எனது மகள் சொ.நே.அறிவுமதியின் 'ஆழினி 'நகைச்சுவை நாவல் அமெரிக்காவில் உள்ள அட்லண்டா நகரில் நேற்று 9.10.2022 அன்று திருமிகு.முனைவர் வெ.உதயகுமார் அவர்கள் வெளியிட திருமிகு.கண்ணப்பன் அவர்கள் பெற்றுக்கொண்டிருக்கிறார். வல்லினச்சிறகுகள்-மின் இதழின் நிறுவனர்,கவிஞர் தோழர் அகன் அவர்கள் நூலைப்பற்றி அறிமுகப்படுத்துகிறார்.ஒரு மாணவியின் முதல் நாவல் என்பதற்காக மிகுந்த அக்கறை எடுத்து ,அயல்நாட்டிற்கு நூலைச்சுமந்து சென்று வெளியீடும் நடத்தியிருக்கும் அன்புத்தோழர் அகன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியும் வணக்கங்களும். வல்லினச்சிறகுகள் இதழின் ஆசிரியர் எழுத்தாளர் இராஜி இராமச்சந்திரன்,அமெரிக்காவில் இருக்கும் மதுரையின் மாபெரும் சொத்து,தன் பேச்சால் கேட்கும் எவரையும் கட்டிப்போடும் ஆற்றல் வாய்ந்த சொற்பெருக்காளர், பன்முக ஆற்றலாளர்,எழுத்தாளர் ஜெயாமாறன்,புதுக்கோட்டை கவிஞர் கிரேஸ் பிரதிபா,கலந்து கொண்டு முக நூலில் பகிர்ந்த திருமிகு.சுவாமிநாதன் என நம் இலக்கியச்சொந்தங்கள் எல்லாம் இணைந்து நடத்திய விழாவில் அறிவுமதியின் நாவலும் வெளியிடப்பட்டிருக்கிறது. நிகழ்வில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் நன்றியும் மகிழ்ச்சியும்...வா.நேரு.
https://m.facebook.com/groups/atlantatamilmakkal/permalink/5466670756779449/?mibextid=fBA1Bh
6 comments:
ஆழினியைத் தந்த அறிவுமதிக்கு வாழ்த்துகள் ஐயா! இந்தச் சிறு வயதில் நாவல் எழுதுவது பேராற்றல் மிக்க செயல்!
என் வாசிப்பு வரிசையில் உள்ளது!
இப்படிக்கு
ஜெயா மாறன்
வாழ்த்துக்கள் மாமா
@ஜெயாமாறன்....மிக்க மகிழ்ச்சி.உங்கள் மதிப்புரை மிக்க மதிப்பிற்குரியது.எதிர்பார்க்கிறோம்.
வாழ்த்துக்கள் தோழர்
நன்றி. தோழர்..பெயர் இல்லை....
Post a Comment