Tuesday 14 December 2021

பெரியாரைத் துணைக்கோடல்’ தந்த வாய்ப்பு.....

 


அய்யா ஆசிரியர் அவர்களின் தந்தை, திரு.சி.எஸ்.கிருஷ்ணசாமி அவர்கள் பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டவரல்லர். அதனைப் பற்றி அய்யா ஆசிரியர் அவர்கள், "என் தந்தையார் கடவுள் பக்தராகவும், மதவுணர்வாளராகவும் இருந்தார். அவற்றை எதிர்க்கும், சுயமரியாதைக் கொள்கைகளை ஏற்கும் பிள்ளைகளைத் தடுக்காத பரந்த மனம் _ பாச அடிப்படையில் _ பெரிதும் உதவிற்று என்பதே எனது ஊகம்’ என்று குறிப்பிடுகிறார்.


"என்னை இந்தக் கொள்கைக்குக் கொண்டு வந்தவர் எனக்கு ஆசிரியராகப் பள்ளியில் பணியாற்றிய அய்யா ஆ.திராவிடமணி பி.ஏ. அவர்கள் ஆவார்கள். என்னுடைய இயற்பெயர் சாரங்கபாணி. நான் _ சாரங்கபாணி _ ‘வீரமணி’ 'என்று அழைக்கப்பட்டேன். அண்ணா அவர்கள் “திராவிட நாடு’’ ஏட்டில் எழுதிய ‘கலிங்க ராணி’ என்னும் நாவலில் ‘வீரமணி’ ஒரு பாத்திரம்" என்று தன்னுடைய பெயர் மாற்றத்தை அய்யா ஆசிரியர் அவர்கள் குறிப்பிடுகிறார். "என்னுடைய படிப்புச் செலவுகளில் கூட பெரும்பகுதியை என் ஆசிரியர் திராவிடமணியே செய்து உதவினார்' என்றும் குறிப்பிடுகிறார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் அய்யா ஆசிரியர் அவர்கள் தந்தை பெரியாருக்கு, அன்னை மணியம்மையாருக்கு நன்றி சொல்வதைப் போலவே தனது ஆசான் ஆ.திராவிடமணி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டே இருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு மாணவரைப் பெற்ற அந்த ஆசிரியர் அய்யா ஆ.திராவிடமணி நமது போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியவரே.


அய்யாவின் அடிச்சுவட்டில் முதல்பாகத்தில்  தந்தை பெரியாரை முதன்முதலில் சந்தித்த அனுபவம் பற்றிக் குறிப்பிடுகிறார். பெரியார் அவர்களை முதன்முதலாகச் சந்தித்ததில் என் பிஞ்சு உள்ளத்திற்கு மிகுந்த மகிழ்ச்சி _ உற்சாகம் என்பது ஒரு புறமிருந்தாலும், அன்று நடந்த பல்வேறு சம்பவங்களின் தாக்கம் _ பொதுவாழ்வில், பலரும் ஏற்கத் தயங்கும் கசப்பான கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யும்போது ஏற்படும் எதிர்ப்புகளை எப்படிச் சந்திப்பது, எதிரிகளை எப்படி வெற்றி காண்பது என்பதற்கு ஓர் ஒத்திகையாகவும் அடித்தள-மாகவும் அமைந்துவிட்டது என்று கூறி, கடலூர் முத்தையா டாக்கீஸ்  திரைப்பட அரங்கில் நடைபெற்ற மாநாட்டையும், தந்தை பெரியார் பேசும்போது எதிர்ப்புத் தெரிவித்த கதர்ச்சட்டை இளைஞர் பற்றியும், அப்போது நிகழ்ந்த கூச்சல் போன்றவற்றையும் விவரிக்கும்  ஆசிரியர் அவர்கள், “அய்யா (பெரியார்) அவர்கள் அந்தக் கூச்சல், எதிர்ப்பு கண்டு கொஞ்சமும் சலிக்காமல், கலங்காமல் மேலும் தீவிரமாகத் தோழர்களைச் சமாதானப்படுத்தி அமைதியாக இருக்கச்சொல்லி ஆணை பிறப்பித்துவிட்டு வெண்கல நாதக் குரலில், சிலிர்த்த சிங்கமாகிக் கர்சித்தார்.’’


“நான் சொல்வதை அப்படியே நம்புங்கள்; ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல இங்கு வரவில்லை; உங்களுக்கு அறிவு, பகுத்தறிவு இருக்கிறது.அதனைப் பயன்படுத்திச் சிந்தியுங்கள்; சரி என்று பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள்; இல்லையேல் விட்டுத் தள்ளுங்கள். எனது கருத்தை மறுக்க எவருக்கும் உரிமை உண்டு; அதனால்தான் அதை எடுத்துச் சொல்லும் உரிமை எனக்கும் உண்டு’’  என்று சொல்லி, காரணகாரிய விளக்கங்களை அடுக்கடுக்காக ஆணித்தரமாகக் கூறியது கண்டு பலரும் தந்தை பெரியார் வழி நிற்கும் அளவுக்கு மனமாற்றம் அடைந்தனர். “என்ன நிதானம்! கொள்கை உறுதி! அஞ்சாமை! பதற்றப்-பட்டவர்களைப் பக்குவப்படுத்திய அந்தப் பண்பாட்டுப் பொழிவு என்னுள் பதியத் தொடங்கியது’’ என்று குறிப்பிடுவார்.


'வளமையை விரும்பா இளமையைக் கண்டேன்" என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் அய்யா ஆசிரியர் அவர்களைப் பற்றிப் பாடினார். அந்த வளமையை விரும்பா இளமை என்பது தனது வாழ்க்கை அனுபவத்தில் எப்படிக் கிடைத்தது என்பதனை அய்யா ஆசிரியர் அவர்கள் தனது ‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார்கள். மாணவப் பருவப் பிரச்சாரம் என்ற பகுதியில், "சேலம் நகரத்தில் செவ்வாய்ப்பேட்டை சுயமரியாதைச் சாலை வாசகசாலைக் கட்டடத்தில் தங்கி, தோழர்கள் வீடுகளில் உணவு அல்லது உணவு விடுதிகளில் உணவு; அங்கே செவ்வாய்ப்பேட்டை பகுதியில் இயக்கத் தோழர் ஒருவர் நடத்திக் கொண்டிருந்த முடி திருத்தகம் _ இவைகளில்தான் பகலில் பெரும்பாலான நேரங்களைச் செலவழிப்போம். முடிவெட்டும் நிலையத்தில் உள்ள இரண்டு நாற்காலிகளில் உட்கார்ந்து அவருடன் பேசிக் கொண்டிருப்போம். முடி வெட்டிக்கொள்ள யாராவது வந்தால், அவர் தொழில் தடையின்றி நடக்க நாங்கள் உடனே இரண்டு மூன்று தெருக்களில் சுற்றி வலம் வந்து திரும்புவோம். அதற்குள் அவர் 'வேலையை முடித்து' அனுப்பி விடுவார். எங்களுக்குத் தேநீர் முதலியவை அவரே வாங்கித் தந்து அன்புடன் உபசரிப்பார்" அய்யா ஆசிரியர் அவர்கள் தனது தொடக்க கால இயக்கப் பணிகளை விவரிக்கிறபோது வியப்பின் எல்லைக்கே போகிறோம். பட்டினி கிடந்த அனுபவம், தந்தை பெரியார் அவர்கள் தந்தி மணியார்டர் அனுப்பி மாணவத் தோழர்கள் பசியாற வழி வகுத்தது என்று அவர் குறிப்பிடும் பல நினைவுகள் நம்மை நெகிழ வைக்கின்றன.




தான் அரசு உதவித்தொகை பெற்றதையும், அதற்குக் காரணமான நிகழ்வையும் அய்யா ஆசிரியர் அவர்கள் சொல்லும் பகுதியில், திருக்குறள் அவர் வாழ்க்கையின் மேம்பாட்டுக்கு உதவியதைக் குறிப்பிடுகிறார். அய்யா ஆசிரியர் அவர்கள் நான்காம் வகுப்பு படிக்கும்போது கல்வி அதிகாரி வந்ததையும், அவர் மாணவர்களிடம் ‘திருக்குறளில் எத்தனை குறள்கள் உங்களுக்குத் தெரியும்? தெரிந்தவர்கள் யாரேனும் சொல்லுங்கள்’ என்று கேட்க, அய்யா ஆசிரியர் அவர்கள் மடமடவென்று பல திருக்குறள்களை ‘உரத்த குரலில் மேடையில் பேசுவதுபோல சொல்லத் தொடங்கினேன்' என்று குறிப்பிட்டு தான் திருக்குறள்களைச் சொன்னதையும், அதற்குக் காரணம் திராவிட இயக்கம் என்பதையும், அதனால் தான் பெற்ற அந்தக் கல்வித்தொகை, அந்தக் காலத்தில் அந்த நேரத்தில் தனக்கு எவ்வளவு பெரிய உதவி என்பதையும் நன்றியோடு குறிப்பிடுகிறார். “வள்ளுவரின் குறள் எனது வாழ்வை வளப்படுத்தியது. அதற்கு மூல காரணம் திராவிட இயக்கச் சார்பே ஆகும். அய்யாவின் அடிச்சுவட்டினைப் பின்பற்றியதால் 'பல கற்கும்' வாய்ப்பும், துணிவுடன் கூறவுமான சூழலும் ஏற்பட்டது. அது கல்விக் கண்ணைப் பெறவும் எவ்வளவு தூரம் உதவியுள்ளது பார்த்தீர்களா? ‘பெரியாரைத் துணைக்கோடல்' தந்த பயன் அல்லவா இது" என்று குறிப்பிடுகிறார்.


தந்தை பெரியாரின் அடிச்சுவட்டில் அய்யா ஆசிரியர் அவர்கள்; அய்யா ஆசிரியர் அவர்களின் அடிச்சுவட்டில் நம்மைப் போன்றோர். தந்தை பெரியார் மறைவுக்குப் பின், திராவிடர் கழகம் இருக்காது, தந்தை பெரியார் கொள்கை தழைக்காது என்று நினைத்தார்கள். ஆனால், தந்தை பெரியார் மறைந்து 48 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அவரது பெயரைக் கேட்ட மாத்திரத்தில் எதிரிகளின் தூக்கம் தொலைகிறது. இரத்த அழுத்தம் கூடுகிறது. அதற்குக் காரணம், தந்தை பெரியாரின் கொள்கைகளைத் தொடர்ச்சியாக எடுத்துச் செல்லும் அய்யா ஆசிரியர் அவர்களின் பெரும்பணி. உடல் பிணிகளைப் புறந்தள்ளி, தந்தை பெரியாரின் கொள்கைப் பெரும்பணியை பல வகையில் அய்யா ஆசிரியர் அவர்கள் எடுத்துச்சென்று கொண்டிருக்கிறார்கள். புதிய புதிய வழிகளில், புதிய புதிய நோக்கில் தந்தை பெரியாரின் கருத்துகள் மக்களைச் சென்று சேர்ந்து கொண்டிருக்கின்றன உலகம் முழுவதும்.


வாழ்க பெரியார்! வாழ்க அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்! அனைவருக்கும் மீண்டும் 'சுயமரியாதை நாள்' வாழ்த்துகள்.

முனைவர் வா.நேரு

நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ்- 01-12-2021

உலகத்தின் போக்கை மாற்றிய சில புத்தகங்கள்.....

உலகத்தின் போக்கை மாற்றிய சில புத்தகங்கள் என்னும் தொடர்சொற்பொழிவை ஆற்றுவதற்கான வாய்ப்பினை நான் பெற்றேன். நேற்று(5-12-2021) மாலை 7.30 மணிக்கு முதல் உரை.சுமார் 20 நிமிடங்கள் மட்டும்.வர்ஜீனியாவில் இருக்கும் ஆற்றல் மிகு கவிஞர் ம.வீ.கனிமொழி அவர்களின் ஒருங்கிணைப்பில்,புதுச்சேரி ஒரு துளிக்கவிதை அமைப்பின் பொறுப்பாளர் தோழர்  கவிஞர் தி.அமிர்தகணேசன்,தமிழ் அமெரிக்க ஊடகப் பொறுப்பாளர்கள்,வல்லினச்சிறகுகள் மின்னிதழ் ஆசிரியர் ராஜி ராமச்சந்திரன் உள்ளிட்ட பல ஆளுமைகள் இணைந்து  ஏற்பாடு செய்த  நிகழ்வு.’சங்கப்பாடல்கள் எளிமையாக்கம் ‘ என்னும் தலைப்பில் கவிஞர் இராஜி வாஞ்சி அவர்களின் ஆழமான,நுட்பமான உரை,’யாருமற்ற சாலை ‘என்னும் தலைப்பில் கவிஞர் அனுசுயாதேவி(அனுமா),கவிஞர் மாலதி  ராமலிங்கம்,கவிஞர் க.வீ.கனிமொழி ஆகியோரின் தங்கள் சொந்தக் கவிதை வாசிப்பு,நிறைவாக தோழர் கவிஞர் அகன் அவர்களின் ‘காலமெல்லாம் கவிதை’ என்னும் தலைப்பில் சொற்பொழிவு…மிக நன்றாக இருந்தது. நேரம் இருக்கும்போது கேட்டுப்பாருங்கள். தங்கள் கருத்தை வலைத்தளத்தில் பதிவிடுங்கள். நன்றி.

