Monday, 19 January 2015

திருக்குறளை கையில் வைத்து......

திருக்குறளின் பெருமை
சொல்லும் அறிஞர்கள்
பங்கேற்ற கூட்டத்தில
பங்கு பெறும்
வாய்ப்புக் கிட்டியது !

அருகில் வந்த ஒருவர்
இன்னொரு ஆளைச்  சுட்டினார்
அண்டை மாநிலத்தவர்
அளவு கடந்த பற்று
அவருக்கு குறளின்
மேல் என்றார்

தாய்மொழி அவருக்குத்
தமிழ் அல்ல
தமிழ் நாட்டில்
வேலை பார்த்ததால்
தமிழ் அறிவார்
அளவற்ற ஆர்வம்
திருக்குறளின் மேல்
சில ஆண்டுகளாய்
என்றார்

உள்ளப்டியே மகிழ்ச்சி
அடைந்தேன்
நானாகச்சென்று வலிய
வாழ்த்துத் தெரிவித்தேன்
வள்ளுவத்தைப் பற்றி
அவர் எழுதிய நூல் ஒன்று
அவர் கையில் இருந்தது
வாங்கினேன் படித்தேன்

பாம்பை மிதித்ததுபோல்
திடுக்குண்டேன்
யார் நீ என்றேன்
பகக்த்து மாநிலத்தில்
இருந்து அனுப்பப்பட்ட
இந்து அடிப்படைவாதியோ
என்றேன்
இல்லை இல்லை என்றான்

அய்நூறுக்கும் மேற்பட்ட
திருக்குறளுக்கு புது உரை
எழுதவேண்டும்
அதற்கு ஒரு கருத்தரங்கம்
நடத்தல் வேண்டும் என்றான்
ஏன் எழுதிய உரைகளுக்கு
எல்லாம் என்ன குறை என்றேன்

ஆன்மிகம்தான் குறளுக்கு
அடிப்படை
வீடு பேறு அடைவதுதான்
குறளைப் படிப்பதன் நோக்கம்
என்றான்
தருண்விஜய்யின் தயவால்
வட  நாட்டுப்பகுதிகளுக்கு
குறள் போவதற்குள்
அனைத்தையும் மாற்றி
வீடு பேறு பெற
வழிகாட்டும்  நூல் இது
எனபதனை நிருபித்தல்
வேண்டும் என்றான்
அதற்கான உரைதனை
எழுதல் வேண்டும் என்றான்

தனி ஒருவன் அல்ல
இவன் !
காந்தியைக் கொல்ல
அனுப்பப்பட்ட ஆள்போல
ஒரு காரியத்திற்காக
அனுப்பப்பட்ட ஆள்
என்றுணர்ந்தேன் !

ஆபத்து வந்தது
தமிழர்களே !
முகமதியரும்
கிறித்துவரும்
சைவரும் சமணரும்
புத்த மதத்தினர்
நாத்திகர் என
அனைவரும் விரும்பும்
குறளை
வேதத்தின்
சாரமென சாற்றித்திரிந்த
ஒரு கூட்டம்
மிகத் தந்திரமாய்
உலக்ப்பொதுமறையை
தங்கள் மதத்து
குப்பிக்குள் அடைக்க
சூழ்ச்சி  செய்கின்றார்!


எப்பொருள் யார்யார்
வாய்க்கேட்பினும்
எவன் சொன்னான்
இத்தனை நாட்களாய்
சொல்லாமல் இன்று
எதற்குச்சொன்னான்
என்பதையும் இணைத்துப்
பார்ப்பீர் !
அயல் மொழியான்
குறளை விரும்புகிறேன்
என்று சொன்னால்
அவனது அடிப்படை
என்ன என ஆராய்வீர் !

பிறப்பில் குற்றம்
இருந்தால் ஒழிய
வேம்பு இனிக்காது
என்றார் பெரியார் !
மதம் மறந்து
திருக்குறள் எனில்
ஒன்றிணையும்
தமிழரைத் தன்வயப்படுத்த
தந்திரம் செய்கிறான் !
குண்டக்க மண்டக்க
குறளுக்கு உரை எழுதி
தன்னிடம் காட்டிய
தறுதலையின்
அனைத்துப் பிரதிகளையும்
பணம்  கொடுத்து வாங்கி
அத்தனையையும்
தீயிக்கு இரையிட்ட
வள்ளல்  பாண்டித்துரை போல
செய்ய வேண்டிய நேரம் இது !


'பிறப்பொக்கும் ' என்பதனை
பொறுக்க இயலாக் கூட்டம்
வர்ணங்களைக் கடவுளே
படைத்தான்
உனது சாதித்தொழிலை
நீ செய்,அதனால் நீ
வீடு பேறு அடைவாய்
எனச்சொல்லும் கூட்டம்
திருக்குறளை கையில் வைத்து
நயவஞ்ச்கமாய் காய்களை
நகர்த்துகிறது ! உணர்வீர்
உணர்த்துவீர் !

                                        ------ வா. நேரு ----------









 

4 comments:

  1. ///ஆன்மிகம்தான் குறளுக்கு
    அடிப்படை
    வீடு பேறு அடைவதுதான்
    குறளைப் படிப்பதன் நோக்கம்//
    கொடுமை ஐயா கொடுமை

    ReplyDelete
    Replies
    1. கொடுமைதான் அய்யா. விழிப்பாக இல்லையெனில் ஆபத்துதான்.கருத்திற்கு நன்றி.

      Delete
  2. குறள் என்றும் மாறாதது மாற்றினால் மாற்றப்பட்டவர் அடையாளம் காணப்படுவர் அதுவே குறளின் சிறப்பு...!

    ReplyDelete
  3. "மாற்றினால் மாற்றப்பட்டவர் அடையாளம் காணப்படுவர்", நன்றாகச்சொன்னீர்கள், செந்தில் நன்றி.

    ReplyDelete