திருச்செந்தூர் ஆதித்தனார்
கல்லூரியில் 1981-1984 ஆம் ஆண்டுகளில் நான் பி.எஸ்.ஸி. வேதியியல் படித்தபோது
,எனக்கு ஆங்கிலப் பாடத்தின் ஆசிரியராக இருந்தவர் திரு.கி.ஆழ்வார் எம்.ஏ.,எம்.பில்.,சார். அவர்கள்.பெரியாரியலை வாழ்வியலாக ஏற்றுக்கொண்டவர். தன் குழந்தைகள்
அனைவரையும் அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கவைத்தவர்.நான் பெரியாரியலை
வாழ்வியலாக அமைத்துக்கொண்டதற்கு வழிகாட்டியவர். நான் பி.எஸ்.ஸி படிக்கும்போது பெரியார் சிந்தனைகள் பட்டயப்படிப்பு,அஞ்சல் வழியில் படிக்கிறீர்களா எனக் கேட்டு நான் ,அந்தப்
பட்டயப்படிப்பில் சேர்ந்து படிக்கக்காரணமாக இருந்தவர்.நான் பெரியார்
சிந்தனைகள் படிக்கும் காலத்திலேயே திரு.ஆழ்வார் சார் அவர்களும்,அருப்புக்கோட்டை கல்லூரியில் முதல்வராக இருந்த திரு.ராசதுரை
அவர்களும் அதே பட்டயப் படிப்பு படித்தனர்.அவர்களோடு இணைந்து அந்தப்
பட்டயப் படிப்பு நேர்முக வகுப்புகளில் மதுரை,திருச்சி போன்ற இடங்களில்
கலந்து கொண்டபோதுதான் திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உள்ளிட்ட தலைவர்களை எல்லாம் நேரடியாகப் பார்க்கும்,கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது.1993-ஆம் ஆண்டு ,அய்யா
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற எனது திருமணத்தில் நேரடியாக கலந்து கொண்டு திரு.ஆழ்வார் சார் அவர்கள் வாழ்த்திப்
பேசினார்.மறைந்த எங்கள் முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி அவர்கள் மதுரையில் ஸ்பார்க் சென்டர் பார் ஐ.ஏ.எஸ்..ஸ்டிஸ் நிறுவனத்தை ஆரம்பித்து நடத்திய காலங்களில்
திரு.ஆழ்வார் சார் அவர்களோடு பல நேரங்களில் சந்திக்கவும் பேசவும்
வாய்ப்புக் கிடைத்தது.
நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில்
எனக்கு சீனியராகப் படித்துக்கொண்டிருந்தவர் நெல்லை கவிநேசன் என்னும் டாக்டர் திரு.
நாராயணராஜன் அவர்கள். திருச்செந்தூர் ஆதித்தனார்
கல்லூரியில் படித்து முடித்து உயர் கல்வி கற்று பின்பு அந்தக் கல்லூரியில் பேராசிரியராகப்
பணியாற்றி,முதல்வராக ஆனவர்.இப்போது திருச்செந்தூர்
ஆதித்தனார் கல்லூரிகளின் செயலராக இருக்கிறார்.திருச்செந்தூர்
கல்லூரியில் படிக்கும்போது அவர் நடுவராக இருக்க, நான் பட்டிமன்றத்தில்
ஒரு அணியில் இருந்து ,உவரியில் பேசியது நினைவுக்கு வருகிறது.70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்.
திரு. நெல்லை கவிநேசன் அவர்கள் தமிழில் எழுதிய ‘சட்டம் சந்தித்த பெண்கள்’
என்னும் நூலினை எனது ஆங்கிலப் பேராசிரியர் கி.ஆழ்வார்
அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.எனக்கு மட்டுமல்ல, மூல நூலின் ஆசிரியர்
திரு. நெல்லை கவிநேசன் அவர்களுக்கும் திரு.ஆழ்வார் சார் அவர்கள்தான் ஆங்கிலப் பேராசிரியர்.அந்த ஆங்கில நூல் மதிப்புரை வருகின்ற
16.11.2024 திருச்செந்தூர் அருகில் உள்ள தண்டுபத்து பள்ளியில் நடைபெறுகிறது.
அந்த நிகழ்வுக்கு தலைமை தாங்கும் வாய்ப்பு எனக்கு,எனது பேராசிரியர் பற்றியும் அவரது மொழிபெயர்ப்பு நூலைப் பற்றியும் பேசும் வாய்ப்பு
உண்மையிலேயே பெரும் வாய்ப்பு.மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும் வாய்ப்பு
எனக்கு. வாய்ப்பு உள்ள நண்பர்கள் நிகழ்வுக்கு வரலாம்.நிகழ்ச்சி விவரம் கீழே..
No comments:
Post a Comment