Saturday, 27 December 2014

பி.கே.படத்திற்கு இந்துத்துவா எதிர்ப்பும் அத்வானி ஆதரவும்

ஆமீர்கான் நடித்து வெளிவந்துள்ள 'பிகே' திரைப்படம், இந்து மதத்தை அவமதிப்பதாகவும் இழிவுப்படுத்துவதாகவும் உள்ளது என அந்தப் படத்துக்கு எதிராக இந்து மத அமைப்புகள் சில போர்க்கொடி தூக்கியுள்ளன.
அதேநேரத்தில் இந்தப் படத்தில் நியாயமான கேள்விகள்தான் எழுப்பப்பட்டிருகிறது என்று இன்னோர் தரப்பினரின் கருத்துக்கள் தெளிவுப்படுத்த முயல்கிறது.
திரைப்படங்களுக்கு எதிராக பல தரப்பட்ட அமைப்புகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் ஆமீர்கான் நடித்து வெளிவந்துள்ள 'பிகே' படத்துக்கு இந்து மத அமைப்புகள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து, இந்த படத்துக்கு தடை விதிக்கக் கோரி புகார் அளித்துள்ளனர்.
'பிகே' படத்தில் மதத்தின் அடிப்படையில் பின்பற்றபடும் சில சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள் குறித்து பல கேள்விகள் நேரடியாக எழுப்பட்டிருப்பதே இவர்களின் தற்போதைய எதிர்ப்புக்கான காரணமாக இருக்கிறது.
ஆமீர்கான், அனுஷ்கா ஷர்மா நடிப்பில் வெளிவந்துள்ள இந்த படம் பாக்ஸ் ஆஃபிஸின் ஹிட்டாகி இருந்தாலும், இந்தப் படத்தில் லவ் ஜிகாத் திணிக்கப்படுவதாகவும், இந்து மதத்தின் நம்பிக்கைகள் அனைத்தும் எள்ளி நகையாடப்பட்டுள்ளதாகவும் வட மாநில இந்து மத அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. இவரது படங்களுக்கு எதிர்ப்பு கிளம்புவது இது ஒன்றும் முதல்முறை அல்ல. முன்னதாக இவரது 'முன்னா பாய் எம்.பி.பி.எஸ்.', 'த்ரீ இடியட்ஸ்' போன்ற படங்கள் எதிர்ப்புகளை சந்தித்திடாமல் இல்லை.
இந்தப் படத்தில் வேற்று கிரகவாசியாக பூமியில் வந்து இறங்கும் ஆமீர்கான், தான் வந்த வேற்று கிரக வாகனத்தின் சாவியை திருடனிடம் பறிகொடுக்கிறார். அதனை தேடும் வகையில் தனது பயணத்தில் சந்திக்கும் மனிதர்கள், அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், நடந்துகொள்ளும் விதங்கள் ஆகியவற்றை பார்த்து வியப்படைகிறார்.
சமூகத்தின் செய்லபாடுகள் மீது அவருக்கு பல்வேறு கேள்விகள் எழுகிறது. இந்தக் கேள்விகளுக்கான விடையும் அவரது வாகனத்தின் சாவியும் கிடைத்ததா? என்பதே இந்த படத்தின் கதையாக உள்ளது.
" 'பிகே' திரைப்படம் இந்து மத தர்ம சாஸ்திரத்தை அவமதிக்கும் நோக்கத்தோடு இயக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பயங்கரவாதம் இருந்தாலும, அவை அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து ஏவப்படுவதினாலும், அவர்களின் நிதி உதவியானால் மட்டுமே நடக்கிறது.
ஆனால், இந்தப் படத்தில் பாகிஸ்தானியர்கள் அனைவரும் இனிமையானவர்கள் என்ற வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்து மதத்தை பின்பற்றுபவர்களாகவும் உண்மையான இந்தியர்கள் என்ற நோக்கத்தோடும் இந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதற்காக இந்திய அரசியல் சாசன சட்டப் பிரிவு 295 பிரிவு ஏ-வின்படி இந்தப் படத்துக்கு தடை விதிக்கக் கோருகிறோம். அதேபோல இந்தப் படத்தை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி, தயாரிப்பாளர்கள் விது வினோத் சோப்ரா, சித்தார்த் ராய் கபூர் மற்றும் ஆமீர்கான் மீதும் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று இந்து மத அமைப்பின் சட்டப் பிரிவு தமது புகாரை டெல்லி காவல் நிலையத்தில் பதிவு செய்துள்ளது.
