தமிழ்ப் புத்தாண்டே
வருக ! வருக!
உலகமெலாம் வாழும்
எம் தமிழர் வாழ்வில்
ஒளியினைத் தருக!தருக!
உயரப் பறக்கும் கழுகு
கூரிய கண்களால்
இரையைக் கண்டு
கவ்விடவே இறங்கும் வேளை
நானும் கழுகும் ஒன்றுதான்
எனக் கோழிக்குஞ்சு கூறிடும்
நிலையில் வாழும்
தமிழர் சிலர்
நமக்கு சித்திரையே
தமிழ்ப்புத்தாண்டு என நாம்
சினம் கொள்ளும் வகையிலேயே
சொல்லித் திரிவார்....
பார்ப்பனர் சொல்வதையே
வழி மொழிவார்....
அறுபதாண்டு பெயர்கள்
ஒன்று கூட
தமிழில் இல்லையே ...
என்று நாம் சொன்னால்
அதற்கென்ன தமிழ் மொழியில்
பெயர்களை மொழி
பெயர்த்திடுவோம் என்பார்...
அசிங்கக் கதைகள் உண்டே
அந்த அறுபதாண்டுப் பிறப்புக்கு
என்றால் எவரோ சொல்லியது
அதனால் நமக்கென்ன என்பார் !
கீழடியில் தோண்டிப் பார்த்தோம்
திகட்டத் திகட்டத்
தமிழ்ப்பண்பாடு பொருட்கள் கண்டோம்...
இல்லையடா ஒன்றில் கூட
சாதி மத அடையாளம்
இவையெல்லாம் இடையில்
வந்த பார்ப்பனர்கள் சூழ்ச்சியடா என்றால்
நான் ஆண்ட ஜாதி என்றான்
அடப்போடா,உலகில் உள்ள
மனிதரெல்லாம்
சில தாயின் பிள்ளைகள்
என அறிவியல் சொல்கிறது...
ஆராய்ந்து படித்துப்பார்...
நமக்கு
தமிழ்ப்புத்தாண்டு தைத்திங்கள்...
தை ! தை ! எனத்
தமிழ்ப்புத்தாண்டை வரவேற்போம்..
ஆரியப் புரட்டுகளை
வேரறுப்போம்....
அனைவர்க்கும் எம் இனிய
தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல்
நல் வாழ்த்துகள்....
வா.நேரு,13.01.2022
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணே!
ReplyDeleteமிக அருமை.
ReplyDelete