வா.நேரு 

 

Wednesday 1 December 2021

உனை அறிந்ததால்....

       

கொரனாவில் இருந்து

மீண்டு எழுந்து மீண்டும்

இளைஞர் போல்

பீடு நடை போடுகிறாய்!

இராணுவத் தளதியாய் 

எங்களுக்கு ஆணைகள் இடுகிறாய்...!


புதிது புதிதாய்

வியூகங்களை வகுக்கிறாய்!

இன்று புதிதாய்ப் பிறந்தவர்போல

இளம் இரத்தம் போல

எதிரிகளைச்சந்திக்கிறாய் !

அவர்களின் சவால்களை

செயல்களால் எதிர்கொள்கிறாய் !


நான் பிறந்து 

89 ஆண்டுகள் ஆனதாக

நீங்கள் சொல்கிறீர்கள்....

நான் என்றும்

என் எண்ணத்தில்...

வேகத்தில்...

செயலில்...

இருபதுதான் என்று 

சொல்லி சிரிக்கிறாய்....

80களில் இருக்கும் 

உங்களோடு ஈடுகொடுத்து

நடக்க இயலா

ஐம்பதுகள் ஆமாம்,ஆமாம்

என ஒத்துக்கொண்டு

வாய்விட்டுச் சிரிக்கின்றனர்...


எதிரிகளைக் களத்தில்

சந்திக்க தொடர்ச்சியாய்

நூல்களைக் கொடுக்கிறாய்!

நூலாம்படையாய் நம் 

இனத்தைச் சுற்றி அழிக்கும்

'பூநூல்'களை அழிக்க

நூலே துணை என

எங்களுக்குப் போதிக்கிறாய்!


உனை அறிந்ததால்

தந்தை பெரியாரை 

நாங்கள் அறிந்தோம்...

அவரின் மண்டைச்சுரப்புக் 

கொள்கைகளை அறிந்தோம்...


உனை அறிந்ததால்

வாழ்வின் துன்பங்களை

எதிர்கொண்டு அழிக்கும்

வளமான வாழ்வியல்

சிந்தனைகள் அறிந்தோம்...


உனை அறிந்ததால்

'கீதையின் மறுபக்கம்' அறிந்தோம்...

'வெறுக்கத்தக்கதே பிராமணியம்'

என்பதை நாங்கள் உணர்ந்தோம்

மற்றவருக்கும் உணர்த்திடத் துணிந்தோம்.


எத்தனை எத்தனை நூல்கள்!

நூலைப் படி! நூலைப் படி!

திராவிடர் கழக நூலைப்படி!

எனப் படிப்படியாய் 

பரம்பரை எதிரிகளை

வெற்றி கொள்ளும் 

நுட்பம் நாளும் கற்பிக்கிறாய்!


தந்தை பெரியாரின்

தனித்துவ மிகு கொள்கைகளை

தரணியெங்கும் கொண்டு செல்ல

அல்லும் பகலும் உழைக்கும்

எங்கள் அய்யாவே! ஆசிரியரே!

தமிழர் தலைவர் கி.வீரமணியே!




நன்றியோடும் மகிழ்ச்சியோடும்

நாங்கள் சொல்லி மகிழ்கின்றோம்

உங்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து!

89-ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்து!

வாழ்க! வாழ்க! வாழ்கவே!

நூறாண்டும் கடந்தும் 

நீங்கள் வாழ்க!வாழ்க! வாழ்கவே!


                         வா.நேரு,02.12.2021


 


வாழ்க!வாழ்க! அய்யா ஆசிரியர் கி.வீரமணி வாழ்க!

திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு 89-ஆம் ஆண்டு பிறந்த நாள் டிசம்பர் 2,2021.நாம் அனைவரும் உற்சாகமாக கொண்டாடும் 'சுயமரியாதை நாள்'.மிக உருக்கமான அறிக்கையை இன்றைய விடுதலையில் அய்யா ஆசிரியர் அவர்கள் தன் வாழ்க்கையைப் பற்றிக் கொடுத்துள்ளார்கள்.நமது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளை அய்யா ஆசிரியர் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம். வெல்லும் படை கொண்ட அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்க! வாழ்க! தந்தை பெரியார் கொள்கை வெல்க ! வெல்க!
அய்யா ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த உண்மை இதழில்(டிசம்பர் 1-15) வந்த எனது கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன். 






 

Friday 19 November 2021

திறனாய்வு போட்டியில் முதல் பரிசு பெற்ற எழுத்தாளர்-வழக்கறிஞர் சித்ராதேவி அவர்களின் திறனாய்வு....தீவிர சிகிச்சைப் பிரிவு

 



தீவிர சிகிச்சைப் பிரிவு-

சிறுகதை.
கதாசிரியர்:- வா.நேரு அவர்கள்
கதாசிரியர் பகுத்தறிவாளர் மற்றும் முற்போக்குச் சிந்தனையாளர்.கதையிலும் அது கலக்காமல் இருந்தால் எப்படி?
பிறப்பும், இறப்பும், சர்வசாதாரணமாக வந்துபோகும், சகல வசதிகளையும்( எல்லாம் மதம் சார்ந்த கோயில் உட்பட) உடைய,மிகப்பிரம்மாண்டமான மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவின், உள்ளே, வெளியே தான் ,கதையின் களம் .
கதையின் கதாநாயகனான முத்து, அவன் தனது தாயின் சிகிச்சைக்காக 15 நாட்களாக, அந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் அவனைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான் கதை.
தேவையில்லைன்னா கடவுளிடம் ஏன் போகிறான்? பயமும் சுயநலமும் தான் கடவுள் பக்திக்கு அடிப்படை என்ற முத்துவின் எண்ண ஓட்டம், பெரியார் சிந்தனையைத் தெளிக்கிறது.
வாய் ஓயாமல் பேசிக் கொண்டே இருக்கும் அம்மா, பேச முடியாமல் கண்ணீர் விடுவது கொடுமை முத்துவுக்கும்,நமக்கும்.
அங்கு ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் அந்த குழாய்களில் இணைப்புகள், அதன் மின் கருவிகளின் சப்தங்கள் தான், அந்த அமைதியை கலைப்பதாக இருந்திருக்க வேண்டும். ஒரு முறை அதற்குள் சென்று வந்தாலே, வாழ்க்கை இவ்வளவுதான் என்ற பக்குவம் வந்துவிடும்.
இதை சுடுகாடு அமைதி என ஆசிரியர் குறிப்பிடுவது பொறுத்தமே.
தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளே நோயாளியைப் பார்க்க, ஒரு நாளுக்கு ஒரு முறை தான்,அனுமதி அளிக்கிறார்கள்.அங்கி அணிந்து கொண்டுதான் உள்ளே அனுமதி.முத்து, மருத்துவரின் வெள்ளை நிற அங்கியை அணிந்து கொண்டு செல்வது, அந்த கதையின் இறுக்கத்தை தளர்த்தும் நிகழ்வு.
அந்த தீவிர சிகிச்சைப் பிரிவின் முன்,மூட்டை முடிச்சுகளோடு,,
கண்ணீர், கதறல் ,அழுகைகளோடு காத்திருக்கும் முகங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் ஆசிரியர்.
நேரில் பார்ப்பது போன்ற நேரடிக்காட்சி.
பலவித நோயாளிகள் 20 வயது, 42 வயது, 20, 30 ,10 வயது என பலவித நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவின் உள்ளே.அவர்களின் உறவுகள் வெளியே தள்ளாடும் தள்ளாட்டம்,
உள்ளே நோயாளிகள் படும் துன்பத்தைவிட, வலிகள் நிறைந்த பதைபதைப்புடன் கூடிய வலி.அதை அப்படியே காட்சிப்படுத்திய கதாசிரியருக்குப் பாராட்டுகள்.
20 வயதே ஆன பாம்பு கடித்த தன் மகனை எப்படியாவது பிழைக்க வைக்கும் தவிப்புடன் , அப்பா கோயிலுக்குப் போவதும் வருவதுமாக இருக்க ,அவன்
அம்மா ஒப்பாரியுடன்
,கண்ணீர் மல்க காத்திருப்பதும்
எவ்வளவு வேதனை..?!!
இன்னொருவர், சாலைவிபத்தில் அடிபட்ட தன் மகனை பற்றிப் புலம்பி புலம்பி தவிப்பதும்,அவர்
சிலுவையும்,பைபிளும், ஆக ஒருபுறம் பிரார்த்தித்துக் கொண்டு,
குடும்பத்தின் மேல் அன்பைப் பொழிகின்ற ஒரு ஆசிரியர், அளவுக்கு அதிகமான காய்ச்சலினால்,உள்ளே.அவரின்
பெண் குழந்தை செல்வி
ஒரு கடவுள் படத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கடவுளிடம், என் நேரமும் பிரார்த்தித்தபடி இருந்தது, நெஞ்சை கவ்வியது.
அவள் அப்பா
இறந்து விட்டார் என குழந்தை உணரும்போது, அவள் கையிலிருந்த, அந்த கடவுள் படம், விழுந்து, உடைந்து போவதாகவும் அவள் அதை கண்டுகொள்ளாமல், கடந்து போவதாகவும் எழுதியிருப்பார் கதாசிரியர்.சிறப்பான எழுத்து.
அந்த குடும்பத்தின் அன்பில் நான் உருகிவிட்டேன்.
அவசரத் தேவைக்காக மருந்து வாங்கச் சென்றால் ,அங்கு அலட்சியமாக மருந்து எடுத்துக் கொடுப்பது, ராக்கெட் வேகத்தில் செலவு.பொருள்களை அடகு வைத்தும், காடு ஆடு, மாடு இதனை விற்று கொண்டு வந்து, நோயாளிகளை காப்பாற்ற, உறவுகள் தவிக்கும் தவிப்பும்,கலக்கமும், மருத்துவமனை ஒரு தொழிற்சாலை போல, என முத்துவுக்கு தெரிவது வியப்பொன்றுமில்லை.
பிறப்பவர்கள்,இறப்பவர்கள்,இருப்பவர்கள், நோயாளிகளுக்கு மத்தியில், வாழ்ந்து பழகிவிட்ட, அந்த மருத்துவமனை ஊழியர்கள், மனசு மறுத்துப் போவதில் ஆச்சரியமில்லை.அவர்களை
காசுக்கு படுக்கும் ஒருத்தியோடு ஒப்பிட்டு இருப்பது,சரியாகப்படவில்லை.ஆசிரியர் வேறு உதாரணம் கூறியிருக்கலாமே?
ஒவ்வொருவருக்காகவும் வருத்தப்பட்ட மனநிலையில் அவர்கள் இருந்து கொண்டிருந்தால், பணியில் எப்படி செயல்பட முடியும்??என்பது என் கேள்வி.
கடவுள் உண்டா?மனிதம் உண்டா? என்பதே இந்தக் கதைக்குள் உள்ள
கேள்வி.
எதைத் தின்னால் பித்தம் தெளியும் "என்பவர்களுக்கு,மதம், கடவுள் ஒரு பிடிப்புத்தான்.
இக்கதையில்,
" இழந்தவன் குடும்பத்தில் இறைவன் இறக்கிறான் .
பிழைத்தவன் குடும்பத்தில் இறைவன் இருக்கிறான்."
"ஏதோ ஒரு நம்பிக்கையில் தான் மனிதன் இயங்கிக் கொண்டிருக்கிறான். அதில் மதம் அந்த நம்பிக்கையைக் கொடுக்கிறது."என்பது என் கருத்து.

