Tuesday, 24 March 2026

அண்ணன் ஆதவனின் பிறந்த நாள்...

 

எனக்குத் தெரிந்த

நாள்முதல்

இன்றுவரை

இயக்கப்பணி ஒன்றே

மூச்சாய் இயங்கும்

அன்பு அண்ணன் ஆதவன்!

அருப்புக்கோட்டை என்றாலே

கண்முன்னால் வரும்

உருவம் இவரின் உருவம் !

 

விடுதலையை உண்மையை…

கழக ஏடுகளை…

வீதி வீதியாய்

வீடு வீடாய்ச் சென்று

சேர்க்கும் வேலையைப்

பல்லாண்டுகளாய்

சிரித்த முகத்தோடு

தேனீ போலப் பரப்பும்

பரப்புரையாளர் இவர்!...



 

தந்தையின் வழியில்

திராவிடர் கழகப்பணியைத்

தீயாய்த் தொடரும்

களப்பணியாளர் இவர் !

 

எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல்

தந்தை பெரியாரின் கொள்கையை

அய்யா ஆசிரியர் வழியில்

செயல்படுத்தும் தொண்டர் இவர்!

 

இவரைப் போன்றோர்தான்

திராவிடர் கழகத்தின்

உயிர் போன்றோர்!

சமூகத்திற்கு விழி போன்றோர்..

வாழ்க ! வாழ்க ! என

அண்ணன் ஆதவனை

இப்பிறந்த நாளில்

வாழ்த்தி மகிழ்கிறோம்!...

                                  வா.நேரு,25.03.2026

 

8 comments:

  1. உண்மை உண்மை உண்மை

    விடுதலை ஆதவன் என்று சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும் என்கின்ற அளவிற்கு விடுதலை நாளிதழுடன் ஐக்கியபட்டவர் ஆதவன்

    ReplyDelete
    Replies
    1. @ எழுத்தாளர் மதிகண்ணன், கதவு பதிப்பகம்....நன்றி தோழர்

      Delete
  2. ஆதவன் அய்யா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  3. சுப.முருகானந்தம்25 March 2026 at 03:04

    ஆதவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  4. இணைந்து வாழ்த்துவோம் அண்ணே. நன்றி

    ReplyDelete
  5. ஸ்டார் நாகராசன்,ஆண்டிபட்டி25 March 2026 at 21:56

    அய்யா சிறப்பான பதிவு

    ReplyDelete
  6. நன்றி.மகிழ்ச்சிங்க அய்யா.

    ReplyDelete