நகைக்கத் தோன்றுகிறது!
காந்தி இன்று
வாழ்ந்திருந்தால்
இணையம் வழியே
எளிதாகத் தமிழைக்
கற்றிருப்பார்...
அவர் விரும்பிய
திருக்குறளை
அவர் விரும்பியவண்ணம்
தமிழிலேயே படித்து
மகிழ்ந்திருப்பார்...
ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள
எத்தனை யூ டியூப் சேனல்கள்…
நேரமும் இணையமும் இருக்கிறதா
இதோ கற்றுக்கொள் என
எத்தனை நல்ல உள்ளங்கள்…
விதம் விதமாய் சொல்லித்தர
மிக எளிதாய்ப் புரிந்துகொள்ள
அவர்கள் பயன்படுத்தும்
பல்வேறு முறைகள் ...
!..
30 ஆண்டுகளுக்கு முன்பு
ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள
ரெபிடெக்ஸ் போல
கட்டை கட்டையாய்ப் புத்தகங்கள்
பார்த்துப் பழகிய
எனது தலைமுறைக்கு
வியப்பைத் தருகிறது….
இன்றைய இணைய வழியாய்க்
கற்கும் முறைகள்...
உள்ளத்தில் மட்டும்
கற்கவேண்டும் என்னும்
உணர்வு தோன்றிவிட்டால்போதும்
உடனே சில மாதங்களில்
கற்றுக்கொள்ளலாம் எந்த மொழியையும்...
எனக்கும் கூட மலையாளம் கற்று
முகுந்தனின் 'மய்யழிக்கரையோரம்'
போன்றவற்றை மலையாள
மொழியில் படிக்க ஆசை...
எனக்கும் கூட ஜப்பானிய மொழிகற்று
'டோட்டாசானை' அது எழுதப் பட்ட
மொழியிலேயே படிக்க ஆசை..
ஆனால் என் முன்னோர் கட்டிய
கோயில்களுக்குள் அமர்ந்து கொண்டு
எங்கள் பாஷை தெய்வ பாஷை
எனச்சொல்லி
என் தமிழ் மொழியை
விரட்டத்துடிக்கும்
வடமொழியைப் படிக்கச்சொன்னால்
மட்டும் உடம்பு முழுவதும் எரிகிறது...
ஆதிக்கத்தின் அடையாளமாய்
அதை ஒத்த இந்தி மொழியும்
இன்னலையே தருகிறது...
ஆதிக்க மொழியாம்
அந்த 'செத்த மொழியை'
கற்றுக்கொடுக்க எம் மொழிக்கு
செலவழிக்கும் தொகையைவிட
ஐம்பது மடங்கு அதிகம் செலவழிக்கும்
ஒன்றிய அரசைக் கண்டு
நகைக்கத் தோன்றுகிறது!
...
வா.நேரு,24.03.2022.
nkal விருப்பம் போல ஆகட்டும்.சொன்னது போல இன்று எந்த மொழியையும் எளிதாக கற்று கொள்ளலாம்.அதை ஒரு பெரிய பொருளாக கருத வேண்டியதில்லை.ஆட்டோ trandlatorkalum வந்து விட்டது எந்த மொழியிலும்.
ReplyDeleteMasillamoni Mathiazhagan...முக நூலில்
அண்ணா அவர்களிடம் ஒரு மாதத்தில் இந்தி கற்றுக்கொள்ளலாம் என ஒரு புத்தகம் உள்ளது அவ்வளவு எளிய மொழியை நீங்கள் ஏன் வேண்டாம் என்கிறீர்கள் எனக்கேட்டபோது அவ்வளவுதான் அதற்கு மேல் அந்த மொழியில் என்ன உள்ளது எனக் கேட்டார..
ReplyDeleteSeenivasagamr Seeni...முக நூலில்