திறனாய்வு போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற எழுத்தாளர் அர்ஷா மனோகரன் அவர்களின் திறனாய்வு....தீவிர சிகிச்சைப் பிரிவு

 சிறுகதை

தீவிர சிகிச்சைப் பிரிவு
எழுத்தாளர் : முனைவர் வா. நேரு
"நீங்கள் சுட்டிக்காட்டும் குறைகள் நீங்கள்
எங்களுக்குக் கொடுக்கும் பரிசு"
என்ற மருத்துவமனை வாசகத்தோடு ஆரம்பிக்கிறது தீவிர சிகிச்சைப் பிரிவு.
எழுத்தாளர் வாசகனின்
மதநம்பிக்கைகளையும் நடைமுறை சிக்கல்களையும் நாசுக்காய் சுட்டிக் காட்டி வாசிப்பின் முடிவில் நம்பிக்கை சார்ந்த உணர்ச்சிகள் அடிப்படையில் கட்டுண்டு கிடக்கின்ற மூளைக்குள் இருக்கின்ற கற்பனை கடவுளுக்கும் நம்பிக்கைகளுக்கும் அறுவை சிகிச்சை செய்து சமூகத்தின் குறைகளை வாசகனுக்கு சுட்டிக்காட்டுகிறார். தெளிவான சிந்தனையை தூண்டி வாசகனின் சிந்தனையை சீரமைத்து அதையே பரிசளித்து அனுப்பி வைக்கிறார்.
கதையின் நாயகன் முத்து
கடவுள் நம்பிக்கை மீதான தன் ஆதங்கத்தை வாழ வேண்டியவர்கள் ஏன் சாக வேண்டும் மருத்துவமும் காப்பாற்றாது நம்பிக்கையும் காப்பாற்றாது என்றான பிறகு சிலைகளும் சித்திரங்களும் பூஜைகளும் வேண்டுதல்களும் ஆரத்தி ஆராதனைகளும் எதற்கு என்ற சாமானியனின் பிரதிநிதியாகிறான்.
தனியார் மருத்துவமனைகளின் தேவையற்ற வசதிகளும் தேவைக்கதிகமான கட்டணங்களையும், முடிவில் அவர்களது கையறு நிலையும் நிச்சயமற்ற உத்தரவாதமற்ற சிகிச்சையும் ஒரு சாமானியனின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் அது என்ன தொழில் கூடமா பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய உயிர்களைக் காப்பாற்ற நம்பி வருகின்றவர்களின் வாழ்க்கை அதன்பின் அடங்கி இருப்பது ஒரு குடும்பத்தின் கண்ணீர்
குறிப்பிட்ட நபரின் குடும்பத்திற்கான முக்கியத்துவமும் என எத்தனை எத்தனை நுணுக்கங்கள் உள்ளடக்கிய இந்த வாழ்க்கையில் சர்வசாதாரணமாகக் கட்டணங்கள் நியமிக்கப்பட்டு உயிர்களோடு விளையாடும் தனியார் மருத்துவ மனைகள் எங்கே போய்க்கொண்டிருக்கிறன.
எல்லோரும் தனியார் மருத்துவமனையை நோக்கி விரைகிறோம் அப்படியென்றால் அரசின் ஒதுக்கீடுகளும் அரசு மருத்துவமனைகளும் என்ன செய்து கொண்டிருக்கின்றன ஏன் நாம் அங்குச் செல்வதில்லை என்ற எண்ணங்களும் பல்வேறு கேள்விகளை மனம் கேட்கத் தொடங்க சிந்தனைகள் வேறு திசை நோக்கி விரியத் தொடங்கி விட்டது.
தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு என்று தனி மருந்தக பிரிவு இருக்கக் கூடாதா என்பதில் நாம் அன்றாடம் பார்க்கக் கூடிய மருத்துவமனைகளின் நெருக்கடிகளையும் நமது பதட்டத்தைப் புரிந்து கொள்ளாத எதிராளியின் குணத்தையும் சிறப்பாகச் சித்தரித்துள்ளார்.
எல்லா மனிதர்களும் தனக்கு ஏற்படுகின்ற பயம் சுயநலம் இவற்றால்தான் இறைவனைத் தேடுகிறான் அதில் மாற்றுக்கருத்தில்லை. அதையே எழுத்தாளரும் சுட்டிக்காட்டுகிறார்.
மருத்துவமனைகளும் மருத்துவ கட்டணங்களும் அவை வெறும் தொழிற்சாலை கூடங்களே.
ஒரு ரயில் பெட்டியைப் போல் மருத்துவமனையும் பல்வேறு மனநிலையில் உள்ள மனிதர்களைச் சுமக்கிறது. புதிய வரவு மகிழ்ச்சியையும் ஒரு உறவின் மறைவு துன்பத்தையும் தருகிறது இந்த இன்பத்திற்கும் துன்பத்திற்கும் இடையில் மனிதன் படுகின்ற அல்லோலங்கள் தான் எத்தனை எத்தனை?
வாழ்ந்து விட வேண்டும் என்ற ஒன்றைத் தவிர மருத்துவமனைக்கு வர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?
வயது வித்தியாசமின்றி போராடும் நோயாளர்கள் அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் குடும்பத்தார். முயற்சிக்குத் தடை நிற்கும் மருத்துவமனை கட்டணங்கள். எல்லாவற்றையும் கடந்து நிற்கும் கடவுள் நம்பிக்கை.
கடைசியில் கைவிட்ட கடவுள்கள்
என் ஆசிரியரின் ஆதங்கம் நம்மைத் தொற்றிக்
கொள்கிறது.
கல்வியும் மருத்துவமும் அனைத்து சாமானியர்களுக்கும் குறைவின்றி கிடைக்க வேண்டும் அதில் எந்த பாகுபாடும் ஏற்றதாழ்வும் இருக்கக்கூடாது. பிறந்த எல்லா உயிர்க்கும் வாழும் உரிமை உண்டு அவ்வுரிமை பணத்தால் நிர்ணயம் செய்யப் படக்கூடாது.
வீட்டைவிற்று காட்டைவிற்று இறுதியில் பயனற்றுப் போன மருத்துவமும் செலவழித்த பணமும் நெஞ்சைப் பிழிகிறது.
மருந்துகளும் மருத்துவரும் இருக்கின்ற இடத்தில் கண்ணுக்குத் தெரியாத கடவுள் எதற்கு அவரால் மட்டும் எப்படிக் காப்பாற்ற முடியும் மருத்துவமனைக்குள் மத வழிபாட்டுக் கூடங்கள் எதற்கு?
இப்படி மனித உணர்வுகளோடு விளையாட உன்னதமாகக் கட்டமைக்கப்பட்டுத் திட்டமிட்டுத் திருடும் கூட்டங்கள் கையில் அல்லவா
மருத்துவமும் கல்வியும் இன்று சிக்கி தவிக்கிறது.
ஒரு இடத்தில் கூட கதையை வாசிக்கின்றோம் என்ற எண்ணம் வரவில்லை.
ஒரு மருத்துவமனையில் உட்கார்ந்து அனுபவித்த காட்சிகளாகவே உணரமுடிந்தது கதையின் இறுதிக் காட்சி நம்மை ஒரு சில நிமிடங்கள் உலுக்கிவிட்டது அந்த குழந்தைச் சாமி படத்தை விட்டு தந்தை பின் கதறிச் செல்லும் காட்சி மனம் கனத்தது. கண்முன் விரித்த அத்தனை காட்சிகளும் உண்மைக்குச் சாட்சிகளே.
அருமையான
வாசிப்பு அனுபவமும் சமூக கல்வியையும் போதித்தது இச்சிறுகதை.

Thursday 18 November 2021

தீவிர சிகிச்சைப் பிரிவு.....திறனாய்வு.....எழுத்தாளர் வாசுகி தேவராஜ்

 தீவிர சிகிச்சைப் பிரிவு - வா.நேரு

*******************************************
சமூகத்தின் இன்றியமையாத ஒரு அங்கமான மருத்துவமனையில் நிகழும் சம்பவம் தான் கதை.
"நீங்கள் சுட்டிக்காட்டும் குறைகள் எங்களுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு" இப்படியாக கதை களமாட ஆரம்பிக்கும் ஆசிரியர் கதையின் சூழலையும் காட்சியையும் அழகாய் அடையாளம் காட்டிவிட்டு நிற்கிறார்.
மருத்துவமனை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் எத்தனை கலை நயத்துடன் கட்டப்பட்டிருந்தாலும் அதை ரசிக்கவோ ஆராதிக்கவோ யாருக்கும் நேரம் இருப்பதில்லை. அல்லது மனம் அதில் ஒன்றுவதில்லை. அதிலும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு வருபவர்களின் நிலை பரிதாபகரமானது.
சில பல லட்சங்களை கொடுத்து அம்மாவை காப்பாற்ற துடிக்கும் முத்துவோடு இன்னும் சில நோயாளிகளின் உறவினர்கள்...
பாம்பு கடித்த பையனை தூக்கி வந்தவர்கள், விபத்தில் சிக்கிய மகனை கொண்டு வந்தவர், காய்ச்சல் கண்ட கணவரை அழைத்து வந்த குடும்பம் என பலர்....
தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டவர்களை பிணமாக எடுத்துச் செல்லும் சூழல்...
இவையெல்லாம் முத்துவுக்கு பழக்கப்படாதவை. ஒவ்வொரு நிகழ்வும் முத்துவை பெரிதும் பாதிக்க, மனிதர்களின் ஆற்றாமை துயரங்களை மிகச் சாதரணமாக கடக்கும் மருத்துவமனை ஊழியர்கள் புதிராக தோன்றுகிறார்கள்.
அவர்களின் இறுகிய மனப்போக்கை விலைமகளுடன் ஒப்பிட்டு காட்டுவது கொஞ்சம் நெருடல் தான்.
(மருத்துவமனை ஊழியர்கள் மனப்போக்கு பழக்கத்தால் - யதார்த்தத்தை புரிந்து ஏற்றுக்கொள்வதால் வரும் உணர்வு. விலைமகள் வாழ்வை வெறுத்து விரக்தியில் வரும் உணர்வு. இரண்டையும் ஒப்பீடு செய்வது சரியல்ல என்பது என் கருத்து)
மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிக்காக இரக்கப்பட்டு கலங்க ஆரம்பித்தால் மற்ற நோயாளிகளின் நிலை என்னவாகும் என்பதையும் சொல்லியிருக்கலாம்.
காய்ச்சல் கண்ட தந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்திருக்கும் சிறுமி கடவுள் படத்தை வைத்து பிரார்த்தனை செய்தபடி இருக்கிறாள். திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பார்களே அது போல.
"இனிவரும் உலகம்" புத்தகத்தில் பெரியாரின் சொற்களை "தேவை அற்றுப்போன இடமே கடவுள் செத்துப்போன இடமாகும்" எடுத்தாண்ட விதம் அழகு.
(பெரியாரின் புத்தகத்தை அடுத்த தலைமுறையை தேட வைக்கும் இடம்)
மருந்து வாங்குமிடத்தில் தாமதமாவது, பொறுப்பற்று நடந்து கொள்வது கண்டிக்கபட வேண்டிய ஒன்று தான்!
மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு ஆபத்து நேர்கையில் தத்தளித்து போகும் மனம் தன்னையும் அறியாமல் கடவுளை நாடுவதும் பிரார்த்தனை பலிக்காவிட்டால் உடைந்து போய் கடவுளை திட்டி தீர்ப்பதும் சாமானியர்களின் வாழ்வில் நிகழும் யதார்த்தம் என்பதை செல்வி மூலம் அழுத்தமாக சொல்கிறார் ஆசிரியர்.
வாழ்த்துகள் சார்
நேசமுடன்
வாசுகி தேவராஜ்

தீவிர சிகிச்சைப்பிரிவு ....திறனாய்வு

எனது சிறுகதைகளைத் தொகுத்து,சென்னை எம்ரால்ட் பதிப்பகத்தின் எழிழினி பதிப்பகம் 'நெருப்பினுள் துஞ்சல்' என்னும் தலைப்பில் வெளியிட்டது. அந்தத் தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையான 'தீவிர சிகிச்சைப்பிரிவு  ' என்னும் சிறுகதையை 'வாருங்கள் படிப்போம்' வாட்சப் குழுவில் திறனாய்வு செய்வதற்கான போட்டி அறிவித்து இருந்தார்கள்.அதில் 6 பேர் பரிசு பெற்றார்கள்.முதல் பரிசினை  சித்ராதேவி அவர்களும்,இரண்டாம் பரிசினை அர்ஷா மனோகரன் அவர்களும்,மூன்றாம் பரிசினை வாசுகி தேவராசன் அவர்களும்,நான்காம் பரிசினை பார்வதி நல்லியண்ணன் அவர்களும்,ஐந்தாம் பரிசினை இருவர்,வெண்ணிலா காமராஜ் அவர்களும் ம.வீ.கனிமொழி அவர்களும் பெற்றனர்.ஆண்களும் போட்டியில் கலந்து கொண்டாலும் பரிசு பெற்ற ஆறு பேருமே பெண்கள். அத்தனை பேருக்கும் பாராட்டுகளும்,வாழ்த்துகளும்... அதில் கலந்து கொண்ட சகோதரி பூங்கோதை கனகராஜன் அவர்களின் திறனாய்வு இது. ஒரு எழுத்தாளனுக்கு கொட்டிக் கொடுக்கும் பரிசே,படித்து விட்டுத் தனது கருத்தை எழுதுவதுதான்.படித்து,திறனாய்வு எழுதிய அத்தனை தோழமைகளுக்கும் இதயம் கனிந்த நன்றி. முக நூலில் ,'தீவிர சிகிச்சைப் பிரிவு " சிறுகதை பற்றி தனது திறனாய்வுக் கருத்துகளைப் பதிந்துள்ள கவிஞர் பூங்கோதை கனகராஜன் அவர்களின் கருத்து.....


