திறக்கும்போது
ஆயிரம் செய்திகள்
குவிந்து கிடக்கிறது
வாட்ஸ் அப் கூடைக்குள் !
எதை எடுப்பது
எதைப் படிப்பது
எனத் தீர்மானிக்கும்முன்பே
புதிதாய்
பத்து பத்தாய்
வந்து விழுகிறது
வாட்ஸ் அப் கூடைக்குள் !
ஒரு கிராம் தங்கத்தை
ஓராயிரம் டன்
மணல்களை அகற்றி
எடுப்பது போல
அலசி அலசித்தான்
எடுக்க வேண்டியிருக்கிறது
நல்லது எது என்று !
அரிதான முத்துக்களாய்
சில நேரம்
அகப்படுகின்றன
கவிதைகளாய் ...
சில நேரம் அரிதான
தகவல்களாய்
ஆனால் பல நேரம்
படித்த செய்திகளே
திரும்பத் திரும்ப
திரும்பத் திரும்ப
போதுமடா ! போதும்
எனத் தோன்றுகிறது ...
சில நேரம் குப்பைகள்
போல மொத்தமாய்
குவியும்போது
மீண்டும் கடிதம்
எழுதும் காலத்திற்கு
போய் விடுவோமா
எனத் தோன்றுகிறது !.......
ஆயிரம் செய்திகள்
குவிந்து கிடக்கிறது
வாட்ஸ் அப் கூடைக்குள் !
எதை எடுப்பது
எதைப் படிப்பது
எனத் தீர்மானிக்கும்முன்பே
புதிதாய்
பத்து பத்தாய்
வந்து விழுகிறது
வாட்ஸ் அப் கூடைக்குள் !
ஒரு கிராம் தங்கத்தை
ஓராயிரம் டன்
மணல்களை அகற்றி
எடுப்பது போல
அலசி அலசித்தான்
எடுக்க வேண்டியிருக்கிறது
நல்லது எது என்று !
அரிதான முத்துக்களாய்
சில நேரம்
அகப்படுகின்றன
கவிதைகளாய் ...
சில நேரம் அரிதான
தகவல்களாய்
ஆனால் பல நேரம்
படித்த செய்திகளே
திரும்பத் திரும்ப
திரும்பத் திரும்ப
போதுமடா ! போதும்
எனத் தோன்றுகிறது ...
சில நேரம் குப்பைகள்
போல மொத்தமாய்
குவியும்போது
மீண்டும் கடிதம்
எழுதும் காலத்திற்கு
போய் விடுவோமா
எனத் தோன்றுகிறது !.......
- எழுதியவர் : வா.நேரு
- நன்றி : எழுத்து.காம்
2 comments:
உண்மை .முற்றிலும் உண்மை. இந்த நவீன உலகத்தில் சகித்துக் கொள்ளத்தான் வேண்டும் நானும் ஸ்மார்ட் போன் வைத்திருக்கிறேன் என்ற பெருமைக்காக புகைப்படத்தை போடுபவர்களையும்,எந்த செய்தி வந்தாலும் ஃபார்வட் பண்ணுபவர்களையும்.
நன்றி !....
Post a Comment