Thursday, 9 March 2017

மனு(அ)தர்மத்தைக் கொளுத்துகிறார்கள்..........



நாளை (10.03.2017) திராவிட இயக்க வரலாற்றில் மிக முக்கியமான நாள். திராவிடர் கழகத்தின் மகளிரணித்தோழியர்கள் தமிழ் நாடெங்கும் மனு(அ)தர்மத்தைக் கொளுத்துகிறார்கள். உற்சாகமூட்டக்கூடிய அளவிற்கு தோழியர்கள் அணி, அணியாக நாளைப் போராட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்று செய்தி கிடைக்கிறது. தந்தை பெரியாருக்குப்பின் நாத்திக இயக்கத்தின் தலைமைப்பொறுப்பை ஏற்று திராவிடர் கழகத்தோழர்களை வழி நடத்திய அன்னை மணியம்மையாரின் பிறந்த நாள் நாளை மார்ச்-10. அந்த நாளில் திராவிடர் கழகத்த்லைவர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டுதலில் இந்தப்போராட்டத்தை மிகச்சிறப்பாக தோழியர்கள் செந்தமிழ்ச்செல்வி, தகடூர் தமிழ்ச்செல்வி, கலைச்செல்வி எனப் பலரும் இணைந்து அருமையாக ஒருங்கிணைத்திருக்கின்றார்கள். மதுரையில் நடைபெறும் போராட்டத்திற்கு திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் தோழியர் இராக்கு தங்கம் அவர்கள் தலைமை ஏற்கின்றார். தினசரி கூலித்தொழிலாளிகளான தோழர் தங்கமும், தோழியர் இராக்கும் கடந்த 30 ஆண்டுக்கும் மேலான திராவிடர் கழக உறுப்பினர்கள். மதுரையில் நடைபெற்ற போராட்ட ஆயுத்தக்கூட்டத்தில் உள்ளத்தில் இருந்து கொட்டிய சொற்களால் கூட்டத்தை ஈர்த்த தோழியர் இராக்குதங்கம் அவர்கள் தலைமையில் நடைபெறுகின்ற மனு(அ)தர்ம எரிப்பு போராட்டமும், தமிழகம் முழுவதும் நடைபெறுகின்ற மனு(அ)தர்மப் எரிப்பு போராட்டமும் மகத்தான வெற்றி பெறும். வெற்றி பெறுவதற்கு  மாநில பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக போராட்ட வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
எரியுட்டும் மனுதர்மம் என்னும் திராவிடர் கழகத்துணைத்தலைவர் கவிஞர் கலிபூங்குன்றன் அவர்கள் எழுதிய  புத்தக பி.டி.எப் இத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. படிப்பீர், மற்றவர்களையும் படிக்கச்சொல்வீர். சுயமரியாதைக்காக களம் காணும் திராவிடர் கழக தோழியர்களுக்கு, தோழர்களுக்கு ஆதரவைத்தாரீர்.

http://viduthalai.in/images/pdf/POSUNGATTUM_MANUTHARMAM.pdf



3 comments:

  1. தோழியர்க்கு வாழ்த்துகள்! புத்தக
    பிடிஎஃப் -செல்பேசியில்-கிடைக்கலையே தோழர்..?

    ReplyDelete
  2. நன்றி தோழர். நீங்கள் சொன்னபிறகு நானும் கவனித்தேன். விடுதலை
    இணையதளத்திற்குள் (viduthalai.in) சென்று பொசுங்கட்டும் மனுதர்மம் என்னும் பகுதியை அழுத்தினால் முழு பி.டி.எப். கிடைக்கிறது. அதில் லிங்க் இதுதான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியாகக் கொடுத்தால் கிடைக்கவில்லை. பார்க்கச்சொல்கின்றேன் தோழர்.நன்றி.

    ReplyDelete
  3. நீங்கள் தந்திருக்கும் இணைப்பை அப்படியே வெட்டி, இணையத் தேடுபொறியில் இட்டால் கிடைக்கிறது தோழர். ஆனால் இதுவே செல்பேசியில் இயலவில்லை. 20பக்கத் தீப்பொறியைத் தந்தமைக்கு மிக்க நன்றி தோழர். மிகுந்த நன்றி

    ReplyDelete