தீவிர சிகிச்சைப் பிரிவு

ஆசிரியர்:முனைவர்.வா.நேரு 

பதினைந்து நாட்களாக அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளேயும்,வெளியேயும் அல்லலுறும் மனிதர்களின் உணர்வுகளை வலியோடு வடித்தெடுக்கிறார் ஆசிரியர். வார்த்தை உளி கொண்டு கதைச்சிலையில் படாமல் உள்ளத்தில் வலியாக கொத்துகிறது கதை.

மூட்டை முடிச்சுகளோடு அவசர ஆத்திரங்களுக்கு ஒதுங்கக் கூட பக்கத்திலிருந்தவரைப் பார்த்துக் கொள்ளக் கூறி மனம் நிறைய சுமையோடு ஆடியோடி அயராமல் உழைத்த அம்மா வாய் பேச முடியாமல் கண்ணில் நீர் வழியப் படுத்துக் கிடக்க, காசு தண்ணீராய்க் கரைய தாயைக் காப்பாற்ற வேண்டி பாடுபடும் முத்துவின் கண்களில் துயரக் காட்சிகள் விதவிதமான மனிதர்களோடு. 

பாம்பு கொத்திப் படுத்துக் கிடக்கும் மகனுக்காக மருத்துவமனைக் கோவிலில் வேண்டிக் கொள்ளும் குடும்பமும், சென்னையிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்து விபத்துக்குள்ளான மகனின் தவறைக் கவலையோடு விவரிக்கும் தந்தையின் சொற்களும் துயரத்தின் மறுஉரு.

காய்ச்சலுக்காக சேர்க்கப்பட்ட தந்தைக்காக கையில் சாமி படத்துடன் செல்வி வேண்டிக் கொண்டிருக்க, செல்வியின் அப்பா மருத்துவமனையில் காப்பாற்ற முடியாமல் அவளை விட்டு விட்டுப்போனதறிந்து கத்திக்கதறி ஓடிய செல்வியின் கையிலிருந்து விழுகிறது சாமிப்படம் . 

எத்தனை எத்தனை உணர்வுகள் மருத்துவமனையில் குவிக்கப்பட்டுள்ளன உறவினர்களின் மனதிலென திடுக்கிடும் சம்பவங்கள் கோர்த்து நம்மையும் கலங்க வைக்கிறார் ஆசிரியர். 

அவசரமாக மருந்து வாங்கச் சென்ற இடத்தில் அவர்கள் விளையாட்டாக பேசிக்கொண்டே தாமதப் படுத்த உங்கள் வீட்டில் இப்படி யாராவது படுத்திருந்தால் தாமதப்படுத்துவீர்களா என்று கேட்கும் இடம் வேதனையான யதார்த்தம்.

கோவில் வளாகத்தில் ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு கோவில் கட்டியவர்கள்,பணம் கட்ட செல்லும் இடத்தில்  தீவிர சிகிச்சைப் பிரிவினருக்கு மட்டும் தனி மருந்துக்கடை வைக்க மாட்டார்களா, மத வழிபாட்டுத் தலங்கள் இத்தனையை வைத்தவர்கள் இதனை வைக்கக்கூடாதா என எண்ணம் முத்துவின் மனதில்  ஓடியது.

இந்த இடத்தில் முத்துவின் ஆதங்கமாக சரியான கேள்வியில் முன் வைக்கிறார் ஆசிரியர். 

எத்தனை பணம் செலவானாலும் சுற்றத்தார் உயிரைப் பெரிதாக மதிக்கும் உள்ளங்களை இதைவிடத் தெளிவான வரிகளில் விளக்க முடியாது. படிக்கும் நம் மனம் சில்லுசில்லாக சிதற வலி நிறைந்த வார்த்தைகளை மருத்துவமனை வராந்தா வழியெங்கும் சிதற விட்டிருக்கிறார். 

கதை படித்து முடித்த பின் ஒரு நல்ல கதை படித்த திருப்தியுடனும், மனம் கொஞ்சம் சோகத்துடனும்  நிறைவது நிச்சயம். 

பூங்கோதை கனகராஜன்.

Thursday 28 October 2021

பெரும் துயரைக் கூட்டுகிறது....

 ஐம்பது  ஆண்டுகளுக்கு 

முன்னரே மரணம் என்றாலும்

அவரின் மரண நாள்

இன்றும் கூட பெரும்

துயரைக் கூட்டுகிறது....





நாட்கள் செல்லச்செல்ல 

துயரம் குறையும்..

உண்மைதான்..

ஆனால் 

மறந்து போன நினைவுகள்

எல்லாம் ஒட்டுமொத்தமாய்

பெரும்பாறையை 

மோதிக் கரைக்கும்

ஆற்று வெள்ள நீர் போல

மனதில் மீண்டும் மீண்டும் 

நினைவுகள் மோதும் நாளாய்

அவரின்  நினைவு நாள்...


பள்ளிக்கூடம் போன அப்பாவுக்கு

நெஞ்சு வலி....

டவுசர் போட்ட மைத்துனரோடு

பக்கத்து ஊரின்

மருத்துவமனைக்குச் சென்றவர்

பிணமாய்ப் போன 

கதையைச்  சொல்லவா ?


பிணமாய்க் கிடக்கும்

அக்காவின் கணவரை

தன் தாய்மாமனை

ஊருக்கு  கொண்டு செல்லும்

வழி அறியாமல்

அழுது தவித்து அல்லல்பட்டு

எங்கள் ஊருக்கு 

கொண்டு வந்து சேர்த்த

என் தாய் மாமன் கதை சொல்லவா?


பதின்மூன்று வயதில்

தாய்மாமனுக்கு வாக்கப்பட்டு

இருபத்து எட்டு வயதிற்குள்

ஐந்து குழந்தைக்குத் தாயாகி

திடீரெனக் கணவரைப் பறிகொடுத்து

கதிகலங்கி ...

பின்பு எதிர் நீச்சலில் 

எங்களை வளர்த்த எங்க 

அம்மாவின் கதை சொல்லவா?


அவர் உடல் 

உயிர் இல்லாது கிடந்த இடத்தில்

பசிக்கிறதே எனப் புரியாமல்

நான் அழுத கதை சொல்லவா?...


இறந்து கிடக்கும் அப்பா

இனி என்றும் நம்மோடு

இருக்க மாட்டார் எனும்

அறிதலின்றி

பாட்டுப் பாடிக்கொண்டே

நீர் மாலை எடுத்து 

வந்த கதையைச் சொல்லவா?


அப்பா இறந்த போன

சில நாளிலேயே....

கட்டி முடிக்கப்படாமல் கிடந்த

கார வீட்டினை 

முடிக்க எண்ணாமல்...

கட்ட வைத்து இருந்த

செங்கல்களை விற்பதற்கு 

ஆட்களைக் கூட்டி வந்த

உறவுகளைச்சொல்லவா ?...


எப்போதேனும்....

அப்பாவிடம்

படித்த மாணவர்கள்

அவரின் அருமைகளைச்

சொல்லும்போது .....

இவ்வளவு பெருமைக்குரிய அப்பா

இப்படி அகலாமாய் 

நம்மை விட்டுச்செல்ல 

வழிவகுத்த இயற்கையின்

கோணல் புத்தியை 

எண்ணி எண்ணி துயருறும்

நொந்த கதையைச் சொல்லவா?


ஐம்பது  ஆண்டுகளுக்கு 

முன் நிகழ்ந்த  மரணம் என்றாலும்

என் ஏழு வயதில் நிகழ்ந்த

என் அப்பாவின்  மரணம்

இன்றும் கூட பெரும்

துயரைக் கூட்டுகிறது....                                     


                             வா.நேரு   28.10.2021




Friday 10 September 2021

வேறு என்ன விருது வேண்டும் ஒரு ஆசிரியருக்கு

 காலங்கள் உருண்டோடி விடுகின்றன. உடன் படித்த,மிக நெருக்கமாக பழகிய நண்பர்கள் கூட கால வெள்ளத்தில் மறைந்து போகிறார்கள். நாமும் அவர்களை மறந்து போகிறோம். ஆனால் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்போது ,ஏற்படும் மகிழ்ச்சியும்,குதுகாலமும் சொற்களால் சொல்லிவிட இயலாதது.

எனது மாமா மகன்,மணிமாறன் எனது ஊரான சாப்டூருக்கு அருகில் உள்ள கோட்டைப்பட்டையில் விடுதியில் தங்கிப்படித்தான். இன்று படித்து முடித்து சாப்டுவேர் துறையில் பணியாளராக சென்னையில் பணியாற்றுகிறான். 3 ஆண்டுகளுக்கு முன்னால்,சென்னைக்கு போகும் வழியில்,மாமா,எங்கு இருக்கிறீர்கள்,உங்களைப் பார்க்கவேண்டும் என்றான். நான் அன்று மதுரை புத்தகச்சந்தைக்குள் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். நான் புத்தகச்சந்தைக்குள் இருக்கிறேன் என்றவுடன், மாமா, நான் அங்கேயே வந்து விடுகின்றேன் என்றான். வந்தான் சந்தித்தோம். அப்போது ஒரு பள்ளிக்கூடத்தின் கலை நிகழ்ச்சிகள் அங்கு நடந்து கொண்டு இருந்தது.அதைப் பார்த்த அவன், மாமா, நான் படித்த கோட்டைப்பட்டி பள்ளிக்கூடத்து மாணவ,மாணவிகள்தான் இங்கு கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள்.வாருங்கள் போய் பக்கத்தில் பார்ப்போம் என்றான். இருவரும் போனோம்,அப்போது மேடையில் ஒரு ஆசிரியர் நிகழ்வுகளின் இணைப்புரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்.

மணிமாறன்,மாமா அவர்தான் குணசேகரன் ஆசிரியர் என்றான். மிக நல்ல ஆசிரியர் என்றான். நான் படிக்கும் காலத்தில் எனக்குப் பலவகையிலும் அன்பாகவும் ஆதரவாகவும் இருந்தார் என்றான். அறிவியல் ஆசிரியர். அவர் வகுப்பிற்குள் வருவதே அவ்வளவு நன்றாக இருக்கும் என்றான். அமைதியாக வகுப்பிற்குள் வருவார். வந்து கரும்பலகையில் தேதியை முதலில் மாற்றுவார்.பின்பு இன்று நான் என்ன பாடம் நடத்தப்போகிறேன் என்று முதலிலேயே சொல்லி விடுவார்.சொல்லிவிட்டு எங்களுக்குப் புரியும்படி நடத்துவார். 9-ம் வகுப்பு,10 வகுப்பு அவர்தான் எங்களுக்கு அறிவியல் பாடம் நடத்தினார். சரியாகப் படிக்காத மாணவ,மாணவிகளிடம் மிகுந்த அக்கறை காட்டுவார். எல்லோரையும் குறைந்தபட்சம் 60 மார்க் அறிவியலில் எடுக்கவைக்கவேண்டும் என்பது அவர் நோக்கமாக இருக்கும்.அவரது வகுப்பை எல்லா மாணவ,மாணவிகளும் விரும்பிக் கேட்போம் என்றான்.நான் விடுதியில்தானே தங்கிக் படித்தேன். சில சேட்டைகள் அப்போது செய்வேன். அதற்கு கண்டிப்பார். அந்த கண்டிப்பு எங்களைத் திருத்தும் நோக்கம் கொண்டதாக இருக்கும் என்றான்.

