Thursday, 1 January 2015

உலகத்தில் விடியலுக்கான வெளிச்சங்கள்.....

ஆங்கிலப் புத்தாண்டு
பிறந்திருக்கிறது !
புதிய வருட வரவு
எப்போதும் நம் வாழ்வில்
தொலைந்து போன
ஒரு வயதை
நினைவுபடுத்துகிறது !

இருட்டுக்களால் தொலைந்த
வருடங்களைவிட
வெளிச்சங்களாய் வர
இருக்கும் வருடங்கள்
உற்சாகம் அளிக்கிறது !

கடவுளை மறுப்பவர்கள்
எண்ணிக்கை உலகெங்கும்
ஆண்டுதோறும்
உயர்ந்து கொண்டேயிருக்கிறது !
உலகத்தில்
விடியலுக்கான வெளிச்சங்கள்
தெரிகின்றன !

மத நஞ்சை தங்கள்
கழுத்துக்களில்
தொங்கவிட்டிருந்தவர்கள்
தாங்களாகவே அறுத்து
எறிய
அறிவியல் வழிவகுத்திருக்கிறது

பச்சிளங்குழ்ந்தைகள்
படிக்கும் வேளையில்
குண்டுகள் துளைத்ததும்
குருதிகள் கொட்டிட
குழ்ந்தைகள் துடித்ததும்
அவனவன் கடவுளை
அவனவன் காப்பாற்றுகிறேன்
என ஆயுதங்களைத் தூக்கலும்
அட்டூழியம் செய்தலும்
மனச்சாட்சியுள்ள
மனிதர்களை உலுக்கியிருக்கின்றன

எல்லாம் வல்ல கடவுள்
இவ்வளவு கையாலாகாதவனா ?
எனும் கேள்வியை
எல்லா மதத்தில் பிறந்த
இளைஞர்களும்
தங்கள் மதத்து குருமார்களிடம்
இயல்பாகக் கேட்கிறார்கள் !


உலகப்பெருவெடிப்பால்
உயிர்கள் உண்டான விதம்
தெள்ளத்தெளிவாய்
விஞ்ஞானிகளால் விளக்கப்பட
இறைவன் படைத்ததாய்
பசப்பியவர்கள்
ஏதேதோ சொல்லி மழுப்புகிறார்கள் !


மத இருள் மேகங்கள்
மையம் கொண்டிருந்த
உலகில்
உண்மை வெண்மேகங்கள்
உலவத் தொடங்கியுள்ளன !
மனித நேயம் என்னும்
ம்ழை பொழிய வழிவகுக்கும்
வெண்மேகங்களை வரவேற்போம் !
உற்சாகமாய் புத்தாண்டை
 வரவேற்போம் ! வரவேற்போம் !

                                                                  -வா. நேரு - 01.01.2015




4 comments:

  1. நன்று நன்று நன்று...
    புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா, வருகைக்கும் வாழ்த்திற்கும், பாராட்டிற்கும்.

      Delete
  2. புத்தாண்டு வாழ்த்துகள் அய்யா

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      Delete