அன்பிற்கினிய நண்பர்களே,தோழர்களே,உறவினர்களே,வணக்கம். நாம் மதுரையில் கொண்டாடும் உண்மையான திருவிழா,புத்தகத் திருவிழா இன்று தொடங்குகிறது. புத்தகங்களால் மதுரை திணறப்போகிறது.எத்தனை பதிப்பகங்கள்,எத்தனை புத்தகங்கள். வாங்க நினைத்த புத்தகங்களை நாம் வாங்கப்போகும் நேரம்.
எம்ரால்டு பதிப்பகத்தின் பிரிவான எழிலினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட எனது 'நெருப்பினுள் துஞ்சல் 'சிறுகதைத் தொகுப்பும் , 'இறையன்பு படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனித நேயமும் ' என்னும் எனது முனைவர் பட்ட ஆய்வேட்டின் நூலாக்கமும் அரங்கு எண் 186,187-ல் கிடைக்கும்.மற்றும் ' எனது 'பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்', 'சூரியக் கீற்றுகள்' மற்றும் புதுச்சேரி ஒரு துளிக்கவிதை பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட எனது ''சொற்களின் கூடுகளுக்குள் ' கவிதைத் தொகுப்பும் ,நூல் மதிப்புரை தொகுப்பான 'சங்கப்பலகை'யும் அரங்கு எண் 66-ல் கிடைக்கும்.
கீழடி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட எனது மகன் சொ. நே.அன்புமணியின் 'கரைந்து போ மனமே ' கவிதைத் தொகுப்பு கருஞ்சட்டைப் பதிப்பகம் அரங்கு எண் 66-ல் கிடைக்கும்.
எழிலினி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட எனது மகள் சொ.நே.அறிவுமதியின் 'ஆழினி' நாவல் எம்ரால்டு அரங்கு எண் 186,187-லிலும் அரங்கு எண் 66-லும் கிடைக்கும் .
புத்தகத் திருவிழாவிற்கு வாருங்கள்!வாருங்கள்! ஒன்று கூடுவோம்! புத்தகங்களை நேசிப்போம்,வாசிப்போம்,விவாதிப்போம்,சுவாசிப்போம்.
தோழமையுடன்
வா.நேரு,12.10.2022.
சிறப்பு
ReplyDelete