Tuesday, 31 March 2026

வாருங்கள் படைப்போம் குழுவில் எழுத்தாளர் கி.தளபதிராஜ் ....உரையாடல்







மேற்கண்ட நூல்களின் ஆசிரியர், மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகச்செயலாளர் அண்ணன் கி.தளபதிராஜ் அவர்களோடு  நேற்று நடந்த கலந்துரையாடல் மனம் நிறைவான நிகழ்வாக அமைந்தது.கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தயங்காமல் விறுவிறுவென்று  தளபதிராஜ் அவர்கள் பதில் கூறினார். நிகழ்வினை ஒருங்கிணைத்த  வாருங்கள் படைப்போம் குழுவின் ஒருங்கிணப்பாளர் எழுத்தாளர் வினிதா மோகன்,சிறுகதை எழுத்தாளர் -இசைக்கலைஞர் அண்ணன் லோ.குமரன், கவிஞர் கலையரசி பாலா,ஒருங்கிணைப்பாளர் மங்கையர்க்கரசி ஆகியோருக்கு நன்றியும் மகிழ்ச்சியும். வாருங்கள் படிப்போம்,வாருங்கள் படைப்போம் குழுவின் நிறுவனர் முனைவர் அண்ணன் கோ.ஒளிவண்ணன் அவர்கள் தன்னுடைய  பின்னோட்டத்தை  நெகழ்ச்சியாக வழங்கினார்.அதனைப்போலவே அண்ணன் லோ.குமரன்,தங்கை புதுக்கோட்டை சுப.சுசிலா ஆகியோர் கருத்துரைத்தனர். கேள்விகள் கேட்டனர். பெரியார் பன்னாட்டு அமைப்பு,அமெரிக்காவின் இயக்குநர் அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு பாராட்டி வாழ்த்தினார். இரத்தினம் இராமசாமி அவர்கள் அழகிய பின்னோட்டத்தை 'வாருங்கள் படிப்போம்'வாட்சப் குழுவில் வழங்கியுள்ளார்.'நேர்காணல் மிக நன்றாக இருந்தது அப்பா' என்ற எனது மகன் சொ.நே.அன்புமணியின் பாராட்டும் மகிழ்ச்சி அளித்தது.

இது ஓர் இணைந்த பயணம். இக்குழு  இலக்கியப்பயணத்திற்கு வழிகாட்டும் குழு.எழுதுவது எப்படி என்பதை வகுப்பு எடுக்காமலேயே உறுப்பினர்களுக்கு புரியவைக்கும் குழு.அனுபவப் பகிர்வால் கேட்பவர்களைத் தானே எழுத வைக்கும் குழு.மலேசியாவில் நடுநிசி எனினும் நிகழ்வில் முழுமையாக கலந்துகொண்ட காந்தி முருகன் போன்றவர்களின் பங்களிப்பும் , கலந்து கொண்டவர்களின் ஒவ்வொருவரின் பங்களிப்பும்  நன்றிக்கும் மகிழ்ச்சிக்கும் உரியது.நன்றி தோழமைகளே...

கீழ்க்கண்ட இணைப்பில் வாருங்கள் படைப்போம் குழுவில் நடைபெற்ற முழு உரையாடலும் உள்ளது. விருப்பம் இருப்பவர்கள் கேட்கலாம். 

https://www.youtube.com/live/w2DpNSPHpYc?si=9o6Fhog9mK9uQyo_ 

5 comments:

  1. இரத்தினம் இராமசாமி31 March 2026 at 22:43


    Dr V Neru
    11:11 (0 minutes ago)
    to me

    இந்த இணைய வழி கருத்தரங்கில் நேற்று நீண்ண்ண்டடட இடைவெளிக்குப் பிறகு கலந்து கொண்டேன்.

    நெறியாளர் வா.நேரு பொருத்தமான கேள்விகள் கேட்டு படைப்பாளர் இடமிருந்து பல அரிய தகவல்களை வரவழைத்தார்.

    சிறந்த திராவிட இயக்க படைப்பாளியான இந்த எழுத்தாளர் மற்றும் பன்முக திறனாளர் பற்றி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

    முன்பு தோழர் குமரேசன் பதிவை பகிர்கிறேன் என்று சொன்னபோது அதற்கு விலையாக, இந்த குழுவின் அட்மின்களில் ஒருவரான ஒளிவண்ணன், நான் மூன்று ஜூம் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று, தண்டனை - அல்ல - அழைப்பு விடுத்தார்.

    அதற்காக என்று இல்லை. நேற்று எனக்கே இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதனால் கலந்து கொண்டேன்.

    இன்று காலை யூடியூப் சென்று நிகழ்வைப் பார்த்தபோது என் முகத்தில் ஒப்பனை அதிகம் என்று தெரிந்தது. அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம்.

    என் பெயருக்குக் கீழே சாம்சங் என்று ஆங்கிலத்தில் பெயரிட்டு ஒரு நெம்பர் காட்டியது. அந்த நெம்பர் எனக்கே நினைவில்லை.

    புதிய மொபைல் வாங்கி அதில் Zoom App பதிவிறக்கம் செய்து அதன் மூலம் இணைந்ததால் என் பெயர் வராமல் இருந்து இருக்கலாம். அடுத்த முறை ஏதாவது செய்ய வேண்டும். அனுமதி அளித்ததற்கு நன்றி.

    ReplyDelete
  2. வாட்சப் வழியாக பின்னோட்டம் அளித்த திரு இரத்தினம் இராமசாமி அவர்க்ளுக்கு நன்றியும் மகிழ்ச்சியும்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. ஸ்ரீதேவி சுகன்யா1 April 2026 at 00:03

    நேற்றைய நிகழ்வு எப்பொழுதும் போல உங்கள் நேர்த்தியான கேள்விகளால் சுவாரசியமாக இருந்தது.திராவிட கழக தலைவர்கள், வைக்கம் போராட்டம் , அதில் பயணித்த மனிதர்கள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது.ஒரு எழுத்தாளர் எப்படி உருவாகினார் என்பதை முழுமையாக உங்கள் கேள்விகளால் தெரியவைத்து விட்டீர்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் பங்குபெறும் போதும் பல புதிய தகவல்கள் எங்களுக்கு கிடைக்கின்றது .உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .நன்றி அய்யா

    ReplyDelete
  5. @ஸ்ரீதேவி சுகன்யா ...மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்

    ReplyDelete