Monday, 3 July 2023

'வாருங்கள் படைப்போம்' குழுவின் சார்பாக..இணைய வழியில்....

 



 நாளை(04.07.2023 ,இரவு 7.30 மணிக்கு,பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணியாற்றும் பொறியாளர்,படைப்பாளர் பாலகுமார் விஜயராமன் அவர்களோடு அவரது படைப்புகள் குறித்தும்,வாசிப்பு,எழுத்து ஆர்வம் குறித்தும் ஒரு கலந்துரையாடல்.. வாருங்கள் படைப்போம் குழுவின் சார்பாக..இணைய வழியில்...வாய்ப்பு இருப்போர் வாருங்கள்......






பாலகுமார் விஜயராமன் (1980)

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், தொலைத்தொடர்பு பொறியாளர். சொந்த ஊர் மதுரை, தற்பொழுது ஒசூரில் வசித்துவருகிறார். மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றுகிறார். மின்னணுவியல் மற்றும் தொடர்பியலில் பொறியியல் பட்டமும், மேலாண்மையில் பட்டமேற்படிப்பும், வாடிக்கையாளர் மனப்பான்மை தொடர்பான புத்தாய்வில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

இதுவரை வெளியாகியுள்ள படைப்புகள்:

Paperback:

சேவல்களம் – நாவல் – காலச்சுவடு வெளியீடு – டிசம்பர் 2018 ( அமேசான் இணைப்பு: http://tiny.cc/31aofz )

புறாக்காரர் வீடு - சிறுகதைத் தொகுப்பு - நூல்வனம் வெளியீடு - ஜுன் 2016

அஞ்சல் நிலையம் (சார்லஸ் புகோவ்ஸ்கி) - மொழிபெயர்ப்பு நாவல் - எதிர் வெளியீடு - ஜனவரி 2016 (அமேசான் இணைப்பு: http://tiny.cc/k7aofz )

கடவுளின் பறவைகள் - மொழிபெயர்ப்பு சிறுகதைகள் - நூல்வனம் வெளியீடு - ஜனவரி 2018

ஹௌல் மற்றும் சில கவிதைகள் (ஆலம் கின்ஸ்பெர்க்) - மொழிபெயர்ப்பு கவிதைகள் - பாதரசம் வெளியீடு - செப்டம்பர் 2017

E-book:

சிவப்புப் பணம் - அமேசான் மின்னூல் நாவல் - நவம்பர் 2019 - (அமேசான் இணைப்பு: https://www.amazon.in/dp/B07ZZ7YWQB)

நதியின் பெயர் கொண்டோடும் ரயில் – மின்னூல் கவிதைத் தொகுப்பு – அமேசான் கிண்டில் – மார்ச் 2019 (அமேசான் இணைப்பு: http://tiny.cc/6xaofz )

ஹோமர் - நாவல் - அமேசான் கிண்டில் - பிப்ரவரி 2021 - #pentopublish4 (https://www.amazon.in/dp/B08XMGWYT3)

இருத்தலும் இருத்தல் நிமித்தமும் - டிசம்பர் 2022 - (அமேசான் இணைப்பு: https://www.amazon.in/dp/B0BRG9ZZ5P)

No comments:

Post a Comment