இன்றைக்கு வெளி வந்த ராணி இதழில் ,தமிழ் நாட்டின் மேனாள் தலைமைச்செயலாளர் திருமிகு.வெ.இறையன்பு அவர்கள் எனது நூலான 'கனவு போலத்தான் நடந்தது ' என்னும் நூல் பற்றியும் ,எனது பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.வீரிசெட்டி சார் அவர்களைப் பற்றியும் விரிவாக எழுதியிருக்கிறார். மிகவும் நெகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.மிகப்பெரிய விருது பெற்ற உணர்வும் , நிறைவும் எனக்கு ஏற்பட்டது. திரு வீரிசெட்டி சாரின் மகள் திருமதி மணிமொழி ஆசிரியர் அவர்கள் இன்று(06.05.2025) பெரியகுளத்தில் இருந்து செல்போனில் அழைத்து அழுவது போல உருக்கமாக அவரது அப்பாவைப் பற்றிப் பேசினார்.
நன்றி தெரிவித்தார்.பலரும் தொலைபேசியில் அழைத்துப்பாராட்டினர்.இந்த நூலை அழகாக அச்சடித்துக்கொடுத்த கீழடி வெளியீட்டகத்திற்கும்,அதன் உரிமையாளர் அண்ணன் பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கும்,ஓர் அருமையான அணிந்துரையை அளித்த திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் மேனாள் ஆங்கிலத்துறைத் தலைவர் பேரா.கி.ஆழ்வார் சார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
3 comments:
சிறப்பு சிறப்பு தோழர்
மிகவும் உருக்கமான பதிவு. தோழர்
நன்றிங்க தோழர்.எழுத்தாளர்,ஆசிரியர் உங்கள் பாராட்டு பெரும் மகிழ்ச்சி.
Post a Comment