Monday 20 February 2017

மூளை தானம் கோரும் விஞ்ஞானிகள்

மூளை தானம் கோரும் விஞ்ஞானிகள் - காணொளி

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஒருவர் இறந்த பிறகு அவரது மூளையை மருத்துவ ஆய்வுகளுக்கு தானமாக தந்து உதவுமாறு விஞ்ஞானிகள் கேட்கிறார்கள்.
குறிப்பாக மன அழுத்தம் மற்றும் விபத்தின் பின்னரான மன உளைச்சல் ஆகியவை குறித்த புதிய சிகிச்சைகளுக்கான ஆய்வுகளுக்காக அதிக மூளைகள் தேவைப்படுகின்றன.
இவை குறித்த மேலதிக தகவலுக்காக பொஸ்டனில் உள்ள மூளை வங்கிக்கு பிபிசி குழு சென்றது.

http://www.bbc.com/tamil/global-39031130
நன்றி : பி.பி.சி. 20.02.2017
குருதிக்கொடை,கண் கொடை,  உடல் கொடை என்பதற்கு அடுத்தகட்டமாக உடல் மூளை நன்கொடை பற்றிய பி.பி.சியின் செய்தி இது. நரம்பியல் மற்றும் குணம் சம்பந்தமான புதிர்களைத் தீர்க்க இந்த மூளைக் கொடை உதவும் என்று அறிவியல் அறிஞர்கள் சொல்கின்றார்கள். தமிழ் நாட்டில் மூளை நன்கொடைத் தனியாகக் கொடுக்கவேண்டுமா அல்லது உடல் கொடையிலியே தனியாக மூளையை எடுத்துக்கொள்ளலாமா என்பது தெரியவில்லை......தெரிந்தவர்கள் விவரிக்கலாம். 

3 comments:

இராய செல்லப்பா said...

இறந்தவருக்கு மூளையே கிடையாது என்ற வாதம் எழலாம் என்பதால் முழு உடலையும் கோரிப்பெறுவதே நன்று. - இராய செல்லப்பா நியூஜெர்சி

Ajai Sunilkar Joseph said...

தெரியவில்லையே ஐயா...!!!

முனைவர். வா.நேரு said...

அய்யா, கருத்திற்கு நன்றி.....