கரையைத் தொடும்
கடல் அலைகள் போல
அம்மா,உங்கள்
நினைவுகளின் அலை
நேற்று முதல்…
அநீதி கண்டு, அம்மா
நீங்கள் எப்போதும்
அமைதியாக இருந்ததில்லை..
எதிர்ப்புக்குரலை
ஏதேனும்
ஒரு வடிவத்தில்
நிகழ்த்திக் கொண்டே
இருந்தீர்கள்….
ஒரு சிறிய கிராமத்தில்
ஆசிரியராக நீங்கள்…
பிற்படுத்தப்பட்டோர்
முழுமையாக வசிக்கும்
ஊராக
அந்த ஊர்…
பக்கத்து கிராமத்தில்
தாழ்த்தப்பட்டோர்
முழுமையாக…
இரண்டு ஊர்ப்பிள்ளைகளும்
படிக்கும் பள்ளியாய்
உங்கள் பள்ளி..
சென்ற முதல் நாள்
பி.சி.குழந்தைகள்
எஸ்.சி.குழந்தைகளைத்
தள்ளி
வைக்கும் கொடுமை
கண்டு
எல்லோரும் ஒன்றாகப்
படியுங்கள்…
ஒன்றாக உட்காருங்கள்
என்று
சமப்படுத்தி பாடம்
நடத்திய வேளையில்..
ஊர்க்காரர்கள்
சிலர் வந்து
நாங்கள் எல்லாம்
உசந்த சாதி !
எங்கள் பிள்ளைகள்
அந்தப் பிள்ளைகளோடு
உட்காராது
என்று சொல்லி வாக்குவாதம்
செய்தபோது…
எல்லோரும் ஒன்றாகத்தான்
அமர்ந்து படிப்பார்கள்…
உனக்குப் பிடிக்கவில்லையெனில்
உன் பிள்ளைகளின்
டிசியை வாங்கிக்
கொண்டு
வெளியில் போ எனச்சொன்ன
நெஞ்சுரமும் நேர்மையும்…
ஒடுக்கப்பட்டோராகப்
பிறக்கவில்லை..
ஆனால் எல்லோரும்
ஒன்று
எனும் எண்ணத்தை
என் மனதில்
திராவிட இயக்கம்
அழுத்தமாகப்
பதித்திருக்கிறது
என்பதனை
சொற்களால் மட்டுமல்ல…
செயல்களாலும் காட்டிய
எங்கள் அம்மாவே..
உங்கள் நினைவு
நாளில்
அடுக்கடுக்காக
நினைவுகள்…
சாதி என்னும் இழிவை
அழித்தொழிக்கும்
பணியில்
உங்கள் வழியில்
நாங்கள்…
வா.நேரு
23.05.2023
என்னே ஒரு நெஞ்சுரமும் நேர்மையும்... வீரத்தாயைப் போற்றுகின்றோம்!
ReplyDeleteவீரமும் ஈரமும் மிகுந்த சமத்துவத் தாயைப் போற்றுகிறோம்!
ReplyDeleteநன்றி.
ReplyDeleteநன்றி.
ReplyDeleteஅண்ணன்களிடம் டியூசன் படிக்கும் பொழுது மாலைப் பொழுது கடந்து நேரமாகிவிட்டால் பலநேரம் பெரியம்மா கைகளால் இரவு உணவு சாப்பிட்ட
ReplyDeleteபாக்கியம் பெற்றவன் ... நான்
அண்ணன்களிடம் டியூசன் படிக்கும் பொழுது மாலை நேரம் கடந்து இரவுவேளை ஆகிவிட்டால் பெரியம்மாவின் கைகளால் பலநேரங்களில் உணவருந்தும் பாக்கியம் பெற்றவன் ... நான் .
ReplyDeleteநன்றி.
ReplyDelete