Friday, 28 January 2022

நெருப்பினுள் துஞ்சல்-சிறுகதைத் தொகுப்பு......விமர்சனம் ...எழுத்தாளர்.... சித்ராதேவி வேலுச்சாமி

புத்தகம்:-வாருங்கள் படிப்போம் குழு வில் இந்த தொகுப்பில் உள்ள தீவிர சிகிச்சைப்பிரிவு என்ற சிறுகதைக்கான
திறனாய்வுக்கு முதல்பரிசு கிடைத்ததற்காக கிடைத்த பரிசு.
அன்பளிப்பு:-தமிழக பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர்,எழுத்தாளர்,இச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் வா.நேரு அவர்கள்
 
நெருப்பினுள் துஞ்சல்-சிறுகதைத் தொகுப்பு
  ஆசிரியர்  : வா.நேரு
பதிப்பகம்,வெளியீடு:எழிலினி பதிப்பகம்
விலை:-₹120
புத்தகம் வாங்க:-9840696574
_____________________________________________________________________________________________
கதாசிரியர் பகுத்தறிவாளர்,உயரிய பண்பாளர்,நட்பு பாராட்டுபவர்,எளிமையானவர்.
எழுத்தும்,செயலும் ஒன்றாய்  வாய்த்திருக்கப் பெற்றவர்.
 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த சிறுகதையில் வரும் கதாபாத்திரங்கள் தன்னைச் சுற்றி உள்ள எளிய மனிதர்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நமக்கு காட்சிப்படுத்திகிறார் .அவர்களின் கஷ்டங்களை மட்டுமல்ல,முட்டாள் தனங்களையும், ஏண்டா இப்படி இருக்கிறீர்கள் எனச் சாடியும் எழுதியுள்ளார்.பெரியாரை குறிப்பிடாமல் எப்படி முடித்திருப்பார்?அவரும் அவ்வப்போது கதையில் வந்து செல்லும் ஒரு கதாப்பாத்திரம்.
 
 
கதைத்தலைப்பே கதையின் கருவாய் பெரும்பாலும் அமைந்திருக்கிறது.
ஒவ்வொரு கதையிலும்,ஏதாவது ஒரு கரு ஒரு கருத்தை நம் மனசுக்குள் விதைக்கிறது..,சில கதைகள் மனதைத் தைக்கிறது..
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
1"அடி உதவுவது போல "
 
 
அந்த அம்மா சொல்லுவாங்க 'நாசமா போன கவர்மெண்ட் ஏந்தேன் இப்படி ஊரு ஊருக்கு சாராயக்கடையை திறந்து விட்டு அநியாயம் பண்ணுதோ?நல்லா உழைக்கிற பசங்க இப்படி குடிச்சுப் பழகி நாசமாபோறாங்கே,....ன்னு போகிற போக்கில ஒரு வசனம்..
சாடல்.
'அடிச்சாப்பில உன் தம்பி படிச்சுருவானா?'கருத்தும்
வட்டாரவழக்கும் அருமை.
 
 
பேரின்பத்துக்கு தெரியாது, முத்து மதிக்குச் சொன்ன அறிவுரை.
பேரின்பம் தன் தம்பி அடிச்சுத்தான் திருந்துனான்னு சொல்லறப்ப,நான் சொல்லித்தான் திருந்தினான்னு ஒரு வார்த்தை கூட காட்டிக்காத பெருந்தன்மை பாராட்டப்பட வேண்டியது.
' முயற்சி பண்ணிக்கிட்டு இரு'
நீயா நானானு பாத்துடுவோம்னு மனசை திடம் பண்ணி, படிச்சாதான் நமக்கு வசதி '
விடாதே பிடின்னு மாட்டை வச்சு உதாரணமா ஒர் அறிவுரை என்று பல சொல்லியிருப்பார்..இது
மதி மட்டுமல்ல..நமக்குமே.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
2.சீரு சுமந்த ஜாதி சனமே 
 
 
எங்க ஒரு சீரு நடந்தாலும் மொய் எழுதணும்.வாங்கிறவங்க பாடு
அடுத்த முறை எவன் சீரு வைச்சாலும் அவுங்க மொய்யை வட்டி முதலுமா தரணும்.தரலைன்னா?அவுங்க நிலை,மொய் படுத்தும் பாடு,
அது தான் கதை.
இதில் குறிப்பா ஆடம்பரங்கள்..தடை செய்யப்பட்ட நடனங்கள் என கண் உறுத்திய அத்தனையும் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.தேவையாய்யா ன்னு கேட்கற மாதிரியே இருந்தது கதை.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
3.முட்டுச்சுவரு
 
