Sunday, 7 August 2011

உரமாய் இளந்தளிர்களிடத்தில்

இளந்தளிர்
ஒன்று தன்னைத்தானே
மண்ணெண்ணய் ஊற்றி
கருக்கிக்கொண்டது

ஆடு மாடு
மேய்த்துக்கொண்டே
பகுதி நேரம் போல
பள்ளியில் படித்து
மாநில அளவில்
முதலிடம் பெற்றோரைப்
பற்றி பெருமையுடன்
படித்துக் கொண்டே
வந்தபொழுது
+2 வில் தோல்வி
மாணவி தற்கொலை
அதுவும் நான்
படித்த அரசு பள்ளியில்
என்ற செய்தி கண்டு
இதயம் நொந்தது

வெற்றி பெறுவது எப்படி
என்று பாடம் நடத்துவோரே!
தோல்வியை எப்படி
தாங்குவது என்பதையும்
சேர்த்து சொல்லுங்களேன்
பாடத்தில் தோற்று
வாழ்க்கையில் ஜெயித்தோரின்
வரலாற்றை பாடமாய்
நடத்துங்களேன் !

விழுவதும் எழுவதுமே
வாழ்க்கை
வீணாய் உயிரைத்
தொலைத்தல் கொடுமை
எனபதை உரமாய்
இளந்தளிர்களிடத்தில்
விதைக்க ஒரு
வழி காண்போமா ?

மகிழ்ச்சியாய் நம்பிக்கையாய்

மகிழ்ச்சியாய் நம்பிக்கையாய்
முகத்தில் அரும்பும்
வியர்வையை
தவழ்ந்து வரும்
இளந்தென்றல்
முகத்தில் படர்ந்து துடைக்கும் !

பறவைகள் தங்கள்
இன்னிசையால் எழுப்பும்
ஓசை உற்சாகத்தை
அள்ளி அள்ளி கொடுக்கும்

மகிழ்ந்து பேசி நடக்க நடக்க
நேற்றைய கவலையெல்லாம்
நம்மை விட்டு விலகி ஓடும

நடைப்பயிற்சியால்
மகிழ்ச்சியாய் நம்பிக்கையாய்
புலரும் காலைப் பொழுது

டால்பின் விலங்கா ?



கேளிக்கையாய்
டால்பினைக் கொல்லுதல்
வேடிக்கையாம் டென்மார்க்கில் !

வெள்ளை நிறக் கடல்
சிவப்பு நிறமாய்
மாறி நிற்கும் கொடுமை பாருங்கள் !

அறிவானது என்பார்கள்
விலங்குகளில் டால்பினை !

கத்தியால் குத்தி குத்தி
இரத்தம் வடியும் கொடுமையை
பார்த்து இரசிக்கும்
இவர்கள் விலங்கா ?

வழி தெரியாமல் செத்து
மடியும் டால்பின் விலங்கா ?
விளங்கவில்லை உலகில் !
வா. நேரு