பகுத்தறிவாளர் கழக மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு எழுதிய பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் நூல் அறிமுக விழா
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
முனைவர் வா.நேரு எழுதிய பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் புத்தக வெளியீடு
பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் சோம.இளங்கோவன் பங்கேற்றார்
மதுரை, டிச. 15- 11.12.2011 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் மதுரை நியூ காலேஜ் ஹவுஸ், திருவள்ளுவர் அரங்கத்தில் பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் நூல் அறிமுக விழா நடைபெற்றது.
விழாவிற்கு வந்தவர்களை இனிப் போடு வரவேற்று வா.நேரு, நே.சொர் ணம் இணையரின் குழந்தைகள் சொ.நே.அன்புமணி, சொ.நே.அறிவு மதி ஆகியோர் பகுத்தறிவுப் புத்தகங் களை வழங்கினர். விழாவிற்கு வந்த அனைவரையும் மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் க.அழகர் வரவேற்றார்.
வீ.குமரேசன்
பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் தலைமை யேற்று உரையாற்றினார். அவர் தனது உரையில் பகுத்தறிவாளர் கழகத்தை தந்தை பெரியார் அவர்கள் தொடங் கியதன் நோக்கம், தொடக்க காலம் முதல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் புரவலராக இருந்து வழி நடத்தும் இயக்கமாகிய பகுத்தறி வாளர் கழகத்தின் சிறப்புகள், ஆசிரி யர் அவர்களின் அணுகுமுறை போன்ற பல்வேறு செய்திகளைக் கூறி, கவிதை நூலைப் பாராட்டி பேசினார். தொடர்ந்து சிகாகோ, பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் அவர்கள் கவிதை நூலினை வெளியிட முதல் பிரதியினை திராவிடர் கழகத் தின் மாநில சட்டத்துறைத் தலைவர் கி.மகேந்திரன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து தி.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தே.எடிசன் ராசா, மண்டலத்தலைவர் வே.செல்வம், மண்டல செயலாளர் மீ.அழகர்சாமி, மதுரை புற நகர் மாவட்டத் தலைவர் மா.பவுண்ராசா நூலினைப் பெற்றுக் கொண்டனர்.
பேராசிரியர் நம்.சீனிவாசன்
கவிதை நூலின் ஆய்வுரையினை மதுரை மன்னர் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் பேரா.நம். சீனிவாசன் அளித்தார். அவர் தனது ஆய்வுரையில் தமிழ்க் கவிதையின் வகைகள், புதுக் கவிதையின் சிறப்புக்கள், கவிஞர் வைர முத்துவின் கவிதைகள் போன்றவற் றைக் கூறி பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் என்ற கவிதையினை முழுமை யாக வாசித்து சிறப்புக்களை எடுத்துக் கூறி கவிதை நூலின் நிறை குறைகளை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து தி.க. நெல்லை மண்ட லத் தலைவர் பொறியாளர் சி.மனோ கரன், ப.க.பொதுச் செயலாளர் வடசேரி வ. இளங்கோவன், தொலை தொடர்புத் துறை தொ.மு.ச. மாவட்ட செயலாளர் ந.முருகன், எழுத்தாளர் க.சி. அகமுடை நம்பி, மதுரை மாநகர் மாவட்ட ப.க. தலைவர் சே.முனிய சாமி, செயலாளர் சுப.முருகானந்தம், பழக்கடை வணிகர் சங்க செயலாளர் அ.முருகானந்தம், திருப்பூர் ஜோ. இராஜேந்திரன், ஐ.ஓ.சி. உதவி மேலா ளர் இரா.பழனிவேல்ராஜன், வழக்கறி ஞர் நா.கணேசன், தேனி மாவட்ட ப.க. தலைவர் ஸ்டார் நாகராசன், திண்டுக் கல் மாவட்ட ப.க. செயலாளர் மு.நாக ராசன், அருப்புக்கோட்டை தி.ஆதவன், அய்யா ஆனந்தம், வா.நேருவின் தாயார் சு.முத்துக்கிருட்டிணம்மாள், தங்கை ஆசிரியை வா.சாரதா, அண் ணண்கள் ஆசிரியர் வா.ஜெயராஜ், வா,தமிழ் செல்வன், மாமா சு.இராதா கிருட்டிணன் , வா.நேருவின் துணைவி யார் நே.சொர்ணம் மற்றும் பலர் கவிதை நூலினைப் பெற்றுக்கொண் டனர்.
நூலினைப் பெற்றுக்கொண்டு கருத்துரையினை பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச் செல்வி, மதுரை தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் முனைவர் க.பசும்பொன் ஆகியோர் அளித்தனர். தொடர்ந்து திராவிடர் கழகத்தின் மாநில சட்டத்துறைத் தலைவர் கி.மகேந்திரன் கவிதை நூலினை விமர்சனம் செய்து உரையாற்றினார்.