 
'கல்வி எதில படிக்க வைச்சா நம்ம பையன் படிப்பான்?ன்னு  யாரும் யோசிப்பதில்லை.பெற்றவர்கள் வருத்தப்படக் கூடாதுன்னு பொய் சொல்கிற பையனுக்கு ஆசிரியர் அரசுவின் மூலம் காட்டிய வழி..
ஆடம்பரமும் பெருமை பேசவும் கௌரத்தையும் பிடிச்சுட்டு அழற கூட்டத்திற்கொரு அறிவுக் கதை
 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
4.இட்லி மாவு
ஆசிரியர்,தன்னைச் சுற்றி உள்ள எளிய மனிதர்களின் கஷ்டங்களில், கவலைகளில் தன்னைக் கரைத்துக் கொண்டவர் என புரிகிறது.
இந்த கதையில "வியாபாரத்தில தரம் எவ்வளவு முக்கியம்.அது தானே விளம்பரம்'" என்ற வரிகள் எனக்குப் பிடித்திருந்தது.
 
 
இங்கேயும் பொருளாதாரம்..வேறு தொழில் தெரியாது.செய்தால் தான் இந்த வயிற்றைக் கழுவ முடியும்?வார்த்தைகள் வலி
 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
5.உடையார்முன் இல்லார் போல்
 
 
வறுமை பிடுங்கித் தின்னும் குடும்பத்திலிருந்து வந்திருக்கும்
ஜோயலின் அம்மாவிடம் சொன்னபடி,அடிச்சு பிடிச்சு ஜோயலுக்கு கல்லூரி படிக்க இடம் வாங்கிக் கொடுத்தா, ன்னு அழுதுட்டு வந்தவனுக்கு,குணசேகரன்,
கல்லூரியில அண்ணனா ஆதரவு தந்து அடிச்ச அடி,உதை.சொந்த அண்ணன் அடிச்சிருப்பாரா தெரிய வில்லை.அடிச்ச அடியில என்ன கிடைச்சுதுன்னு நீங்களே படிச்சுப் பாருங்க.
 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
6.ஒரு வளாகம்,ஒரு நாய்,ஒரு பூனை
 
 
எப்படி அது ஒரு பூனையும்,நாயும் சண்டைப் போடாம இருக்குதாமே?இது கற்பிக்கிற பாடம் என்ன?
அதுக்கும் இடையில ஒருத்தர் வீட்டில நடக்கிற தடிமனான வார்த்தைகள் நடத்தும் போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம்?எல்லா கதையிலும் ஏதோ ஒரு பிரச்சனை,வலி,தீர்வும் ஆசிரியர் எழுதியிருப்பது திருப்தி.
 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
7.நெருப்பினுள் துஞ்சல்
 
 
புரோட்டா வுக்கு மயங்காதவர் இல்லை.அதை போடற அழகை ஆசிரியர் வர்ணித்திருப்பது நேரில பார்க்கிற அனுபவம் தந்தது.
ஒரு நாள் புரோட்டா மாஸ்டரைக் காணவில்லை.ஏன்னா  நெஞ்சடைப்பு.
தெரிந்தவுடன் அவர் முகவரியை வாங்கீட்டு நேரில போற மணிசார் மனசில நிற்கிறார்.இப்படியும் ஒரு மனிதரா?
டேய் உழைச்சு சாப்பிடுடா ன்னும் ஒரு அடிக்கோடு.
 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
8.தீவிர சிகிச்சைப்பிரிவு
 
 
இந்த கதைப்பற்றி விரிவான திறனாய்வு எழுதியுள்ளேன்.
அதைப் பார்க்க இங்கே சொடுக்கவும்
https://m.facebook.com/story.php?story_fbid=5101965319813516&id=100000002946466
 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
9.ஒரு வாரம் கழிந்தது
 
 
ஆசிரியர் அந்த மழையை ரசித்து அந்த சின்னப் பையனின் உற்சாகத்தை நமக்குள்ளும் தெளித்து விடுகிறார்.பூவரசனின் பயிற்சி அனுபவம், அடாது மழை அனுபவத்தை கொடுத்திருந்தது.
கரெண்ட்,சாப்பாடு(மெஸ்),தொலைபேசி எதுவுமில்லாமல் கும்மிருட்டில் கொசு அடித்துக் கொண்டு,இருட்டைப் பழகிக் கொண்டு இருக்க,
 
