மதுரையில் சார்லஸ் டார்வின் பிறந்தநாள் நாத்திக கூட்டமைப்பின் தலைவர் நரேந்திர நாயக் மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம்
கூட்டத்தில் பேராசிரியர் நம்.சீனிவாசன் உரையாற்றினார். உடன் வா.நேரு, தே.எடிசன் ராசா, நரேந்திரநாயக், பொறியாளர் சி.மனோகரன், மதுரை வே.செல்வம் ஆகியோர் உள்ளனர்.
மதுரை, மார்ச் 3-மதுரைமாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக அறிவியல் அறி ஞர் சார்லஸ் டார்வின் அவர்களின் பிறந்த நாள் நினைவாக - மந்திரமா? அறிவியலா? எனும் செய் முறை விளக்க நிகழ்ச்சி 28.02.2012 செவ்வாய் மாலை 6 மணி அளவில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் நடைபெற் றது . நிகழ்வுக்கு பகுத் தறிவாளர் கழக மாநி லத் தலைவர் வா.நேரு தலைமை ஏற்று உரை யாற்றினார். மதுரை மண்டலத் திராவிடர் கழகத் தலைவர் வே. செல்வம் அனைவரை யும் வரவேற்றார். வர வேற்புரையில் அனை வரையும் வரவேற்று, பிப்ரவரி 12-ஆம் நாள் பிறந்த சார்லஸ் டார்வி னின் பிறந்த நாளைக் கொண்டாட வேண் டியதன் அவசியம் , சார்லஸ் டார்வின் அவர்களின் சிறப்புகள் போன்றவற்றை எடுத்து ரைத்தார். திராவிடர் கழக தென் மாவட்ட பிரச்சா ரக்குழுத்தலைவர் தே. எடிசன்ராசா, திராவிடர் கழக நெல்லை மண்டலத்தலைவர் சி.மனோகரன், திராவிடர் கழக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் க.அழகர். பகுத்தறிவாளர் கழக மதுரை மாவட்டத் தலைவர் சே.முனியசாமி ஆகியோர்முன்னிலை ஏற்றனர். பேராசிரியர் முனைவர் நம்.சீனிவாசன் அவர்கள் இந்த விழாவின் நோக்கங்களையும், திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சிறப்புகளை யும், அவரது வாழ்க்கையும் இயக்கமும் எப்படி இணைந்த ஒன்று என்பதையும் விளக்கி அறிவியல் மனப்பான்மை பற்றிய கூட்டம் என்றாலே ஆசிரியர் அவர்களின் நினைவும் வரவேண்டும் என உரையாற்றினார். அகில இந்திய நாத்திக கூட்ட மைப்புகளின் தலைவர் டாக்டர் நரேந்திர நாயக் அவர்கள் மந்திரமா? அறி வியலா என்னும் செய்முறை விளக்கத்தை மக்கள் மத்தி யில் நிகழ்த்திக் காட்டினார். சாய்பாபா கையில் இருந்து விபூதி வரவழைப்பது, வெறும் கையில் இருந்து தங்க செயின் வரவழைப் பது ( வீடியோவில் சாய்பாபா அம்பலப்பட்டது திரையி டப்பட்டது),அறுவை சிகிச்சை செய்யாமலே குடலை வெளி யில் எடுப்பது ,பின்பு உள்ளே வைத்து தைப் பது, பில்லி சூனியம் என்ற பெயரில் எப்படி மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்
(திரையிடல்) என்பது போன்ற பல செய்முறை விளக்கங் களை செய்து காண்பித்தார். அறிவியல் மனப்பான்மை என்றால் என்ன? அது ஏன் இல் லாமல் போகின்றது என் பது பற்றியும் உரை நிகழ்த் தினார். 85 அமைப்புகள் உள்ள இந்திய நாத்திக கூட்டமைப்பின் செயல் பாடுகள் பற்றியும் மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டு , கேள்விகளுக்கு பதிலளித்தார். முடிவில் மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செய லாளர் சுப.முருகானந்தம் நன்றி கூறினார். விழாவில் மதுரை புற நகர் மாவட்ட செயலாளர் அ.வேல்மு ருகன், மதுரை தி.க. மாவட்ட அமைப்பாளர் நா.முரு கேசன், மாவட்ட துணை செயலாளர் ச. நாகராசன், மகளிரணி அமைப்பாளர் தி.அஜீதா, மகளிரணி ராக்கு, நா. நாகலட்சுமி, ப.க.துணை செயலாளர் பா.சட கோபன், மோதிலால், போட்டோ ராதா, விராட்டிபத்து சுப் பையா, பிரதாப், சொர்ணம் நேரு, சொ.நே.அறிவுமதி, பேரா.ஜோதி சீனிவாசன், சுசிலா வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பொதுமக்கள் கூட்டத்தால் அரங்கு முழுவதும் நிரம்பி நிகழ்ச்சி நடந்தது. viduthalai - 3-3-12