நிகழ்வும் நினைப்பும் 2018(2) : மூட நம்பிக்கை முடை நாற்றம்....
பாராட்டப்பட வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்:
ஆந்திர மாநிலம் சட்டமன்ற உறுப்பினர் நிம்மல ராம (நாயுடு) அவர்கள் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியவர். வாழ்த்தப்படவேண்டியவர்.மூட நம்பிக்கை முடை நாற்றம் வீசுகின்ற நமது நாட்டில் ,அந்த முடை நாற்றத்தை தனது ஓட்டு வங்கியாக மாற்றுவது எப்படி எனும் கலை பல சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் மக்களுக்கு உண்மையிலேயே நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் அகற்ற நினைப்பது இந்த மூட நம்பிக்கை முடை நாற்றத்தை அகற்றுவதைத்தான். அதுவும் அறிவியல் கண்டுபிடிப்புகளான கணினி,செல்பேசி பொன்றவற்றைப் பயன்படுத்தி அரண்டு போய் இருக்கும் மக்களை மேலும் மேலும் அரள வைக்கும் வகையில் பேய்,பிசாசு மூட நம்பிக்கை கதைகள் திட்டமிட்டுப்பரப்படுகின்றன. ஒலி,ஒளிபரப்பபடுகின்றன. இதனை முறியடிக்கும் வகையில் செயல்பட்ட நிம்மல ராம(நாயுடு) அவர்களைப் பாராட்டுவோம்.
பேய்', பிசாசுகள்' பயத்தைப் போக்க சுடுகாட்டில் உண்டு, உறங்கிய எம்.எல்.ஏ
அமராவதி, ஜூன் 26 ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பால கோல் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் நிம்மல ராம நாயுடு. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இவர், தனது தொகுதியில் உள்ள பாலகோல் புறநகர் பகுதியில் இருக்கும் சுடுகாடு ஒன்றில் நேற்று முன் தினம் இரவு உணவு சாப்பிட்டு அங்கேயே கட்டில் போட்டு தூங்கியுள்ளார்.
அந்தசுடுகாடுகடந்தபல ஆண்டுகளாக யாரும் பயன் படுத்தாமல் சிதிலமடைந்து இருந்துள்ளது. இதனை அடுத்து, ராம நாயுடுவின் கோரிக்கையை ஏற்று மாநில அரசு சுடுகாட்டை புனரமைக்க ரூ.3 கோடி ஒதுக்கியது. ஆனாலும், இந்த திட்டத்திற்கு யாருமே டெண்டர் எடுக்கவில்லை.
திட்டம் இழுபறியாககிடந்த நிலையில், ஒரு ஒப்பந்தக்காரர் முன்வந்தார். பணிகள் தொடங்கிய நிலையில், அங்கு பேய், பிசாசு உலவுவதாக வந்த வதந்தியை அடுத்து தொழிலாளர்கள் யாரும் பணி செய்ய முன்வரவில்லை. இதனால், கடுப்பான எம்.எல்.ஏ., ராமநாயுடு, நேற்று முன்தினம் கட்டிலுடன் சுடுகாட்டுக்கு வருகை தந்தார்.
அங்கேயே இரவு உணவை முடித்த அவர், இரவு முழுவதும் அங்கேயே தூங்கினார். அவருடன் ஒரே ஒரு உதவியாளர் உடனிருந்ததாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் தனது வீட்டுக்கு ராம நாயுடு புறப் பட்டுச்சென்றார்.அவரது இந்த அதிரடிக்கு பலனாக 50 தொழிலாளர்கள் வேலை செய்ய தொடங்கினர்.
இதனால்,மகிழ்ச்சி அடைந்த ராம நாயுடு, பேய், பிசாசு' பயத்தை போக்கவே இங்கு தூங்கினேன். இனி மேலும் பலர் பயமில்லாமல் வேலை செய்ய வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்துவசதிகளும்கொண்ட நவீன சுடுகாடாக இது மாற் றப்படும். எனக் கூறியவர், கொசுக்கடி மட்டும் அதிகமாக இருந்தது என தெரிவித்துள்ளார்.
நன்றி : விடுதலை 26.06.2018

No comments:
Post a Comment