தனித்திருப்பது
பிடித்திருக்கிறது
சில நேரம்…
யாரும் இல்லா அறையில்
மனதிற்குப் பிடித்த
புத்தகங்களை வாசிக்கும்
இந்த இனிமை
நிரம்பவே பிடித்திருக்கிறது…
‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’..
பழைய பாடல்களைக்
கேட்பது நிரம்பவே
பிடித்திருக்கிறது…
ஏனோ சில பாடல்கள்
வாழ்வில் கசப்பதில்லை…
மீண்டும் மீண்டும்
நாள்தோறும் கேட்டாலும்
மீண்டும் மீண்டும்
கேட்கவே தோன்றுகிறது…
அந்தக் காலத்துப்
பாடல்களை
அலுப்பில்லாமல்
எப்படி
மீண்டும் மீண்டும்
கேட்கிறீர்கள்
எனும் கேள்விக்கு
எனக்கு
விடை தெரியவில்லை
எனினும்
கேட்பது பிடித்திருக்கிறது…
பிடித்த சிலவற்றால்
வாழ்க்கை இனிக்கிறது…
எவரையும் தொந்தரவு
செய்யாத
அந்தச் சிலவற்றால்தான்
புத்துணர்ச்சியும்
புதுமகிழ்ச்சியும்
மனதில் ஏற்படுகிறது…
எவர் சொன்னால்
என்ன?
போடு பழைய பாட்டை
மீண்டும் மீண்டும்
கேட்க..
எவர் சொன்னால்
என்ன?
எடு பிடித்த புத்தகத்தை
மீண்டும் மீண்டும்
வாசிக்க..
போனமாதம் பொசுக்கென்று
செத்துப்போனான்
என் தம்பி..
பிடித்தவைகளால்
வாழ்வோம்
செத்துப்போவதற்கு
முன்பு
வா.நேரு
16.05.2024
ஆம் பிடித்தவைகளால் பிடித்தமாதிரி வாழ்வோம் செத்துப் போவதற்கு முன்பு
ReplyDeleteநன்றி...தங்கள் பெயர் வரவில்லை..
ReplyDeleteஆம், வாழ்ந்து விடலாம்; செத்துப் போவதற்கு முன்பு! அருமை அருமை அய்யா... 🥰
ReplyDelete