29 ஆண்டுகள் முடிந்து 30-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்,இல்லற வாழ்வில் நானும் என் இணையர் நே.சொர்ணமும்.திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில்,இணையேற்பு ஒப்பந்த உறுதிமொழியை நேற்றுத்தான் வாசித்ததுபோல் இருக்கிறது.29 ஆண்டுகள் ஓடிவிட்டது. எனது இன்பத்திலும் துன்பத்திலும் உறுதியாய் உடன் இருக்கும் தோழமை,என் இணையர் சொர்ணத்திற்கு என் இதயம் நிறைந்த நன்றி.அன்புப் பிள்ளைகள் சொ.நே.அன்புமணியும்,சொ.நே.அறிவுமதியும் கேக் வெட்டவைத்து,பரிசுப்பொருள்கள் கொடுத்து கொண்டாடி மகிழ்ந்தார்கள்.நன்றி குழந்தைகளே....
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் முனைவர் வா.நேரு,நே.சொர்ணம் இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இணை ஏற்பு ஏற்ற 30-ஆம் ஆண்டு தொடக்க நாள்(20.03.2022) மகிழ்வாக,விடுதலை நாளிதழ் வளர்ச்சி நிதியாக ரூ 2000 நன்கொடையாக அளிக்கப்பட்டது. வாழ்த்துகள்.
நன்றி விடுதலை நாளிதழ் 20.03.2022(வெளியூர்)
வாழ்த்துக்கள் அண்ணா
ReplyDeleteநன்றிங்க அண்ணே!
ReplyDeleteதோழர் நேரு தோழர் சொர்ணம் இருவரும் இணையேற்றநாள் 20/03/92 வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாள்.. ஆசிரியர் தலைமையில் விதவை மறுமணம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டது. நாங்கள் ஆணையராக உங்களை நீடுழி வாழ வாழ்த்துகிறோம்...
ReplyDeleteதிராவிடர் கழகம் மறுமலர்ச்சி இயக்கமல்ல..வரலாற்றை மாற்றி எழுதும் இயக்கம்.. ஆசிரியர் அப்பழுக்கற்ற பெரியார் தொண்டர்... உங்கள் வழிகாட்டலில் நேரு சொர்ணம் போன்றவர்கள் நடை பயின்றதுதான் புரட்சி வரலாறு..
வாழ்க நீங்கள் வரலாறு உள்ள மட்டும்...
அன்பு அண்ணன் அண்ணி
அ தா சண்முக சுந்தரம் , அருணா
நன்றிங்க அண்ணே,உறவினர் உற்சாகமாக வாழ்த்துவது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.நன்றி அண்ணிக்கும்.ஒரு சின்ன திருத்தம் இணையேற்றநாள் 20.03.1993
ReplyDeleteஇனிய மணநாள் வாழ்த்துக்கள் நேரு மற்றும் சொர்ணம் இருவருக்கும்
ReplyDeleteகணபதி திண்டுக்கல்
Deleteஒளிகூட்டி ஞாலத்தை
ReplyDeleteஉயர்த்தவந்த பெரியாரின்
வழித்தடத்தில் தடம்மாறா
வாழ்வியலைக் கடைபிடிப்பார்!
விழிநோக்கால் நம்தலைவர்
வீரமணியார் பணித்தவற்றைத்
துளிகூடப் பிசகாமல்
சோர்வின்றி முடித்திடுவார்!
பேச்சென்றும் எழுத்தென்றும்
பெருக்கிநிதம் கழகத்தை
மூச்சென்றே நினைந்துருகி
முழுநேரம் உழைத்திடுவார்!!
பூச்செண்டு புகழாரம்
பொதுமக்கள் வெகுமானம்
தூசென்றே தள்ளிவைத்து
தொண்டறமே வாழ்வென்பார்!!
சிறுகதைகள் கவிதைகள்
தெளிதமிழில் படைப்பாரே!
நறுமணத்தைப் பிறர்நூலில்
நற்றிறனால் ஆய்ந்தறிந்து
தருவாரே திறனாய்வாய்த்
தமிழுலகம் மாண்புறவே!
திரு.நேரு மணநாளில்
தேன்தமிழால் வாழ்த்துவமே!
அருந்துணையார் சொர்ணம்மாள்
அறிவுமணி அன்புமணி
தருந்துணையில் பல்லாண்டு
தரணியெலாம் புகழாண்டு
வரும்நாளும் மகிழ்வுடனே
வளத்துடனும் நலத்துடனும்
பெருவாழ்வு பெரியார்போல்
பெற்றிடவே வாழ்த்துவமே!!
- சுப முருகானந்தம்.
20.03.2022
நன்றிங்க அண்ணே!
ReplyDeleteகணபதி திண்டுக்கல்...நன்றிங்க அண்ணே!
ReplyDeleteதிருமணநாள் வாழ்த்துகள் அண்ணே
ReplyDeleteஉழைப்பால் உயர்ந்து
ReplyDeleteகொள்கையில் நிமிர்ந்து
பண்பால் சிறந்து
அன்பில் திளைத்து
மகிழ்வில் வாழும்
நண்பரீர் வாழிய
வாழிய தமிழ்போல் !
உழைப்பால் உயர்ந்து
ReplyDeleteகொள்கையில் நிமிர்ந்து
பண்பால் சிறந்து
அன்பில் திளைத்து
மகிழ்வில் வாழும்
நண்பரீர் வாழிய
வாழிய தமிழ்போல் !
சோம .இளங்கோவன்
நன்றிங்க அய்யா.....
ReplyDeleteதோழர் அழகுபாண்டி அவர்களுக்கு நன்றி
ReplyDelete