Thursday, 29 December 2022

உனக்கும் எனக்கும் என்ன ஒட்டு/உறவு?

 .

நமக்கும் 

ஆங்கிலத்திற்கும்

என்ன உறவு...?


நமக்கும் 

ஆங்கிலேயர்களுக்கும்

என்ன ஒட்டு?/உறவு?


ஆங்கிலப் புத்தாண்டை

நாம் கொண்டாடலாமா?

சங்கி ஒன்று

தான் சங்கி 

என்பதைச்சொல்லாமலேயே

உபதேசம் செய்து கொண்டிருக்கிறது..

வாட்சப்பில்...


எங்கிருந்தோ வந்தார்கள்

வெள்ளையர்கள் 

வாணிபம் செய்வதற்கு..

நமக்குள் இருந்த 

ஒற்றுமையின்மையால்...

ஆட்சியைப் பிடித்தார்கள்...

ஒன்றுபட்டோம் போராடினோம்

நாட்டை விட்டு விரட்டி விட்டோம்...


ஆனால் வெள்ளையர்கள்தான்

புத்தாண்டில் 

'ஹேப்பி நியூ இயர் ' 

எனச்சொல்லி எங்கள் தாத்தாக்களின்

கைகளைப் பிடித்துக் குலுக்கினார்கள்...

எங்கள் தாத்தாக்களை

சமைக்கச்சொல்லி

அவர்கள் பரிமாற சாப்பிட்டார்கள்...

கட்டி அணைத்து 

வாழ்த்துகள் சொன்னார்கள்...

புத்தாண்டுக் கொண்டாட்டத்தில்..


ஆமாம் ஆரியனே...

உனக்கும் எனக்கும் 

என்ன ஒட்டு/உறவு?


ஆரியனே ...

நீயும் வெளிநாட்டில் இருந்த

வந்த அந்நியன்தான்..

தந்திர மூர்த்திகளே...

தந்திரத்தால் எம் மண்ணை

எம் அரசியலை ஆக்கிரமித்த

கைபர் போலன் கணவாய்

வழியே ஊடுருவிய அன்னிய சக்திகளே... 


ஆரியனே ...

எங்கள் தாத்தாக்களை 

எட்டி நிற்கச்சொன்னாய்...

பார்த்தால் தீட்டு என்றாய்..

நடந்தால் தீட்டு என்றாய்...

படிக்கக் கூடாது என்றாய்...

படித்தால் நாக்கை அறுக்கச்சொன்னாய்

படித்ததைக் கேட்டால் காதில் 

ஈயத்தைக் காய்ச்சி ஊற்றச்சொன்னாய்!


அரண்மனைக்குள் புகுந்து

அரசர்களை வசப்படுத்தி

அவர்களின் சட்டங்களாலேயே

எங்களைச்சூத்திரன் என்றும்

பஞ்சமன் என்றும் பிரித்து

மனுவின் பெயரால்

பல நூறு ஆண்டுகள் 

கொடுமைகள் செய்யத்

தூண்டிய ஆரியனே...


எங்கள் தமிழர்கள் புத்தாண்டு

தைமுதல் நாள் என்றால்

இல்லை இல்லை

சித்திரை ஒன்று என

எம் இனத்தவரையே ஏவிவிட்டு\

சொல்லச்செய்யும் ஆரியமே...


எங்களுக்கு தமிழ்ப்புத்தாண்டு

தை ஒன்றுதான்...

சாதி ஒழிந்து சமத்துவம் பேணி

உலகின் பல பாகங்களில்

எம் தமிழர் ஏற்றமுடனே வாழத் 

துணை நிற்கும் 

ஆங்கிலம் எமக்கு எதிரி அல்ல!

உலக மாந்தர்களை 

ஒன்றாய்க் காணும்

ஆங்கிலப்புத்தாண்டும்

எமக்கு எதிரி அல்ல !

உரக்கச்சொல்வோம்...

இனிய ஆங்கிலப்

புத்தாண்டு வாழ்த்துகள் !...

விஷ் யூ ஏ ஹேப்பி

நியூ இயர்.....


          வா.நேரு,30.12.2022





2 comments:

கருப்பையா.சு said...

ஆங்கிலேயர்கள் இல்லையென்றால் இந்தியா என்ற நாடு உருவாகி இருக்காது. உங்கள் கவிதை உண்மையைத் தான் சொல்கிறது.

முனைவர். வா.நேரு said...

ஆமாம். நன்றிங்க அண்ணே