 
சலிப்புடன் ஒரு நாள் மனைவியிடம் பகிர்ந்து கொண்ட போது,அவர்கள் சொன்ன வார்த்தை எனக்குப் பிடித்திருந்தது."எவ்வளவோ பேரு,உறவு, வீடு  பணம் எல்லாம் இழந்து விட்டு பரிதவிக்கும் நிலை யில், நமது நிலைமை எவ்வளவோ பரவாயில்லையே"
 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
10.உயிர் ஈறும் வாளது
 
 
பொது வாழ்க்கையில் எப்படி அணுக வேண்டும்?பிரச்சினைகளை எப்படி சமாளிக்கணும்? வேலைகளை சீக்கிரம் முடிக்கிறதுக்கு வழியும்,பதிலும்.
'ஒடுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது பெரியது, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும், பயன்படுத்தாதவர்களை எவ்வளவு எப்படி கண்டிப்பது, என்றெல்லாம் கூறிவிட்டு,
'தப்பு பண்ணிய குழந்தையை நன்றாக அடித்து கண்டித்து விட்டு, பின்பு உணவு கொடுத்து சாப்பிடச் சொல்வது போல என,மாவட்ட செயலாளர் அணுகிய விதத்தைக் கூறி இருப்பது அருமை .
 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
11.யார் யார் வாய் கேட்பினும்
 
 
ஜாதியும், ஜாதகமும் வாழ்க்கையில படுத்துற பாடு. 'கண்கெட்ட பின்னாடி சூரிய நமஸ் காரம் '
சாதியையும்,ஜாதகத்தையும் நம்பிய  சுமதியிடம் ,கருப்பையா அறிவுரை செல்லாமல் போனதால், நடந்த நிகழ்வு மனது கனந்தது.
 
 
'ஜோதிடத்தை இகழ்' என சொல்லியிருக்கலாமோ?என்று ஆசிரியர் கூறுகிறார்.
 
 
ஜோதிடத்தில ஒரு வார்த்தை வரும்.அதை யாரும் கவனிப்பதில்லை.'மனப் பொருத்தம் இருந்தால் மாங்கல்யப் பொருத்தம் தேவையில்லை' என.
இப்ப பணப் பொருத்தம் என ஆகிப் போனது வேதனை.
ஆசிரியர், பட்டுக் கோட்டை பாட்டு ஒண்ணு குறிபிட்டுள்ளார்.
' உப்புக்கல்லை வைரம் என்று சொன்னால் ஒப்புக் கொள்ளும் மனிதருக்கு முன்னால் நாம் கதறி என்ன ,புலம்பி என்ன- ஒன்றுமே நடக்கவில்லை தோழா ரொம்ப நாளா'
அருமை
 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
12.தீதும் நன்றும்
 
 
இலவசம் என்றால் பல் இளிப்பவர்களாக மாற்றி விட்ட இந்த காலத்தில, இப்படி ஒரு மனிதர்
'சாப்பாடு ஒரு நாள் வாங்கிக் கொடுத்துடறீங்க.இதே சாப்பாட்ட 4,5 நாள் கழிச்சு நான் வாங்கி சாப்பிடணும்னு ஆசை வருமே?ன்னு ஒரு கேள்வி.சிந்திக்க வைக்கிறது.
 
 
ஆசையை அடக்கிறது முதல் 'கடன் பட்டார் நெஞ்சம் போல்' கதை,பணத்தால் ஏற்படும் அவமானங்கள்,பணம் எவ்வளவு பெரிய ஆளையும்,கணநேரத்தில் அசிங்கப்படுத்தி விடும், அவமானப்படுத்தி விடும் என்பதெல்லாம் நிதர்சனம்.ஆளப் பதிய வைக்க வேண்டிய வார்த்தைகள்.
 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
13.எங்களுக்குத் தேவையென்றால்
 
 
பள்ளிக் குழந்தைகள் மேல் ,கடவுள் நம்பிக்கையை திணிக்காதீர்கள்எங்களுக்கு வேணுமெனில் எடுத்துக் கொள்ளவும்,மறுக்கவும் அனுமதியுங்கள்
அருமையான கருத்து இது
 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
எல்லா கதைகளும், ஆசிரியர் கண்ணால் பார்த்த, மற்றவர்களின் வலியை சொல்வதோடு அதற்கான தீர்வுகளையும்,கேடுகளையும் சுட்டிக் காட்டியிருப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
ஒரு எழுத்தாளரின் பணி,வாசகனின் மனதில் ஒரு தெளிவையோ,மன நிம்மதியையோ தர வேண்டும்.அதுக்கு தகுந்த நூல் இது.ஒரு நீதி நூலாகவும் பார்க்கலாம்.
ஆசிரியருக்கு,வாழ்த்துகளும்,பாராட்டுக்களும்,பெரு நன்றியும்.
 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 


No comments:

Post a Comment