.
ReplyDeleteஎப்படி வேண்டுமென்றாலும் மாற்றுவார்கள் என்பதுதானே உண்மை. நன்றி .
Deleteமழையை பெருக்க குளங்களையும் ஏரிகளையும் பெருக்குவோம் உழுது உலகை வாழவைப்போம்
ReplyDeleteநன்றி செந்தில். அப்படி பத்திரிக்கைகளில் எழுதமாட்டேங்கறாங்களே என்பதுதான் நமது கவலை. இந்த வருண பூசை பற்றி 'விடுதலை'யும், தீக்கதிரும் மட்டும்தான் கண்டித்து எழுதியிருக்கின்றார்கள். வெகுஜனப் பத்திரிக்கையெல்லாம் கப், சிப்.
ReplyDeleteவணக்கம் நண்பர்களே
ReplyDeleteஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் அழகை அதிகபடுத்த கொள்ளுங்கள் உடனே என்னுடைய இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்