Thursday, 29 October 2026

உணர்வுகளின் ஊர்வலம் ..சிறுகதைத் தொகுப்பு...முனைவர் ராணி சக்ரவர்த்தி

 

மதுரையில் இருந்த 'கூடு' என்னும் அமைப்பின் மூலமாக எனக்கு அறிமுகம் ஆனவர் முனைவர் ராணி சக்ரவர்த்தி அவர்கள். மதுரையில் நடைபெற்ற அவரது சிறுகதைத் தொகுப்பு நூலான 'உணர்வுகளின் ஊர்வலம் ' என்னும் நூலின் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன்.கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற அந்த விழாவில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்துணைச்செயலாளர் ,தங்கை புதுச்சேரி வி.இளவரசி சங்கர் அவர்களும் உரையாற்றினார்.நிறைய சிறப்புக் குழந்தைகளும் அவர்களது பெற்றோர்களும் பங்குகொண்ட நூல் வெளியீட்டு விழா அது. விழாவே வித்தியாசமாக, மிகச்சிறப்பாக இருந்தது.உரைகள் எல்லாம் மிகச்சுருக்கமாக அமைந்தது.அன்றைய நூல் வெளியீட்டு விழாவில்,அந்தச் சிறுகதைத் தொகுப்பினை வாங்கி  வந்தேன்.

மதுரையில் குழந்தை மனநல ஆலோசகராகவும் மறுவாழ்வு மனநல மருத்துவராகவும்  இருக்கும் முனைவர் ராணி சக்ரவர்த்தி அவர்களின் கதைகள் எல்லாம் புனைவுகளாக இல்லாமல், தனது வாழ்வில் நடைபெற்ற பல நிகழ்வுகளை புனைவுகளோடும் இணைத்துச்சொல்லும் கதைகளாக இருக்கின்றன.

இந்தத் தொகுப்பில் இருந்த சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவைகளாக இருந்தன.எனவே 'வாருங்கள் படிப்போம் ' குழுவில் இந்த நூல் பற்றிப் பேசினேன்.அந்த உரை கீழிருக்கும் இணைப்பில் உள்ளது.  முனைவர் ராணி சக்ரவர்த்தி அவர்களின் ஏற்புரையும் உள்ளது. மற்றவர்களின் கருத்துகளும் உள்ளது. வாய்ப்பு இருக்கும்போது கேட்டுப்பாருங்கள்.






வா.நேரு,

30.10.2026

2 comments:

  1. மகிழ்ச்சி.. தொண்டறம் போற்றும் நூலாசிரியர் அதைத் தொண்டறச் செம்மலான தாங்கள் அறிமுகம் செய்துள்ளமைக்கு வாழ்த்துகள்... பாராட்டுகள்... அண்ணே! உணர்வுகளின் ஊர்வலம்... உண்மைகளின் ஊர்வலமாக...

    ReplyDelete
  2. நன்றியும் மகிழ்ச்சியும்

    ReplyDelete