சர்வதேச பெண் குழந்தைகள் தினம் 2012ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 2011ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி அய்க்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்தின் கருப்பொருள் ‘பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான பார்வை’ என்பதாகும். (The theme of this year’s International Day of the Girl is ‘Girls’ vision for the future’.)
அக்டோபர் 11, பெண் குழந்தைகளைக் கொண்டாடி மகிழும் நாள் என்று அய்க்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது.
“ஆண்டுதோறும் அக்டோபர் 11 அன்று அனுசரிக்கப்படும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம், பெண்களின் குரல்கள், செயல்கள் மற்றும் தலைமைத்துவத்தைப் பெருக்கி, எல்லா இடங்களிலும் பெண் குழந்தைகளைக் கொண்டாடும் ஒரு முக்கிய உலகளாவியத் தருணமாகும். பெண் குழந்தைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் உரிய நாள் இது. இந்த நாளில், பெண் குழந்தைகளின் உரிமைகளை முழுமையாக அங்கீகரித்து வாதிடுவோம்’’ என்று அய்க்கிய நாடுகள் சபை இந்த நாள் பற்றி அறிவித்திருக்கிறது.
சர்வதேசப் பெண் குழந்தைகள்தினம் என்பதைப் பார்த்தவுடன் தந்தை பெரியாரின் நினைப்பும் அவர் இயக்கத்தின் பணிகளும்தான் நினைவுக்கு வந்தது.ஆமாம், இதைப் பற்றிப் பேசுவதற்கு மிகப்பொருத்தமான தலைவர் தந்தை பெரியார் அவர்கள்தானே. அதுவும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளான பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான பார்வை என்பதைப் பார்த்தபோது தந்தை பெரியாரின் பெண் குழந்தைகள் பற்றிய தொலைநோக்குப் பார்வைதான் நினைவுக்கு வந்தது.
‘ஒரு வீட்டில் நான்கு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் இருந்தால் பெண் குழந்தையைப் படிக்க வையுங்கள்’ என்று சொன்னவர் யார்? ‘பெண்களே உங்களை வெறும் அலங்காரப் பொம்மைகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்’ என்று ஊர்தோறும் மேடைகள் போட்டு முழங்கி மாற்றத்திற்கான காரணமாகத் திகழ்ந்தவர் யார்? ‘பெண் குழந்தைகளுக்கு கல்வியைக் கொடுங்கள்,அவர்கள் படித்து முடித்த பின் வேலை கொடுங்கள்.அவர்கள் வாழ்க்கையை அவர்கள் தேர்ந்தெடுக்க உரிமையைக் கொடுங்கள்’ என்று பெண் குழந்தைகள் எதிர் காலத்தில் நிம்மதியாக இருப்பதற்கான வழியைச் சொன்னவர் யார்? தந்தை பெரியார் தானே!
“ஆணுக்குப் பெண் அடிமை என்று இருக்கக் கூடாது; சரி நிகர் சமமான நிலை இருக்க வேண்டும்; சம உரிமை இருக்க வேண்டும்; இருவருக்கும் உள்ள பேதம் ஒழிய வேண்டும்; மடமையில் மூழ்கி இருக்கக்கூடாது; மக்களைத் தெளிவு பெற்றவர்களாக ஆக்க வேண்டும் என்ற கருத்தில் நாங்கள் தான் முதன்முதலில் பலத்த எதிர்ப்புக்கிடையேயும் ஆரம்பித்தோம். இன்று ஓரளவு மாறுதல் அடைந்துள்ளது. இந்த அளவான மாறுதல் போதாது. இன்னமும் மாறுதல் தேவை. நீங்கள் மனம் வைத்தால் குறிப்பாக பெண்கள் மனது அமைத்தால் மிக விரைவில் கொடுமைகளை உடைத்து விடலாம்” என்றார் தந்தை பெரியார் (விடுதலை 26.5.1962)
‘‘இளம்வயதில் அப்பா,மணமான பின் கணவன்,வயதான காலத்தில் பிள்ளைகள் கட்டுப்பாட்டில்தான் பெண்கள் இருக்கவேண்டும்’’ என்று மனுநீதி சொல்கிறது. அந்தக் குரலைத்தான் பல்வேறு வடிவங் களில் இந்துமதப் பழமைவாதிகள் பலகோணங்களில் சொல்கின்றனர்.’பெண் ஏன் அடிமையானாள்?’’ என்பதற்கான காரணங்களை ஒரு வெளியீட்டின் மூலம் தெளிவுபடுத்தி இன்றைக்கும் பல மொழிகளில் பெண்களுக்கான விழிப்புணர்வை அந்த நூல் கொடுத்துக்கொண்டிருக்கிறது.‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்னும் நூலின் ஒவ்வொரு பக்கமும் இன்றைக்கு பெண்களால் வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் அக்டோபர் 1-15 ,2024
ஏன் இதை நான்தான் செய்ய வேண்டும் என்கிறாய், ஏன் இதை நான் செய்யக்கூடாது என்கிறாய் என்று கேள்விகள் கேட்கும் ஒவ்வொரு பெண் குழந்தைக்குள்ளும் இருக்கிறார் பெரியார்.- தீக்கதிர் இதழ் மேனாள் ஆசிரியர் தோழர் குமரேசன்.
ReplyDeleteநான் நானாக இருக்கின்றேன். என்னை வேறொன்றாக மாற்ற முயற்சி செய்ய வேண்டாம் என்று வாதிடும் சாதனைப் பெண்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். யார் அந்த பெரியார்? என்று தேட ஆரம்பித்துள்ளார்கள். மிகச் சிறப்பு அய்யா. - சுதா மணி
Deleteநன்றி தோழர்,வாசிப்பிற்கும் கருத்திற்கும்(வாருங்கள் படிப்போம் குழு வாட்சப் குழுவில் தோழர் பதிவிட்ட செய்தி)
ReplyDelete"நான் நானாக இருக்கின்றேன். என்னை வேறொன்றாக மாற்ற முயற்சி செய்ய வேண்டாம் என்று வாதிடும் சாதனைப் பெண்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றார்கள். யார் அந்த பெரியார்? என்று தேட ஆரம்பித்துள்ளார்கள். மிகச் சிறப்பு அய்யா. - சுதா மணி" .ஆமாம். நன்றிங்க அம்மா..வாசிப்பிற்கும் கருத்திற்கும்
ReplyDelete