இன்றைய மாலை உன்னதமான ஒரு மாலையாகி விட்டது.
நிகழ்ச்சி தொடங்கியவுடன் ஒலி ஒளி அணைத்துவிட்டு நாளை திறனாய்வுக்குத் தயார் செய்யலாம் என்று திட்டமிட்டு இருந்தேன். ஆனால் நேரு அண்ணாவின் நேர்த்தியான திறனாய்வு காரணமாக என் திட்டங்கள் தவிடுபொடி ஆகிவிட்டது.
எவ்வளவு அழகாக ஒரு புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கிறார். அதனை எப்படி உள்வாங்குகிறார். ஆழமாய் படித்து அருமையாய் அதன் கருத்துக்களைக் கேட்போர் நெஞ்சம் கொள்ளப் பகிர்கிறார் நேரு அண்ணா வாழ்த்துகள்..
ஏராளமானோர் பங்கு கொண்டு இன்றைய நிகழ்ச்சியைச் சிறப்பித்து விட்டார்கள்
நிகழ்ச்சியை நேரில் காண முடியாத பெருமக்கள் சூம் வழியாகக் கண்டு தங்கள் கருத்துக்களைப் பகிரவும்





அண்ணன் கோ.ஒளிவண்ணன் அவர்கள்,வாருங்கள் படிப்போம் குழு.
2 comments:
நிகழ்வு வெகு சிறப்பாக இருந்தது- ரெஜினா சந்திரா.
மகிழ்ச்சியும் நன்றியும்...
Post a Comment