அப்பா ஒருமுறை,என்னைப் பார்க்க வந்தார். குணசேகரன் சார் அவரிடம் பேசினார். "உங்கள் பையன் மிக நன்றாகப் படிக்கிறான். சின்ன சின்ன சேட்டைகள் இருக்கிறது.அந்தச்சேட்டைகளை மட்டும் விட்டுவிட்டால், மிக நல்ல மார்க் எடுத்து, நல்ல நிலைக்கு வருவான் " என்று சொல்லியிருக்கிறார். அப்பா வந்து என்னிடம்,டேய்,உங்க வாத்தியார் உன்னையைப் பத்தி மிக நன்றாக சொல்கிறார். அவர் சொல்படி நட " என்றார் என்று அவரை மேடையில் பார்த்தவுடன் வரிசையாக மணிமாறன் சொல்லிக்கொண்டே இருந்தான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனுக்கு வயது அப்போது 34,35 இருக்கும். 20 ஆண்டுகளுக்கு முன்னால் அவனுக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்.அவரைப் பார்த்தவுடன் இவ்வளவு செய்திகளைச்சொல்கிறானே என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.


நிகழ்வு முடிந்தவுடன் கீழே இறங்கி வந்தவுடன்,மணிமாறன் அவரிடம் சென்று பேசினான்.மணிமாறன், என்னை அவரிடம் அறிமுகப்படுத்தத் தொடங்கினான். 'நேரு ' என்று கூவுவதுபோல குணசேகரன் குறிப்பிட, நான் குணசேகரன் பெயரைச்சத்தம் போட்டுச்சொல்ல,மணிமாறன்,"மாமா, எங்க வாத்தியாரை முன்னரே தெரியுமா "என்றான்.இருவரின் உடல்களிலும் பல மாற்றங்கள். நாங்கள் இருவரும் கல்லுப்பட்டி,காந்தி நிகேதனில் +1,,+2 ஒன்றாகப் படித்தவர்கள் என்று சொன்னவுடன் அவனுக்கும் மகிழ்ச்சி. பார்த்து 30,35 ஆண்டுகளுக்குப் பின் ,பள்ளித்தோழரைப் பார்த்ததும், பேசியதும் அன்று முழுவதும் மனதில் ஓடியது.

எல்லாவற்றிற்கும் மேலாக, தனது மாணவனால், நல் ஆசிரியர் என்று புகழப்படும் குணசேகரன் இன்னும் எத்தனை மாணவர்கள் மனதில் ஆழமாய் பதிந்து இருப்பார் என்று வியந்தேன். உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்தது அந்த நாள்.  ஒரு மாணவன்,இன்று நான் மிக நல்ல நிலையில் இருப்பதற்குக் காரணம் இவர் என்று ஒரு ஆசிரியரை சுட்டி, மகிழ்ந்து போற்றுவதை விட வேறு என்ன விருது வேண்டும் ஒரு ஆசிரியருக்கு....


Wednesday 8 September 2021

முதல் ஹைக்கூ

 பறவைகள் உற்சாகஒலியால்

வளாகம் நிரம்புகிறது

கல்லூரி திறப்பு...

                                       ..


                             வா.நேரு,09.09.2021.

Tuesday 3 August 2021

கி.ரா.வின் கோபல்ல கிராமம் நூல் மதிப்புரை ....வா.நேரு








நன்றி : வல்லினச்சிறகுகள்- மின் இதழ் ஜீன்-2021









 

திராவிட மாடல்...வாருங்கள் படிப்போம் ....அய்யா ஆசிரியர் அவர்கள் உரை(4)

  

ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் என்ன சூழல் ?


நாம் கண்கூடாக அந்தப் பலனை இப்போதும் அனுபவித்துக்கொண்டிருக்கிற  சூழ்நிலை இருக்கிறது.இன்னும் தேவை அதிகமாக இருக்கிறது.காரணம் என்ன?.மக்கள் நல்வாழ்வுத்துறையிலே,மருத்துவ அடிக்கட்டுமானம் மிக முக்கியம்..முன்னாலே என்ன சூழல்?.ஒரு நூறாண்டுக்கு முன்னால் செல்லுங்கள். திராவிட மாடல்.திராவிடக் கருத்தியல் உருவாகுவதற்கு முன்னாலே என்ன சூழல்?.சமஸ்கிருதம் படித்தால்தான் அவர் மருத்துவராக முடியும் என்று சொல்லக்கூடிய சூழல்.சமஸ்கிருதம் படித்தால்தான் மருத்துவர் ஆகமுடியும் என்னும் சூழல்.சரி,எல்லோரும் சமஸ்கிருதம் படிக்க உரிமை உண்டா என்று சொன்னால் அவர்களே சொன்னார்கள்,சூத்திரர்களோ மற்றவர்களோ படிக்க முடியாது.பிராமணர்கள் மட்டும்தான் படிக்க முடியும்,பார்ப்பனர்கள் மட்டும்தான் படிக்கமுடியும்.என்று அவர்கள் வைத்திருந்தார்கள்.உயர் ஜாதிக்கார்ர்கள் மட்டுமே படிக்கமுடியும்.இன்றைக்கு எல்லோரும் சமஸ்கிருதம் படிக்கலாம.மற்றவர்கள் படிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது.ஏனென்றால் அந்த மொழி ஒரு உயிருள்ள மொழி அல்ல என்ற நிலையிலிருந்து  மாற்ற வேண்டும்  என்று முயற்சி செய்யும்  நிலை  ஏற்பட்டிருக்கிறது.அது வேறு செய்தி.ஆனால் நண்பர்களே,நீங்கள் நினைத்துப்பார்க்கவேண்டும். அன்றைக்கு இருந்த நிலையை மாற்றி அனைவரும் மருத்துவம் படிக்கலாம் என்ற நிலையை ஆக்கியது திராவிடர் ஆட்சி.பனகல் அரசர் அவர்கள் பிரதமராக இருக்கும்போது அன்றைக்கு பிரதமர் என்ற வார்த்தை உண்டு.பனகல் அரசர் அவர்கள் முதலமைச்சராக இருந்து ஆட்சி புரிந்த நேரத்திலே அன்றைக்கு அதனை நீக்கி இருக்காவிட்டால் இன்றைக்கு எல்லா சமுதாயத்தினரும்,மருத்துவராகி இருக்க முடியுமா? அனைவர்க்கும் அனைத்தும் கிட்டி இருக்குமா?.


அதன் மூலம் மக்கள் நல்வாழ்வுத்துறை என்று சொல்லக்கூடிய ,Health democration என்று சொல்லக்கூடிய ஜனநாயகப்படுத்துதல் ,பொதுமைப் படுத்தப்பட்டு எல்லோருக்கும் எல்லோமுமாக இருக்கும் வாய்ப்பு கிட்டியிருக்குமா? அருள்கூர்ந்து எண்ணிப்பார்க்கவேண்டும்.அதன் பிறகு இட ஒதுக்கீடு,போராட்டங்கள், நூழைவுத்தேர்வு, அதற்கு மறுப்புகள்.இது எல்லாம் ஒவ்வொரு காலகட்டங்கள்.இந்தத் தடை ஓட்டப்பந்தயங்கள் எல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.நமது நாட்டில் படித்தவர்களாக இருந்தாலும் கூட,அதையும் மீறி உயர் ஜாதிக்காரர்கள் படித்தால் எனனங்க ?அவங்களும் எல்லோருக்கும்தானே மருத்துவம் செய்யப்போகிறார்கள்,ஏங்க இவருக்கு இந்தக் குரோதமான உணர்ச்சி இருக்கிறது? என்று சில நண்பர்கள் கேட்கலாம்.அவர்களுக்கு ஒரு சம்பவத்தைச்சொல்லுகிறேன்.


அண்ண்ல் அம்பேத்கரின் நூலில்:


இந்த அறிவார்ந்த அரங்கத்திலே,சில செய்திகளை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கமாட்டீர்கள்.என் கையில் இருப்பது ,டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்களின் பேச்சும் எழுத்தும் என்னும் நூல். 5வது பாகம்.மகாராஷ்டிரா அரசாங்கம் அவருடைய கருத்துகளைத் தொகுத்து ,மகாராஷ்டிரா அரசு வெளியிட்ட்து இந்த நூல்.1989 லே வெளியிடப்பட்ட்து.அதிலே ‘Unfit for human association ‘.மனம் நொந்து,வெந்து புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்,தன்னுடைய அறிவார்ந்த கருத்துகளை,தன்னுடைய சுய அனுபவங்களை ,சமூகத்தில் பார்த்தவைகளையும்,ஆராய்ந்தவைகளையும்,மிகத் தெளிவாகச்சொல்கிறார்.”தீண்டாமைக் கொடுமை எப்படிப்பட்டது,ஜாதிய வெறித்தனம் எப்படிப்பட்ட்து? எந்த அளவிற்கு வந்திருக்கிறது என்பதற்கு ஒரு சம்பவத்தைச்சொல்கிறார்.இதைக் கேட்கிறபோது,திராவிட மாடலின் சிறப்பு என்ன என்பதனை,இந்த்த் திராவிட இயக்கத்தலைவர்கள் எப்படிப்போராடினார்கள்,இது எப்படி உருவாகியது? இது  எப்படி வளர்ந்திருக்கிரது என்பதை ஒப்பிட்டுப்பார்ப்பதற்கும் இது மிக முக்கியமான அடித்தளமாகும்.இது ஆங்கிலத்தில் ,இந்தப் புத்தகத்தில் 29 ம் பக்கத்தில் இருக்கிறது.”ஓடுக்கப்பட்ட மக்கள் மற்றவர்களோடு பழகுவதற்கே தகுதி அற்றவர்களாக ,கொடுமையான ஒரு சமுதாய,,வரணாசிரம தர்மம்,குல தர்மம்,குல அமைப்பு முறை,சாதி பிறவி அடிப்படையிலே இருக்கிறது என்று வெந்து ,நொந்து எழுதியிருக்கிற ஒரு செய்தியை தேசப்பிதா காந்தியார்  அவர்கள் எழுதிய நூலில் இருந்து அம்பேத்கர் எடுத்துக்காட்டுகிறார்.பலபேருக்கு,இன்றைய தலைமுறையினருக்கு அதிர்ச்சியாக இருக்கும்.இரண்டு செய்திகளைச்சொல்கிறார். இது இரண்டாவது செய்தி “The next case is equally eliminating.It is a case of an untouchable ,a school teacher in a village in Kathiyawar and it is reported in the following letter which appeared in the Young India,a journal published by Mr Gandhi in its issue of 12th December 1929.1929ஆம் ஆண்டு யங் இந்தியா இதழில் ஆசிரியருக்கு கடிதம் பகுதியில் வந்ததை அண்ணல் அம்பேத்கர் சுட்டிக்காட்டுகிறார்.அந்த ஆண்டில்தான்,1929-ல் சுயமரியாதை இயக்கம் சமத்துவத்தை மட்டும் சொன்னது இல்லாமல்,ஜாதிப்பட்டத்தையே தமிழ் நாட்டில் ஒழிக்கவேண்டும் என்று ,நாங்களும் ஜாதிப்பட்டத்தைத் துறக்கிறோம் என்று சுயமரியாதை மாநாட்டில் ஜாதிப்பட்டத்தை துறந்ததை இணையாக இன்னொரு பக்கம் நினைத்துக்கொண்டு  இதனைப் பாருங்கள்.


