
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.நல்.இராமச்சந்திரன் பயிற்சியைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

பெரியார் மணியம்மை ஆட்சி மன்ற குழு உறுப்பினர் வீ.அன்பராஜ் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அயன்ஸ்டீன் அரங்கத்தில் திரை வழியே பங்கேற்றவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது.
வல்லம், மே 21- பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஊரக வளர்ச்சி உயராய்வு மய்யம், திராவிடர் கழக இளைஞர் அணி மற்றும் பகுத்தறி வாளர் கழகமும் இணைந்து நடத்திய தமிழ் இணை யப் பயிலரங்கத் தொடக்க விழா நேற்று பல்கலைக் கழக வள்ளுவர் அரங்கில் கோலாகலமாய் நடை பெற்றது.
தொடக்க விழா
இந்நிகழ்ச்சிக்கு பகுத்தறிவாளர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வரவேற்புரை வழங்கினார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணை முதன்மையர் பேராசிரியர் க.திருச்செல்வி தலைமை தாங்கினார். பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் வா.நேரு அறிமுக உரையாற்றினார். இப்பயிலரங்கிற்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. நல்.இராமச் சந்திரன் அவர்களின் தொடக்க உரையில் கிராமப் புற மாணவர்களும், இளைஞர் களும் இத்தகைய தமிழ் இணையப் பயிலரங்கம் மூலம் தங்களையும் தங்களது சமூகத்தையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்று கூறியதோடு பிரமிக்கச் செய்யும் சாதனைகளை கிராமப் புறங்களில் இருந்து வரும் இளைஞர்களால்தான் சாதிக்க முடியும். அதற்கு கிடைத்த வாய்ப்புகளை நன்முறையில் பயன்படுத்தினால் அசாதாரண வெற்றிகளையும் நன்மைகளையும் குவிக்க இயலும் என்று தனது தொடக்க உரையில் தெரிவித்தார். பெரியார் புரா திட்டத்தின் வழியாக கிராமப் புற 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் மற்றும் ஆங்கில பாடங்கள் கணினி முறையில் பல்கலைக்கழகத்தின் மூலம் கற்றுத்தர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக, துணைப் பொதுச் செயலாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக பெரியார் மணியம்மை பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் கா.செந்தில்குமார் நன்றியுரை வழங்கினார்.
நிறைவு விழா
200 க்கும் மேற்பட்ட கிராம புற இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். இப் பயிலரங்கத்தில் தமிழ் இணையம் வளர்ச்சி வரலாறு வலைப்பூ உருவாக்கமும் பயன்பாடுகளும் மற்றும் தமிழ் விக்கிப்பீடியா பற்றிய அறிமுகம் ஆகிய பல்வேறு தலைப்புகளின் கீழ் பயிற்சிகள் வழங் கப்பட்டன. திராவிடர் கழக மாநில இளைஞர் அணி செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், திராவிடர் கழக மாநில மாணவரணி செயலாளர் திராவிட எழில் இப்பயிற்சி பயிலரங்கத்தை ஒருங்கிணைத் தனர். இந்நிகழ்ச்சியின் நிறைவு விழாவானது மாலை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அய்ன்ஸ்டீன் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பகுத்தறிவா ளர் கழக மாநில துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச் செல்வி வரவேற்புரை வழங்க பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் மு.அய்யாவு தலைமையுரை ஆற்றினார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் வீ.அன்புராஜ் சிறப்புரை யாற்றி, இப்பயிற்சியில் பங்கேற்ற வர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். மேலும் இப்பயிற்சியில் பங்கேற்றவர்களில் சிலர் இப்பயிற்சியானது தங்கள் அறிவுகண்களை திறந்ததாகவும், பயனுள்ளதாக அமைந்தாகவும் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். இப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்த அனைவருக்கும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஊரக வளர்ச்சி உயராய்வு மய்ய கூடுதல் இயக்குநர் ந.சிவசாமி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிகள் பல்கலைக் கழக துணைவேந்தர் சீரிய வழிகாட்டுதலின்படி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர்.மு.அய்யாவு, ஊரக வளர்ச்சி உயராய்வு மய்யத்தின் கூடுதல் இயக்குநர் பேரா. முனை வர்.ந.சிவசாமி, பவர் தொண்டு நிறுவன செயலாளர் முனைவர்.உ.பர்வீன், பெரியார் சிந்தனை மய்ய துணை இயக்குநர் முனைவர்.க.அன்பழகன், மாநில ப.க.துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாவட்ட திராவிடர் கழக தலைவர் வழக்கறிஞர் சி.அமர்சிங், மாவட்ட செயலர் மானமிகு த.ஜெக நாதன், மாநில மாணவரணி செயலர் மானமிகு திராவிட எழில் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியப் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment