அடிக்கடி
நடுங்குகின்றாய் நிலமே!
இருப்போரை அச்சமூட்டி
எந்த நேரம் சுனாமியோ !
நில நடுக்கமோ என மக்கள்
நடுங்கும் வண்ணம்
அடிக்கடி நடுங்குகின்றாய் நிலமே !
மங்கைகள் பெயரையெல்லாம்
மா நதிகளுக்குச் சூட்டிவிட்டு
மண்ணில் மங்கையர்கள்
படும் இன்னல் கண்டு
நடுங்குகின்றாயோ நிலமே !
உழைப்போர் பசித்திருக்க
மண்ணில் உழையாதார்
அறுசுவை உண்டு
களித்திருப்பதைக் காண
முடியாமல் நடுங்குகின்றாயோ நிலமே !
அபார்ட்மெண்ட் என்று சிலர்
உன்னில் ஆழமாய்த் துளை போட
சுற்றியிருப்போர் எல்லாம்
தண்ணீருக்கு அலையும் நிலை
கண்டு நாணி நடுங்குகின்றாயோ நிலமே !
விளை நிலமெல்லாம்
வீடு கட்டும் பிளாட்டாக
மாறி வரல் கண்டு
எப்படிப் பிழைத்திருப்பாய் மனிதா !
செத்துத் தொலை எனச்
சீற்றம் கொண்டு நடுங்குகின்றாயோ நிலமே ?
ஏற்றத்தாழ்வு என்றும்
நிலைத்திருக்கும் ஏணிப்படிகள்
அமைப்பாம்
சாதி எனும் சதியால்
மக்கள் சாகும் நிலை
கண்டு நடுங்குகின்றாயோ நிலமே !
காணாத கடவுளுக்காய்
கலகம் மூட்டி
கடவுள் பெயர்சொல்லி
மக்களைக் கழுத்த்றுக்கும்
கொடுமை கண்டு
இந்த மனிதர்கள் இருந்தாலென்ன
செத்தாலென்ன என
நினைத்து நடுங்குகின்றாயோ நிலமே !
இய்ற்கை சீறினால்
இருப்பதெல்லாம்
ஒரு நொடியில் அழியும் !
உன்னைக் காப்பாற்ற
சுற்றுச்சூழலைக் காப்பாற்று
என அறிவுறுத்த
அடிக்கடி நடுங்குகின்றாயோ நிலமே !
எழுதியவர் :வா. நேரு
நாள் :2013-02-25 14:49:01
nantri : eluthu.com
நடுங்குகின்றாய் நிலமே!
இருப்போரை அச்சமூட்டி
எந்த நேரம் சுனாமியோ !
நில நடுக்கமோ என மக்கள்
நடுங்கும் வண்ணம்
அடிக்கடி நடுங்குகின்றாய் நிலமே !
மங்கைகள் பெயரையெல்லாம்
மா நதிகளுக்குச் சூட்டிவிட்டு
மண்ணில் மங்கையர்கள்
படும் இன்னல் கண்டு
நடுங்குகின்றாயோ நிலமே !
உழைப்போர் பசித்திருக்க
மண்ணில் உழையாதார்
அறுசுவை உண்டு
களித்திருப்பதைக் காண
முடியாமல் நடுங்குகின்றாயோ நிலமே !
அபார்ட்மெண்ட் என்று சிலர்
உன்னில் ஆழமாய்த் துளை போட
சுற்றியிருப்போர் எல்லாம்
தண்ணீருக்கு அலையும் நிலை
கண்டு நாணி நடுங்குகின்றாயோ நிலமே !
விளை நிலமெல்லாம்
வீடு கட்டும் பிளாட்டாக
மாறி வரல் கண்டு
எப்படிப் பிழைத்திருப்பாய் மனிதா !
செத்துத் தொலை எனச்
சீற்றம் கொண்டு நடுங்குகின்றாயோ நிலமே ?
ஏற்றத்தாழ்வு என்றும்
நிலைத்திருக்கும் ஏணிப்படிகள்
அமைப்பாம்
சாதி எனும் சதியால்
மக்கள் சாகும் நிலை
கண்டு நடுங்குகின்றாயோ நிலமே !
காணாத கடவுளுக்காய்
கலகம் மூட்டி
கடவுள் பெயர்சொல்லி
மக்களைக் கழுத்த்றுக்கும்
கொடுமை கண்டு
இந்த மனிதர்கள் இருந்தாலென்ன
செத்தாலென்ன என
நினைத்து நடுங்குகின்றாயோ நிலமே !
இய்ற்கை சீறினால்
இருப்பதெல்லாம்
ஒரு நொடியில் அழியும் !
உன்னைக் காப்பாற்ற
சுற்றுச்சூழலைக் காப்பாற்று
என அறிவுறுத்த
அடிக்கடி நடுங்குகின்றாயோ நிலமே !
எழுதியவர் :வா. நேரு
நாள் :2013-02-25 14:49:01
nantri : eluthu.com
1 comment:
RajaduraiManimegalai
சுனாமிக்கும் நிலஅதிர்வுகளுக்கும் இதுவும் ஒரு காரணமாய் இருக்குமோ என்று நினைக்க வைத்த கவிதை
நிலாசூரியன்
மனிதனை சிந்திக்க தூண்டும் அருமையான படைப்பு,
முற்போக்கு சிந்தனையும் சொல்லாடல்களும் தெளிவு......
rameshalam
அருமை....வா.நேரு.
KS.Kalai
அருமை மிக அருமை........
இன்றும் யப்பானில் நில நடுக்கம் என்று செய்திகள் சொல்லுகிற வேளை உங்கள் கவிதை....
நில நடுக்கம் தொடர்ந்தால்......நம் நிலை நடுங்கும் நாளை....!
நல்ல படைப்பு !
==============================
எழுத்து தளத்தில் இக்கவிதை பற்றிய கருத்துக்கள் - நன்றி ! எழுத்து.காம்
Post a Comment