ஜாதியால்- நோயாளியைப் பார்க்க மறுத்த டாக்டர்:


அந்தக் கடிதம் ஒரு இந்து டாக்டர்,தன்னுடைய மனைவிக்கு பிரசவம் பார்க்க வர மறுத்ததையும்,அதனால் தனது மனைவியும் குழந்தையும் இறந்து போனதைச்சுட்டிக்காட்டி எழுதிய கடிதம்.மருத்துவத்துறை என்று சொன்னால் ஹிப்பாகரடிஸ் ஓத்  என்பது  மருத்துவர்களுக்குத் தெரியும்.எல்லோருக்கும் சிகிச்சை வேறுபாடில்லாமல் செய்ய வேண்டும் என்பதுதான் அந்தக் காலத்திலேயே கிரேக்க நாட்டு அறிஞர் சொன்னார் என்பதால்தான் அவரது பெயராலே அந்த உறுதிமொழி ஏற்றுக்கொள்வது.அந்த ஆசிரியரின் கடிதம் சொல்கிறது.சென்ற டிசம்பர் 5-ம் நாள்,1929,எனக்கு ஒரு குழந்தை பிறந்தது.அந்த ஆசிரியர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச்சார்ந்தவர். தாழ்ந்தவர் அல்ல,தாழ்த்தப்பட்டவர்.இது புரியாமல் சில பேர் பேசுகிறார்கள்.புரிந்து கொள்ள வேண்டும்.கொடுமையை அன்றைக்குச்செய்தார்கள்.அவர்கள் ஏன் செய்தார்கள் என்பதை உணர்ந்து கோபம் சமுதாயத்தில் வெடிக்க வேண்டும்.5-ந்தேதி குழந்தை பிறந்தது.7-ந்தேதி வயிற்றுப்போக்கு, நெஞ்சு எரிச்சல் போன்றவற்றால் என் மனைவி துன்பப்பட்டாள்.ஒரு டாக்டரை அழைக்கப்போனேன்.நீ கீழ் சாதி,உனது வீட்டிற்கு வரமுடியாது என்று டாக்டர் சொல்லிவிட்டார்.அரிசன் என்ற வார்த்தை அம்பேத்காருக்கு உடன்படாத வார்த்தை .என்றாலும் காந்தி பயன்படுத்திய அதே வார்த்தையை அம்பேத்கர் இங்கே பயன்படுத்துகிறார்.டாக்டர் வரமுடியாது என்று சொல்லிவிட்டார்.அங்கு இருந்த கிராமசபைக்கு சென்று டாக்டரை வரவைப்பதற்கு அந்த ஆசிரியர் கெஞ்சுகிறார்.மருத்துவ கட்டணம் 2 ரூபாய் உறுதியாக கொடுத்துவிடுவார் என்று சொல்லச்சொல்கிறார்.கிராமசபைக்காரர்கள் சொன்னதால் டாக்டர் வருவதற்கு ஒப்புக்கொள்கிறார்.ஆனால் அந்த அரிஜன் காலனியை விட்டு வெளியே குழந்தையைக் கொண்டு வந்தால்தான் நான் பார்ப்பேன் என்று சொல்கிறார்.தனது மனைவியை காலனியை விட்டு,பச்சைக்குழந்தையோடு  அழைத்து வருகின்றார்.அழைத்து வந்தால், நோயாளியான தனது மனைவியை நேராகப் பார்க்கவில்லை. அவர் தனது தெர்மாமீட்டரை ஒரு முஸ்லிம் பெண்ணிடம் கொடுத்தார்.அவர் என்னிடம் கொடுத்தார்.  நான் என் மனைவியிடம் கொடுத்து காய்ச்சல் பார்க்கவைத்தேன். பின்னர் திருப்பி இதே மாதிரி, என் மனைவியிடம் இருந்த என்னிடம்,என்னிடம் இருந்து முஸ்லிம் பெண்ணிடம், முஸ்லிம் பெண்ணிடம் இருந்து டாக்டரிடம் தெர்மா மீட்டர் போனது.விளக்கு வெளிச்சத்தில் தெர்மா மீட்டரில் பார்த்த டாக்டர் ,எனது மனைவிக்கு நிமோனியா காய்ச்சல் என்றார். உடனே அங்கிருந்த சென்ற டாக்டர் காய்ச்சலுக்கு மருந்து,மாத்திரைகளை மட்டும் கொடுத்து விட்டார். . மீண்டும் வந்து பாருங்கள் என்று அழைத்தபொழுது டாக்டர் வரவில்லை.அவர் வந்ததிற்கு ரூ 2 கொடுத்தபிறகும் (அந்தக் காலத்தில் 2 ரூயாய் என்பது அதிக மதிப்பு வாய்ந்தது) ,கெஞ்சி அழைத்த போதும் அவர் வரவில்லை.7-ந்தேதி எனது குழந்தையும் மனைவியும் இறந்து  விட்டார்கள் என்று அந்த ஆசிரியர் எழுதியிருப்பதை மனம் நொந்து,வெந்து டாக்டர் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். தாழ்த்தப்பட்டவர்களைத் தொடுவதை விட நாங்கள் மனிதர்களாக இல்லாமல் போகிறோம் என்று சாதி இந்துக்கள்  நடந்து கொள்வதைக் குறிப்பிடுகின்றார்.


திராவிட மாடலில் நல்வாழ்வுத்துறை


இப்போது அப்படியே திராவிட மாடலுக்கு வாருங்கள். இந்த்த் திராவிட மாடலில் ,மக்கள் நல்வாழ்வுக்கு என்று வரக்கூடிய இந்த வாய்ப்புகளில் ,’Democratising care ‘  என்று எழுதியிருப்பதை நண்பர் முரளிதரன் அவர்கள் கூட முரசொலியின் தலையங்கத்தில் அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்கள்.தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில்,ஆரம்ப சுகாதார நிலையக் கட்டுப்பாட்டை உருவாக்குவதில் தொடர்ந்து செயல்பட்டு வந்திருக்கிறது.திராவிட மாடல் என்ன செய்த்து? இந்தியாவிலேயே மிகச்சிறந்த அடித்தளக் கட்டமைப்பு-Infra Structure  இங்குதான் இருக்கிறது.தமிழ் நாட்டில் மாநில அரசுக்குச்சொந்தமான கட்டிடங்களில் பாதிக் கட்டிடங்கள் சுகாதாரம்,கல்வி சார்ந்தவை.


மத்திய அரசு மிக்க்குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்தாலும் ஆரம்ப நிலை மருத்துவத்தை வழங்குவதை நோக்கியே தமிழ்நாடு தன் நிதியைச்செலவழித்திருக்கிறது.திராவிடர் ஆட்சிகள்,திராவிட மாடல் என்றால் என்ன?.. மக்களுக்கு மருத்துவ வசதிகள் அமைப்பதில் மிக முக்கியமான கட்டமைப்பு  இந்த ஆரம்ப நிலைய சுகாதார நிலையங்கள்தான். இந்திய சராசரியோடு ஒப்பிடும்போது ,தமிழ் நாட்டின் ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.தமிழ்  நாட்டைப் பொறுத்தவரையில் 27215  பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது.ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரையில் 32884 பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்தான் இருக்கிறது.இதுதான் திராவிட மாடல்.வளர்ச்சி. தமிழ நாட்டைப் பொறுத்த அளவில் 12 கிராமங்களுக்கு ஒரு சுகாதார நிலையம் இருக்கிறது.இந்தியாவில் 25 கிராமங்களுக்கு ஒரு சுகாதார நிலையம் இருக்கிறது.குஜராத்,மகாராஷ்டிரா மாநிலங்களோடு ஒப்பிட்டால், தமிழ் நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிறப்பாகவும்,கூடுதல் வசதிகளோடும் செயல்படுகின்றன.மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 89 சதவீத்த்திற்கும் மேலானவை 24 மணி நேரமும் செயல்படுகின்றன.ஆனால் இந்திய அளவில் 39 சதவீதம், (89 சதவீதம் எங்கே? 39 சதவீதம் எங்கே?] மட்டுமே 24 மணி நேரமும் செயல்படுகின்றன.மிக அழகாக திராவிடன் மாடல் புத்தகத்தில் இருக்கும் செய்திதான் இதிலே மொழி பெயர்த்துக்கொடுத்திருக்கிறார்கள்.


 


இப்படி  ஆரம்ப சுகாதார நிலையங்களை உருவாக்கி விட்டாலும் அதில் பணி புரியும் மருத்துவர்கள்,செவிலியர்கள்,பல் மருத்துவர்கள்,மருந்து ஆளுநர்கள் தேவை.இதற்கு மருத்துவக்கல்லூரிகள் தேவை.இப்படியான மருத்துவப் பணியாளர்களை உருவாக்குவதிலேயே நாட்டில் இரண்டாவது இட்த்தில் இருக்கிறது தமிழ்நாடு.திராவிட இயக்கம்,கலைஞரின் ஆட்சி,மற்றவர்களின் ஆட்சி சிறப்பாக செயலாற்றியதின் விளைவு இது.இந்திய அரசின் விதிமுறையை விட தமிழ்நாட்டின் விதிமுறை மேலானது. தமிழ் நாட்டில் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் இருப்பதற்கு இதுதான் காரணம்.


நீட் தேர்வும் தமிழ் நாட்டின் மருத்துவக்கல்லூரிகளும்


நீட் தேர்வு வந்த்தற்கும் இதுதான் முக்கியக்காரணம்.விளக்கமாகச்சொல்லவேண்டியதில்லை.புரிந்து கொள்ளுங்கள்.இந்திய அரசின் விதிகளின்படி ,2015-ல் தமிழ் நாட்டில் 15 மருத்துவக்கல்லூரிகள் இருந்தால் போதுமானது.நண்பர்களே,அப்போதே தமிழ் நாட்டில் 45 மருத்துவக்கல்லூரிகள் இருந்தன.இந்தியா முழுவதும் 385 மருத்துவக்கல்லூரிகள்தான் இருக்கின்றன என்ற நிலையில் அதில் 12 சதவீதக் கல்லூரிகள் தமிழ் நாட்டில் இருந்தன.அதற்கு அபராதம் என்ன? மத்திய அரசின் தொகுப்புக்கு இங்கிருந்து  போகணும்…இட ஒதுக்கீடு அடிப்படையில் கொடுக்கவேண்டும் என்று நீதிமன்றம் சொன்னால்கூட மத்திய  அரசு கொடுக்காது.அது வேறு அரங்கத்திலே விவாதிக்கப்பட வேண்டிய செய்தி.எனவேதான் தனியார் மருத்துவக்கல்லூரிகளும் ஊக்குவிக்கப்படுகின்றன என்றாலும் மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் மருத்துவக்கல்லூரி இருப்பதை அரசு உறுதி  செய்திருக்கிறது.தரவுகளின் படி தமிழ் நாட்டில் பதிவு செய்யப்பட்ட  மருத்துவர்களின் விவரப்படி,தமிழ் நாட்டில் 10 ஆயிரம் பேருக்கு 17.7 மருத்துவர்கள் இருக்கிறார்கள்.ஆனால் இந்தியா முழுவதும் பார்த்தால் வெறும் 8.7 மருத்துவர்களே இருக்கிறார்கள்.ஆகவே திராவிட மாடல் என்பது எப்படிப்பட்ட்து?.செவிலியர்கள் எண்ணிக்கை என்று பார்த்தால் தமிழ் நாட்டில் 10000 பேருக்கு 44.4 பேர் இருக்கிறார்கள். இந்திய அளவில் 10000 பேருக்கு 22 செவிலியர்களே இருக்கிறார்கள்.


ஆயிரம் பாரட்டுகள்:

திராவிட மாடல் என்பது  எப்படிப்பட்ட்து?. நன்றாக நீங்கள் நினைத்துப்ப்பார்க்கவேண்டும்.எனவே அனைவருக்கும் அனைத்தும்.அதிலும் குறிப்பாக யார் ஒடுக்கப்பட்ட மக்களோ அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்.எனவேதான் அன்றைக்கு  கத்தியவாரிலே நடந்த நிகழ்வுக்கு ஜாதி அடிப்படை.ஆனால் தமிழ் நாட்டில் ஜாதி  ஒழிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து,சமத்துவத்திற்கு வாய்ப்பு  கொடுத்து,கல்வியிலே அவைகளைக் கொண்டுவந்து ,அதைப் பொதுமைப்படுத்தி,இன்னார்க்கு இதுதான் என்பதற்குப் பதிலாக எல்லோருக்கும் எல்லாம் ,’கல்வி நல்கா கசடருக்கு தூக்கு மரம் அங்கே உண்டாம் ‘ என்று சொன்னதைப் போல,மிக முக்கியமாக கல்வி வாய்ப்புகளை எல்லோருக்கும் கொடுத்து சமதர்மப் படுத்தி,குலதர்ம்க்தை அழித்த்து.அதுதான் திராவிட மாடல்.அதிலே இது மட்டும்,ஒரு பகுதி மட்டும் எடுத்துக்காட்டப்பட்டிருக்கிறது.இதைப் போல பல புள்ளி விவரங்களை எடுத்துச்சொல்லி சிறப்பாக வந்திருக்க்கூடிய இந்த நூல் ,அனைவருக்கும் பரப்பபடவேண்டிய ,செய்திகள் உள்ள நூல். ‘திராவிடத்தால் வீழ்ந்தோம் ‘என்று சொல்கிறவர்கள் எவ்வளவு பெரிய தவறு இழைத்தவர்கள் என்பதை அறிய இந்த நூலைப் படிக்கவேண்டும். “பொய்யிலே முக்காற்படி,புரட்டிலே காற்படி,வையகம் ஏமாறும் படி வைத்துள்ள நூற்களை ஒப்புவது எப்படி “ என்று புரட்சிக்கவிஞர் சொன்னார்களே,அதுபோல அந்தக் கருத்துகளை எல்லாம் தள்ளுபடி செய்து ,நூலைப் படி,அறிவைப் படி என்று சொல்லத்தக்க அளவிற்கு இதனைப் படியாகக்  கொள்ளுங்கள். இதனைப் போல அறிஞர்களே பல  நூல்களை எழுதுங்கள்.இவர்களைப் பின்பற்றுங்கள்.உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வாருங்கள்.அதற்காக நூல் ஆசிரியர்களுக்கு ஆயிரம் பாராட்டுகள்,வெளியிட்டவர்கள் உட்பட.நன்றி." என்று குறிப்பிட்டு அய்யா ஆசிரியர் அவர்கள் ஏறத்தாழ 1 மணி நேர்த்திற்கு மேலாக உரையாற்றினார்கள்.