டாக்டர் சோம.இளங்கோவன்
நிறைவாக பெரியார் பன்னாட்டு மையத்தின் இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோவன் நிறைவுரை யாற்றினார். அவர் தனது உரையில் புரட்சிக் கவிஞரின் பாடல்களை எடுத்துக்கூறி நேருவின் கவிதைகளை ஒப்பிட்டுக் கூறினார். தந்தை பெரியா ரின் தனித்துவத்தை எடுத்துக்கூறினார். 'பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் ' கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகளை எடுத்துக்கூறி விமர்சனம் செய்தார்.
தமிழர் தலைவர் அவர் களின் உழைப்பினைக் கூறி அவருக்கு முழுமையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண் டார். இணையத்தில் வரும் அவதூறு களுக்கு பதிலடி கொடுக்கும் பழனி தமிழ் ஓவியா, காரைக்குடி பிராட்லா போன்றவர்களைப் பாராட்டினார். இணையத்தை ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும், அது ஒன்றும் கடினமல்ல என்று எடுத்துரைத்தார். தமிழ் ஓவியாவிற்கு நினைவுப் பரிசு அளித்துப் பாராட்டினார்.
முடிவில் வா.நேரு ஏற்புரையாற் றினார். தனது ஆசிரியர் வீரி செட்டி அவர்கள் இவ்விழாவிற்கு வந்து சிறப்பித்ததற்காகவும் மற்றும் தனது தாயார், உறவினர்கள், நண்பர்கள், இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் தனது நன்றியினைத் தெரிவித்தார். சிக்காகோவில் இருந்து இங்கு வந்த நிலையில், இந்த விழாவிற்கு வந்து சிறப்பித்த, இந்த கவிதை நூலினை வெளியிட்ட பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் அவர்களுக்கு என்றைக் கும் நன்றி உடையவனாக இருப்பேன் என்று உரைத்தார்.
நூலினைப் படித்த சிலர் கருத்துக் களை சொல்லும்விதம் மிகக் கடுமை யாக இருப்பதாகக் குறிப்பிட்டார்கள். யாரையும் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல, பண்படுத்துவதே எங் கள் நோக்கம், அதுவே எங்களுக்கு தந்தை பெரியாரும் , தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களும் கற்றுக் கொடுத்த பாடம் எனக்குறிப்பிட்டார்.
முடிவில் மானமிகு பதிப்பகத்தின் உரிமையாளரும், ப.க. மாவட்ட துணை செயலாளருமான பா.சடகோ பன் நன்றி கூறினார். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு தமிழர் தலைவரின் அறிவுரைப்படி சால்வைக்குப் பதிலாக விழா நினை வுப் பரிசுகள் அளிக்கப்பட்டன.
1 comment:
புத்தகம் பற்றி வந்த ஒரு கடிதம்
ஆ. வந்தியத்தேவன் 24/12/2011
அன்பிற்கினிய சகோதரர் நேரு அவர்களுக்கு,
வணக்கம். "பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் ' என்ற தங்களின் முதல் நூல் எண்ணத்திலும் வண்ணத்திலும் பொலிவுடன் உள்ளது. சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் புதுக்கவிதையில் தங்களின் இலட்சியப் பிடிப்பனையும், சமூக அவலங்களையும் அதற்கான தீர்வையும் முன் வைத்திருக்கிறீர்கள். சாதி நோய் போக்கும் காதலை வரவேற்று ஆதலினால் காதலிப்பீர் என்ற கவிதை, ... இது போல நூல் முழுவதும் பரவிக்கிடக்கின்ற எழில்மிகு பாக்கள் - அதில் நீக்கமற நிறைந்துள்ள நமது இயக்கக் கொள்கைகள் என்னை வெகுவாகக் கவர்ந்தன. இது போன்ற எண்ணற்ற நூல்களை ,படைக்கலங்களாக வார்த்திட்ல் வேண்டும் என்ற விழைவோடு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நூல் மலர்ந்திடவும், தங்களின் இலட்சியப் பயணம் தொய்வின்றி தொடர்ந்திடவும் துணை நிற்கும் தங்களின் வாழ்விணையர் என் ஆருயிர் சகோதரி சொர்ணம், அன்பு செல்வங்கள் அன்புமணி, அறிவுமதி ஆகியோருக்கும் அன்பான என் வாழ்த்துக்கள்.
தோழமையுடன்
ஆ.வந்தியத்தேவன்(கையொப்பம் )
வெளியீட்டு அணிச் செயலாளர், மறுமலர்ச்சி தி.மு,க.
Post a Comment