ஒரு பக்கம் இந்து அமைப்புகள் இந்தப் படத்துக்கு எதிர்ப்பை பதிவு செய்துகொண்டிருந்த வேளையில், அவர்களின் எதிர்ப்புக்கு எதிராகவும் 'பிகே' படத்துக்கும் அதில் வினவப்பட்டுள்ள கேள்விகளுக்கும் ஆதரவு தெரிவித்து ட்விட்டரில் தங்களது குரலை எழுத்து முழக்கமாக பதிவு செய்து வருகின்றனர் மற்றொரு பிரிவினர்.
இதனால் கடந்த இரண்டு நாட்களாக #BoycottPK மற்றும் #WeSupportPK என்ற ஹேஷ்டேகுக்கும் போர் நிலவுகிறது. பொதுப்படையாக திரைப்படங்கள் மீது தடை விதிக்க கோரப்படுவதும் திரைப்படத்தை பார்க்காமலே அதனை ஆதரிக்கும் விதமும் சமூக வலைதளங்களின் ஆதிக்கத்தால் பெருகி கொண்டே வருகின்றது.
அந்த வகையில் நேற்று (திங்கட்கிழமை) ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #BoycottPK என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றது. அந்த ஹேஷ்டேகை எதிர்த்து இந்தப் படத்துக்கு ஆதரவு தெரிவித்து வருபவர்களால் #WeSupportPK என்ற ஹேஷ்டேகில் கருத்துக்கள் பகிரப்பட்ட நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.
ட்விட்டரில் 'பிகே'-வுக்கு எதிராகவும் ஆதரவாகவும் பதிவான கருத்துக்களில் சில:
ராஜேஷ் குமார் சிங் (‏@neelnabh): மகாராஷ்டிர அரசு இந்தப் படத்து வரிவிலக்கு அளித்தால், இதனை கண்டிப்பாக எதிர்க்க வேண்டும்.
சரண்யா (@sharanya): பிகே அற்புதமான படம். இதில் எந்த மதத்தினரும் புண்படுத்தப்படவில்லை. தவறாக புரிந்துகொண்டவர்களிடம்தான் தவறு உள்ளது.
விவேக் பன்சால் (‏@ivivekbansal): ஆமீர்கான், ராஜ்குமார் ஹிரானி ஆகியோர் இந்து மத கடவுளை அவமதித்துவிட்டனர்.
ஆஷிஷ் சவுத்ரி (‏@chash): ஒரே கடவுள் தான். மனிதர்கள் தான் மதங்களை உருவாக்கி போரை ஏற்படுத்துகின்றனர்.
நதீம் ஃபரீக்கி (‏@BLASTERUAE): 'பிகே' படத்தை பார்த்தேன் இந்த ஆண்டின் மோசமான திரைப்படம் இது தான்.
அகீரா (‏@TheAkeira): பிகே-வை நான் ஆதரிக்கிறேன். மதத்தால் பிரிவினை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை.
நிதிஷ் (‏@Nitish): நான் ஓர் இந்து. நான் இந்த படத்தை எதிர்ப்பவர்களை எதிர்க்கிறேன். இந்த படம் அருமையான படம்.
ரவீந்திர ஜடேஜா (@SirJadeja): பிகே படத்தில் நாம் வணங்கும் இறைவன் சிவனை கிரிமினல் போல சாலையில் ஓடவிட்டுள்ளனர். இந்தப் படத்தை வேறு ஒரு இயக்குனர் வேறு மதக் கடவுளை கொண்டு சித்தரித்து இயக்கி இருந்தால் மாற்று மதத்தினர் நம்மை போல அமைதியாக இருந்திருக்க மாட்டார்கள்.
திரைப்படங்களை முன்னிறுத்தி இதுபோன்ற எதிர்ப்புகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. முன்னதாக இதே போன்ற எதிர்ப்பு நிலையை ஹைதர், ஹாப்பி நியூ இயர், மதராஸ் கஃபே, கவும் தே ஹீரே ஆகிய படங்கள் சந்தித்துள்ளன.
நன்றி : தி இந்து தமிழ் - 23.12.2014 
Senior BJP leader LK Advani has hailed Aamir Khan-starrer "PK" as a "wonderful and courageous film".