 அய்யா ஆசிரியர் அவர்களின் உரைக்கு நன்றி தெரிவித்து,’வாருங்கள் படிப்போம்’ குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேரா.உமாமஹேஸ்வரி உரையாற்றினார்.கேள்வி பதில் நிகழ்ச்சியில் ,கேட்பாளர்களின் கேள்விகளுக்கு அய்யா ஆசிரியர் அவர்கள் பதில் அளித்தார். பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குநர் அய்யா சோம.இளங்கோவன் அவர்கள் கலந்து கொண்டு,உணர்ச்சிகரமாக தனது கருத்தினை நிகழ்வில்  பதிவு செய்தார்கள்.

                                                                                                                                                                                  (நிறைவு பெற்றது)

நன்றி : விடுதலை

திராவிட மாடல்...வாருங்கள் படிப்போம் ....அய்யா ஆசிரியர் அவர்கள் உரை(3)

 மக்களுக்கு பயன்படக்கூடிய இரண்டு செய்திகளை மட்டும் இந்தப் புத்தகத்தில் இருந்து எடுத்துக்கொள்கிறேன்.ஒன்று கல்வி.மற்றொன்று மக்கள் நல்வாழ்வு.இன்றைக்கு கரோனா காலம். நாம் ஒவ்வொருவரும் இந்தக் காலத்திலே அஞ்சி, அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறோம்.அதிலும் இரண்டாவது வீச்சு. .எங்கே மூன்றாவது வீச்சிற்கு போய்விடுமோ என்று நாம் அஞ்சிக்கொண்டிருக்கிற இந்தக் காலத்திலே ,ஒவ்வொருவருக்கும் துணிச்சலும் ஆறுதலும் தேவை ..சிகிச்சையும் தேவை என்று நினைக்கின்ற நேரத்திலே இன்னும் ஏராளமான மருத்துவ வசதிகளும் வாய்ப்புகளும் ,அடிக்கட்டுமானங்களும் வராதா என்ற ஏக்கத்திலே நாம் இருக்கிறோம்.அதே போல கல்வி என்பது  ஒரு காலத்திலே எப்படி இருந்தது? தயவு செய்து எண்ணிப்பாருங்கள்.கல்வி என்பது எல்லோருக்கும் கிடைத்ததா?.மிகத்தெளிவாக கா.பா.அறவாணன் அவர்கள் தமிழன் அடிமையானது எவ்வாறு என்ற  ஒரு நூலில் எழுதுகிறபோது சேர,சோழ,பாண்டிய அரசுகளாக இருந்தாலும் மக்களுக்கு கல்வியைக் கொடுக்கவில்லை.1901வரை தமிழர்களில் படிக்கத்தெரிந்தவர்கள் வெறும் ஒரெ ஒரு சதவீதம். கூட இல்லை,அதற்கும் குறைவான சதவீதம் என்று ,ஒரு 120 ஆண்டுகளுக்கு முன்னால் என்பதனை எடுத்துக்காட்டி அவரது  நூலில் எழுதியிருக்கிறார்.காரணம் என்ன?.படிக்க வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.எப்படி மறுக்கப்பட்டன?.வர்ணாசிரம தர்மம்.அந்த்த் தத்துவம்தான் திராவிட்த்திற்கு நேர் எதிரான தத்துவம்..அந்தத் தத்துவம் மனுதர்ம தத்துவம்.குலதர்ம தத்துவம்.


 எனவே திராவிடத்தத்துவம் சமத்துவ தத்துவம்.வர்ணாசிரமத் தத்துவம் சமத்துவத்திற்கு எதிரானது.அதனால்தான் காலம் காலமாக படிப்பு மறுக்கப்பட்டது.மற்ற  நாடுகளில் கூட பேதம் உண்டு.அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அழகாக ஒரு கருத்தைச்சொல்கிறார்.”What Gandhi and Congress have  done to Untouchables “ என்று ஒரு நூல்,1944-லேயே அம்பேத்கார் எழுதினார்.அந்த நூலிலே ஒன்றைத் தெளிவாகச்சொல்கிறார்.மற்ற நாடுகளில் கூடப் பேதம் உண்டு.அங்கே கறுப்பர்கள்,வெள்ளையர்கள் என்ற பேதம் உண்டு.ஆனால் அங்கே கூடப் படிக்க்க்கூடாது என்று சொன்னதில்லை.மீறிப்படித்தால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊத்துவோம்,இதை நீ மீறிப் படித்தால் உனது நாக்கை அறுப்போம் என்று சொன்னதில்லை.நாங்களாக கற்றுக்கொடுக்க மாட்டோம் என்பது மட்டுமல்ல,தானாக நீ கற்றுக்கொண்டாலும் விடமாட்டோம் என்று சொல்கிறார்கள் என்பதை எடுத்துச்சொன்னார்கள்.உதாரணமாக மண்டல் கமிசன் அறிக்கையிலே சொல்கிறபோது ஒன்றைச்சொன்னார்கள்.மண்டல் கமிசன் என்பது ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச்சார்ந்த மக்கள் மத்திய அரசாங்கத்திலே குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடவாய்ப்பு இல்லை என்பதை ஆய்வு செய்வதற்காக ,அரசியல் சட்டப்படி போடப்பட்ட,மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழு.அந்தக் குழு ஓர் அறிக்கையைக் கொடுக்கிறார்கள்.அந்தக் குழுவிற்குத்தலைவர் மண்டல்.அந்த அறிக்கையிலே எழுதுகிறபோது துரோணாச்சாரியார் ,ஏகலைவன் அந்தச்சம்பவத்தை அதிலே சுட்டிக்காட்டுகிறார்.சம்பூகன் கதையை எடுத்துக்கூறுகிறார்.இராமன் எப்படி சம்பூகனின் தலையை வெட்டினான் என்பதை சுட்டிக்காட்டுகிறார். இது மத்திய அரசுக்கு கொடுக்கப்பட்ட அறிக்கை.சமுதாயம் எப்படி இருந்த்து ? மனு தர்மக் காலத்திலே இப்படி இருந்தது.இதை மாற்றியதுதான் திராவிடர் ஆட்சி.


மாற்றுவதற்கு அடித்தளம் இட்டது ஒரு நூற்றாண்டுக்கு முன்னால்.எப்படி எல்லாம் அடித்தளம் இட்டது என்பதையெல்லாம் கூட இந்த நூலிலே  ,சிறப்பான வகையிலே எடுத்து ,அந்த முன்னோட்ட்த்தையும் எடுத்து சொல்லிக்காட்டியிருக்கிறார்கள்.இந்த முன்னோட்டங்களை எடுத்துக்காட்டி,மற்ற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி பெரியாரால்,சமூக மாற்றம் எப்படி வந்தது என்பதையெல்லாம் எடுத்துச்சொல்லி,ஒவ்வொன்றுக்கும் அடித்தளமாக இருக்கக்கூடிய செய்திகளை இங்கே சுட்டிக்காட்டுகிறார்கள்.ஒவ்வொரு வாய்ப்புக்கும் ,அதற்கு  அடித்தளம் எங்கே இருக்கிறது என்பதை இங்கே சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.குறிப்பாக உங்களுக்குச்சொல்ல வேண்டுமானால் இந்தக் கல்வி என்பது 1952-லே எப்படி இருந்தது?.அதற்குப்பிறகு அது எப்படி வளர்ந்திருக்கிறது? என்று ஒரு 50 ஆண்டுகாலத்தை எடுத்து இருக்கிறார்கள்.முன்னாலே இருந்த வாய்ப்பு என்பதைப் பற்றியெல்லாம் சொல்கிறார்கள்.1951-லே படிப்பறிவு 21 சதவீதமாக இருந்தது,பிறகு தமிழ் நாட்டிலே திராவிட மாடல் என்பதற்காக ,2011-லே படிப்பறிவு  80 விழுக்காடு.60 ஆண்டுகளிலே 4 மடங்கு அதிகரித்திருக்கிறது..ஒரு கருத்தை,தந்தை பெரியார் அவர்களின் போராட்டமே கல்வியைத்தான் முன்னாலே வைத்தார்கள்.இட ஒதுக்கீடு,சமூக நீதி என்பது இருக்கிறதே ,இந்த இட ஒதுக்கீடு இருக்கிறதே அது சாதாரணமான செய்தி அல்ல.


சமூக நீதி என்ற வார்த்தையே கூட எப்போது வருகிறது என்றால் சமூக அநீதி எங்கு இருக்கிறதோ,எங்களுக்கு நீதி தேவை என்று சமூக அநீதியினாலே பாதிக்கப்பட்டவர்கள்,நீதி கேட்பவர்கள்தான் சமூக நீதி கேட்பவர்கள். நாங்கள் நீதி கேட்கிறோம்.எனவே இந்த 60 ஆண்டுகாலத்திலே 4 மடங்கு வளர்ச்சி.ஆனால் அதற்கு முன்னால் ,ஒரு நூறாண்டுகளுக்கு முன்னால் 1920களில் என்ன நிலைமை?.ஒரு சம்பவம் உங்களுக்குச்சொல்லிக்காட்டவேண்டும். இராஜகோபாலாச்சாரியார் 1938-ல் ஆட்சிக்கு வந்தபோது ,தந்தை பெரியார் ஒரு கேள்வி கேட்டார்.கிராமப்புறங்களிலே இருந்த 3500க்கு மேற்பட்ட பள்ளிகளை மூடினீர்களே,இது நியாயமா என்று கேட்டார்.கள்ளை ஒழிக்கிறோம் என்று சொல்லி,அதற்காகக் கல்வியை ஒழிக்கிறோம் என்று சொல்கிறீர்களே,இது நியாயமா என்று கேட்டார்.அப்போது 7 விழுக்காடுதான் படித்திருந்தார்கள்.,இன்றைய மாற்றத்தில் திராவிட இயக்கத்தின் சாதனை என்பது  இருக்கிறது,இந்த 50 ஆண்டுகள் காலத்திலே இது ஆறு மடங்கு.ஆனால் அன்றிலிருந்து யார் இங்கு ஆட்சியில் இருந்தாலும் அவர்களை எதிர்த்துப்போராடி ,கல்வியை ஆட்சியாளர்கள் செய்யக்கூடிய நிலையிலே கொண்டு வந்து ,முன்னோட்டம் கொண்டு வந்தது திராவிட இயக்கம்.அந்த முன்னோட்ட்த்தை எல்லாம் இந்த நூலிலே கொடுத்திருக்கிறார்கள்.ஆதாரமாக சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.


 குலக்கல்வித் திட்டம் என்பது…1952-லே ஆச்சாரியார் அவர்கள் குலக்கல்வித்திட்டம் கொண்டுவந்து,அதற்குப் பெரிய போராட்டம் நடந்தது.தயவுசெய்து கண்ணை மூடிக்கொண்டு ,படித்த நண்பர்கள்,விருப்பு வெறுப்பு இல்லாமல் ஒன்றை யோசித்துப்பாருங்கள்.அந்தக் குலக்கல்வித்திட்டம் என்பது ,ஆரம்ப நிலைப்பள்ளிக்கூடங்களிலேயே அரை நேரம் படிக்கவேண்டும்,அரை நேரம் அப்பன் செய்யும் தொழிலைத்தான் பிள்ளை செய்யவேண்டும்  என்பது..உழுகிறவன் பிள்ளை உழுகவேண்டும்,வெளுக்கிறவன் பிள்ளை வெளுக்கவேண்டும்,..அப்படியே அவர் சொன்னார்.சிரைப்பவன் பிள்ளை சிரைக்கவேண்டும்,மலம்  எடுப்பவன்  பிள்ளை மலம் எடுக்கவேண்டும்,அதுதான் இந்தத் திட்டம் என்று சொல்லக்கூடிய நிலையிலே ,அது  இன்றைக்கு வேறு பெயரிலே  வருகிறது ..ஆபத்து இருக்கிறது என்று சொல்லக்கூடிய நிலையிலே,அன்றைக்கு அந்தக் குலக்கல்வித் திட்ட்த்தை ,கட்சி வேறுபாடு இல்லாமல் பெருந்தலைவர் காமராசர் ஆட்சி வந்தபிற்பாடு,அவருக்குத் துணையாக நின்று,அன்றைக்கு அந்தக் குலக்கல்வித்திட்ட்ம் ஒழிந்த காரணத்தால்தானே இன்றைக்கு இவ்வளவு பெரிய அஸ்திவாரம்.எனவேதான் மனுதர்மத்திற்கும் திராவிட்த்திற்குமான போராட்டம்.நான் சொன்னால் பிரச்சாரம் என்று யாரும் தவறாக  நினைத்துவிடக்கூடாது.ஆரிய திராவிடப்போராட்டம்.


