Tuesday, 14 February 2017

மதுரை விடுதலை வாசகர் வட்டம் .....

மதுரை, பிப். 14- 11.2.2017 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மதுரை விடுதலை வாசகர் வட்டத்தின் அய்ம்பதாவது நிகழ்ச் சிக்கு விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் பொ. நடராசன் (பணி நிறைவு நீதிபதி) தலைமை தாங்கினார்.
வந்திருந்தோரை தனராஜ் (தலைமை ஆசிரியர் பணி நிறைவு) வரவேற்று உரையாற்றினார். அடுத்து பேசிய பா. சடகோபன் அவர்கள் இலக்கியம் பற்றிய பெரியாரின் கருத்துக்களை தெளிவுபட எடுத்து விளக்கினார்.



அண்ணாவின் நினைவலைகள் என்ற தலைப்பில் பேசிய துரை எழில் விழி யன் (திராவிட முன்னேறக் கழகம்) அண்ணா அவர்களின் அரசியல் வாழ் வில் நடந்த பல சுவையான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். 1957இல்  தந்தை பெரியார் அவர்களை கைது செய்ய சட்ட மன்றத்தில் சட்டம் ஒன்று கொண்டுவர சி. சுப்பாராமனின் அவர்கள் முயற்சித்த போது அண்ணா அவர்களின் எதிர்ப்பு உரையை அழகாக எடுத்துக்காட்டினார்.


1962இல் பொது தேர்தலின் போது காஞ்சிபுரம் தொகுதியில் பேருந்து அதிபர் நடேசன் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டபோது அண்ணாவைப் பற்றிய அவதூறான வார்த்தைகளால் எழுதிய விளம்பரப் பலகை வைத்தபோது கழகத் தினர் அனைவரும் கொதித்தெழுந்த நிலையில், அண்ணா அவர்கள் அந்த விளம்பரப் பலகையின் கீழே தன் செல வில் பெட்ரோ மாக்ஸ் விளக்கு வைக் கும்படி கூறியதை நினைவூட்டி அரசியல் நாகரிகத்தை அண்ணா அவர்கள் பேணிக் காத்ததை பெருமையுடன் விளக்கினார்.


1967இல்  திராவிட முன்னேற்ற கழகம் முதன் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியபோது அண்ணா அவர்கள் தந்தை பெரியார் அவர்களை சந்திக்க சென்றதையும் பெரியார் அவர்கள் அது பற்றி விவரிக்கும் போது “அண்ணாவை யும் தி.மு.க. வையும் இதுவரை மிச்ச மீதம் இல்லாமல் திட்டித் தீர்த்தேன், இந்நிலையில் அவர்கள் என்னை சந்திக்க வந்தபோது புது மணப்பெண் போல வெட்கப்பட் டேன்” என்று 3.6.1967 விடுதலையில் பெரியார் அவர்கள் எழுதியதை சுட்டிக் காட்டினார்.


அண்ணா அவர்கள் இறுதிக்காலத்தில் தனது ஆட்சியில், 1. சுயமரியாதை திரு மணச் சட்டம், 2. தமிழ்நாடு பெயர் மாற்றம், 3.இருமொழிக்கொள்கை ஆகிய வற்றிற்கான சட்டங்கள் இயற்றியதையும் இவற்றை இனி வருங்காலத்தில் எந்த கொம்பனாலும் மாற்ற முடியாது என்று பெருமித்ததோடு அண்ணா கூறியதை நினைவூட்டினார்.
சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த விநாயகம் அவர்கள் “உங்கள் நாட்கள் எண்ணப்படுகின்றன ” என்று கூறியபோது அண்ணா அவர்கள் “எனது அடிகள் அளந்து எடுத்து வைக்கப்படுகின்றன ” என்று அதிக பொருள் கொண்ட பதிலை அழுத்தமாக கூறியதை அழகுற விளக்கினார். விடுதலை வாசகர் வட்டத்தின் அய்ம்பதாவது நிகழ்ச்சி என் பதை முன்னிட்டு அனைவர்க்கும் தேநீர் வழங்கப்பட்டது. இறுதியில் விடுதலை வாசகர் வட்டத்தின் அமைப்பாளர் மா.பவுன்ராசா நன்றி கூறினார்.


நன்றி : விடுதலை 14.02.2017


2 comments:

இராய செல்லப்பா said...

அறிஞர் அண்ணாவின் சொல்லழகு மறக்கமுடியாத து.
-இராய செல்லப்பா நியூஜெர்சி

முனைவர். வா.நேரு said...

உண்மைதான் அய்யா, எங்களைப் போன்றவர்கள் அதனை நேரில் கேட்டதில்லை. வாய்ப்பில்லை. ஆனால் அதனைக் கேட்டவர்கள் மெய்மறந்து சொல்லிடக்கேட்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே பெரிதாக இருக்கிறது. கேட்டவர்கள் அதனைக்குறித்து, தங்களைப்போன்றவர்கள் பதிவிடவேண்டும். நன்றி, வலைத்தளத்தில் வந்து கருத்து பதிவிட்டமைக்கு. வணக்கங்களுடன் , வா.நேரு,மதுரை.