Tuesday, 30 September 2025

அப்படியே பொருந்திப்போகும் வரிகள்

 

பூத்துக்குலுங்கும்

என்றார்கள்...

தொலைத்தொடர்புத்துறை

பொதுத்துறை ஆவதால்

வசந்தகாலம் வருகிறது...

என்றார்கள்..

விழுந்து விழுந்து பொதுத்துறை

ஆவதை ஆதரித்தார்கள்..

‘அவன் ஒரு பட்டு வேட்டி

பற்றிய கனாவில் இருந்தபோது

கட்டியிருந்த கோவணமும்

களவாடப்பட்டது’ என்றார்

கவிப்பேரரசு வைரமுத்து...

இன்றைய பிஎஸ்என்எல்

நிலைமைக்கு அப்படியே

பொருந்திப்போகும் வரிகள் அவை..

என்ன செய்வது விரித்து எழுதினால்

பல பக்கக் கவிதையாய் விரியும்..

பிஎஸ்என்எல் தொடங்கி

25 ஆண்டுகள் ஓடிப்போனது..

அக்டோபர் ஒன்று

பிஎஸ்என்எல் தின வாழ்த்துகள்

                              வா.நேரு

Tuesday, 16 September 2025

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில்...





வணக்கம். தந்தை பெரியாரின் 147-வது பிறந்த நாளான செப்டம்பர் 17 ,2025 புதன் கிழமை காலை 11.30 மணிக்கு 'பெண் கல்வியும் தந்தை பெரியாரும் ' என்னும் தலைப்பில் ,மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் பல்வகைப் பயன்பாட்டு அரங்கத்தில் உரையாற்றுகிறேன். வாய்ப்பு இருக்கும் நண்பர்கள்,தோழர்கள் கலந்து கொள்ள விழைகின்றேன்...