ஆரியம் என்பது மனுதர்ம்ம்.இது வெறுப்பு அல்ல.இது ஓர் இனப்பார்வை அல்ல.தத்துவப்போராட்டங்கள்.இலட்சியங்கள் என்று வருகின்றபோது இருவேறு தத்துவங்கள்.’இன்னார்க்கு இதுதான்’,’ அது.அனைவர்க்கும் அனைத்தும்’.இது ஏற்கனவே இது உன் தலையெழுத்து. , பூர்வ ஜென்ம வினைப்பயன்.அதன் காரணமாகத்தான் … எனச்சொல்வது அந்த்தத்த்துவம்.”ஊளையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர் “ இது இந்தத் தத்துவம்.ஆகவே அந்த அடிப்படையிலே வருகிறபோது ,மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய செய்தி ,குலக்கல்வித்திட்டத்தை ஒழித்த பிற்பாடுதானே ஏராளமான பள்ளிக்கூடங்கள்.2-வது முறை ஆச்சாரியார் மூடியது 6500 பள்ளிக்கூடங்கள்.அதை எதிர்த்தப் போராட்டங்கள்.அதற்குப் பிறகு பள்ளிக்கூடங்கள் திறந்து,திறந்து,காமராசர் ஆட்சிக்காலத்தில் ஆரம்பித்து ,தமிழ் நாட்டில் திராவிட மாடலுக்கு ஒரு சிறப்பு என்னவென்றால் அரசியல் கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கலாம்,ஆட்சியை இழக்கலாம்.ஆனால் கல்வி,உத்தியோகம்,மக்கள் நல்வாழ்வு  போன்றவை சமுதாய வாழ்வியல்.சமுதாயத்திற்கு முதலீடுகள்.அவைகள் சோசியல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ்.அதைத்தான் இந்த நூலிலே,மிகச்சிறப்பாக நூலாசிரியர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.சோசியல் இன்வெஸ்ட்மெண்ட்,கல்விக்காக எவ்வளவு செலவழித்தாலும் அது செலவா? என்றால் இல்லை.அது சமூகத்திற்கு வரவு. சமூகத்திற்கு முதலீடு.சமுதாயத்திலே இருக்கிற இளைஞர்களுக்கு நாம் எவ்வளவுக்கெவ்வளவு கல்வியைப் பரப்புகின்றோமோ,அவ்வளவுக்கு அவ்வளவு அறிவு வளரும்.அதன் மூலமாகத்தான் உண்மையான வளர்ச்சி Sustained Growth என்று சொல்லக்கூடிய தொடர்ச்சியான வளர்ச்சி இருக்கிறதே ,அது முக்கியமாக வளர்வதற்கு அடிக்கட்டுமானம் கல்விதான். சமூகத்திலே மூளை வளர்ச்சி,அறிவு வளர்ச்சி என்று இருக்கிறதே,அந்த அறிவு ‘அற்றங்காக்கும் கருவி ‘என்று சொல்லப்படுவது இருக்கிறதே ,அதைக் காண வழிகாட்டுவதுதானே கல்வி.ஆகவே அந்தக் கல்வியை எல்லா மக்களுக்கும் கிடைக்காமல் ,விரல் விட்டு எண்ணக்கூடியவர்களுக்கு மட்டுமே உயர் ஜாதிக்கார்ர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது அவர்கள் ஏற்படுத்திய ஒரு  சூழல்,மீதி உழைப்பாளிகளாக இருக்க்க்கூடிய மக்களுக்கு கதவு திறந்து.மடை திறந்து விட்டது போல கல்வியைத் திறந்து விட்ட சூழல் எல்லாருக்கும் எல்லாமும் என்ற திராவிடச்சூழல் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்,.


 அனைவர்க்கும் அனைத்தும் என்று ஆனபிற்பாடுதான் சமூகத்திலே வளர்ச்சி ஏற்படுகிறது.வீக்கம் என்று இருந்த நிலை மாறி வளர்ச்சி என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிக அழகாக ஏற்பாடுகள் வந்திருக்கின்றன என்பதைத் தெளிவாக ஆரம்பித்திலிருந்து சுட்டிக்காட்டி  வருகின்றபோது உயர்கல்வி விகிதம் 48 சதவீதம் என்று சொல்லுகிற அளவிற்கு வந்திருக்கிறது.மற்ற எல்லா இடங்களையும் விட அதிகம் என்று மிகச்சிறப்பான இட்த்திற்கு வந்திருக்கிறது.இன்றைக்கு பொறியியல் கல்வியாக இருந்தாலும்,மருத்துவக்கல்வியாக இருந்தாலும் ஏராளமான கல்விகள்,வாய்ப்புகள் வந்தன. இந்த வாய்ப்புகள்,காலங்காலமாக யாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதோ அவர்களுக்கு திராவிடன் மாடல் முன்னுரிமை கொடுத்தது.இந்த இட ஒதுக்கீடு என்றால் சில பேருக்கு அதுவும் ஒவ்வாமை.இட ஒதுக்கீடு என்றால் எதற்காக?  இட ஒதுக்கீடு ஏன் தேவைப்படுகிறது?. “The Principle underlying social justice is nothing but supply on demand”. தேவை என்ன?.நாம் 100 பேருக்கு சமைக்கிறோம்.நூறு பேருக்கும் சமையல் இருக்கிறது,பந்தி சரியாகிவிடுகிறது என்றால் அங்கு போட்டியோ பிரித்துக்கொடுக்க வேண்டிய பிரச்சனையோ வராது.விமானத்தில்போகிறவர்கள் யாரும் அடித்துப்பிடித்து,இரயிலில் ஜன்னல் வழியாக இடம் பிடிப்பதுபோல இடம் பிடிப்பது இல்லை.ஆனால் நண்பர்களே ,அதே நேரத்திலே நீங்கள் நன்றாக சிந்திக்கவேண்டிய செய்தி என்னவென்றால் இருப்பது குறைவு.தேவைப்படுகின்றவர்கள் அதிகம்.Supply is less,Demand is more. Supply and Demand தானே பொருளாதாரத்தில் மிக முக்கியமானது.


 

அப்படி வருகின்றபோது,அதை எடுத்துக்கொடுக்கவேண்டுமென்றால் யாருக்குக் கொடுக்கவேண்டும்? சமூக நீதி என்று ஒன்று உண்டு.இயற்கை நீதியுமுண்டு.Natural Justice என்பதும் உண்டு.Social Justice என்பதும் உண்டு.அந்த அடிப்படையில் வருகின்றபோது நண்பர்களே,மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு செய்தி,Supply is less,Demand is more இப்ப யாருக்கு கொடுக்கணும்?யாரு அதிக பசி ஏப்பக்காரனோ ,அவனைப் பந்தியிலே உட்காரவைப்பதுதான் மனிதாபிமானம். Human approach.. மனித நேயம்.காலங்காலமாக பட்டினியில் இருக்கிறான்.அவனை முதலில் பந்தியில் உட்காரவையுங்கள்.ஏற்கனவே அஜீரணத்தால் இருப்பவனை,அவனைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்.கொஞ்ச நாளைக்கு அவருக்கு உணவு கொடுக்காமல் இருந்தால் அவருக்கும் நல்லது.மற்றவர்களுக்கும் நல்லது.ஆகவே அப்படிப்பட்ட ஒரு அருமையான சூழலை உருவாக்குவதுதான் இட ஒதுக்கீடு.


எல்லோருக்கும் நிறைய இடங்கள் இருக்கிறது என்றால் இட ஒதுக்கீடே தேவைப்படாதே.இட ஒதுக்கீடு என்பதும் காலங்காலமாக  இருக்கவேண்டிய அவசியமும் இல்லையே.பேதம் இருப்பதாலும்,இடங்கள் குறைவாக இருக்கின்ற காரணத்தாலும்தான் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது.யாருக்கு கொடுப்பது என்றால், காலங்காலமாக யார் வஞ்சிக்கப்பட்ட மக்களோ,யார் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களோ,அவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்று சொல்வது.அதுதான் “Democratising Education “..அதுதான் “Democratising Health “ .அதுதான் “Democratising Human Capital “.அதுதான் இந்த நூலிலே,மிகச்சிறப்பான வகையிலே பேராசிரியர் கலையரசன் அவர்களும்,அவருக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடிய பேராசிரியர் விஜய பாஸ்கர் அவர்களும் மிக அழகாக ,பாராட்டுக்குரிய நிலையிலே.செய்திருக்கிறார்கள்அப்படி வருகிறபோது கல்வி,அந்த வாய்ப்பு வருகிறது.

 


அருமை நண்பர்களே,அடுத்த பகுதி –மக்கள் நல்வாழ்வு.இன்றைய காலகட்டத்திலே பார்க்கவேண்டும். குஜராத் மாடல்,குஜராத் மாடல் என்று சொன்னார்கள்.அங்கே மூட நம்பிக்கை ஒரு பக்கம்.இங்கே மூட நம்பிக்கை ஒழிப்புப்பிரச்சாரம்,பகுத்தறிவுப்பிரச்சாரம் இருந்த காரணத்தால் யாரும் இங்கு போய் எருமை மாட்டுச்சாணத்தை எடுத்து உடம்பிலே பூசிக்கொண்டு அதன் மூலமாக கரோனா போய்விடும் என்று கருதக்கூடிய நிலைமை இங்கே வரவில்லை. ஆனால் குஜராத்திலே அது இருக்கிறது.மருத்துவர்கள் அதனை மறுத்துச்சொல்கிறார்கள்.பசுமாட்டு மூத்திரத்தைக் குடித்தால்,கோமியம் என்ற பெயரால் குடித்தால் கரோனா குணமாகிவிடும் என்று உத்திரபிரதேசம் போன்ற இடங்களில் செய்கின்றபோது,அறிவியல் அறிஞர்கள் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை,என்று சொல்கிறார்கள்.அந்தப் பணியை திராவிடர் இயக்கம் செய்த்து மட்டுமல்ல,திராவிடர் ஆட்சி அதற்கு எல்லாம் துணை போகாத அளவிற்கு  ஒரு பகுத்தறிவு ஆட்சியாக ,சிறப்பாக இருக்க்க்கூடிய ஒரு வாய்ப்பை உருவாக்கியது.அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனே இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்கு காணிக்கை ஆக்கப்பட்ட ஆட்சி என்று சொன்னார்கள்.அறிவுக்கு புறம்பான கருத்துகளையோ,மூட நம்பிக்கைகளை வலியுறுத்தக்கூடிய கருத்துகளையோ அவர்கள் செய்யவில்லை.பின்னாலே நழுவி,நழுவி மற்றவர்கள் நழுவியிருக்கலாம்,ஆனால் நண்பர்களே,சுகாதாரத்துறையிலே வரக்கூடிய வாய்ப்புகள் என்ன?,இந்த இட ஒதுக்கீட்டினால் எல்லா இடங்களிலும் எல்லோருக்கும் மருத்துவம்.இந்த இட்த்திலே ஒன்றைச்சுட்டிக்காட்ட வேண்டும்.இது மிக முக்கியமானது.இந்த சுகாதாரத்துறையைப் பொறுத்த அளவிலே,நண்பர்களே,திராவிடர் இயக்கத்தின் பங்கு என்பது அன்று அடித்தளம் போட்டதால் ,இன்றைக்கு இவ்வளவு பெரிய வளர்ச்சி.இவ்வளவு கரோனா உச்சகட்டத்திலே இருக்கும்போதும் ,சமாளிக்க முடியும் என்ற  அளவிற்கு ,மக்களைக் காப்பாற்ற்க்கூடிய அளவிற்கு அந்த வாய்ப்புகள்,திராவிட இயக்க வளர்ச்சியினாலே ஏற்பட்டிருக்கிறது.இதனை யாரும் மறுக்கமுடியாது.

                                                                                                                                                                            (தொடரும்)