A movie buff, Mr Advani recently watched the Rajkumar Hirani directorial. He took a liking to the film and feels that a majority of people should watch it.

"Hearty greetings to Rajkumar Hirani and Vidhu Vinod Chopra for a wonderful and courageous film that they have produced" Mr Advani said in a statement.

"We are fortunate to have been born in a vast and variegated country like India. This however casts on all patriots a duty to ensure that nothing weakens the unity of the country -- neither caste nor community nor language nor region, and certainly not religion," he added.

Featuring Aamir as an alien, the film takes a hard hitting swipe on organised religion, god and godmen.

Mr Advani believes that religiosity is for "our nation an inexhaustible source of spiritualism, and so of ethical conduct. Those who run down religion, any religion, are doing a great disservice to the country and to its unity".

"It is this cardinal lesson that emerges clearly out of this recently released film 'PK' which has excellent performances by the protagonists Aamir Khan, Anushka Sharma and Boman Irani,"he added.

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

படத்திற்கும நூலிற்கும் எதிர்ப்பு தெரிவித்தால் படமும் வராது, நூலும் வெளிவராது
ஒரு வேளை இதைத்தான் எதிர்பார்க்கிறார்களோ

முனைவர். வா.நேரு said...

உண்மை சுடும்தானே....செயற்கையாகத் தடுத்திட நினைத்தால், இன்றைய இணைய உலகத்தில் நடக்காது. நன்றி அய்யா , வருகைக்கும் கருத்திற்கும்.

R.Sathuragiri Rajavel said...

இவர்களின் பிரச்சினை pk படம் அல்ல..தன்னை தானே விளம்பர படுத்தி கொள்ள கையாலும் ஒரு மட்டமான உத்தி..பெரியாரை விடவா ஒருவர் கடவுளை விமர்சிக்க இயலும் அவரின் கேள்விகே இன்னும் பதில் சொல்லி முடியவில்லை..தீவிரமான வைஷ்ணவ குடும்பம் என்னுடையது.கடவுள் இல்லை என்று சொன்னால் சுட்டே விடுவார்கள்..ஆயினும் எனது நம்பிக்கையை அவர்களிடம் வெளி படுத்தி கொள்ளவில்லை.நாத்திகவாதி கும் பகுதறிவாதிகும் வேறுபாடு உண்டு..கடவுள் என்று ஒருவர் இருந்து அவர் எபோலாவை குணா படுத்தினால் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை..கடவுளின் பெயரால் இந்த கூட்டம் அடிக்கும் கூத்துகளே ரௌத்திரத்தை வர வைகின்றது.உனது பிரச்சினைக்கு எல்லாம் தீர்வு என்று கடவுளை கை காமிதவனே மனித குலத்தின் முதல் எதிரி..அதை தான் இன்று மத்தியில் ஆளும் காவி கூட்டம் செய்து கொண்டு இருக்கிறது..இவர்களின் ஆட்டத்தை பாக்கும் போது பெரியாரின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது..செருப்பு ஆண்ட தேசம் தான..வெங்காயம் எவன் ஆண்டால் என்ன...

முனைவர். வா.நேரு said...

"கடவுள் என்று ஒருவர் இருந்து அவர் எபோலாவை குணப்படுத்தினால் எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை.".அருமையான பார்வை தம்பி. கருத்திற்கு மிக்க நன்றி..