Wednesday 18 October 2017

கடவுள் நம்பிக்கை இருந்தால்தான் நல்லவனாக இருக்கமுடியுமா? .....





நல்லவனாக வாழ்வதற்கு கடவுள் பக்தி அவசியமா ? இப்படி ஒரு கேள்வியை அமெரிக்காவில் கேட்டிருக்கின்றார்கள். அதில் பெறப்பட்ட பதிலை இந்த இணையதளத்தில் பதிந்திருக்கின்றார்கள்.
http://www.patheos.com/blogs/friendlyatheist/2017/10/16/survey-most-americans-no-longer-believe-you-need-god-to-be-good/

http://religionnews.com/2017/10/17/good-without-god-more-americans-say-amen-to-that/

 மொத்தம் 56 சதவீதம் பேர் கடவுள் நம்பிக்கைக்கும் நல்லவனாக வாழ்வதற்கும் சம்பந்தமில்லை, இன்னும் கேட்டால் நல்லவனாக வாழ்வதற்கு கடவுள் நம்பிக்கை தேவையில்லை என்று பதில் அளித்திருக்கின்றார்கள். அமெரிக்காவைப் பொறுத்தவரை அனைத்தும் கடவுளின் பெயரால் நடப்பதாக நம்புவர்கள்.தங்களது ரூபாய் நோட்டுக்களில் கூட கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்துபவர்கள். அந்த நாட்டில் இப்படி ஒரு புள்ளி விவரம் வெளிவந்திருக்கின்றது.

           நமது நாட்டைப்பொறுத்த வரையில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக சொல்லிக்கொள்ளும் சாமியார்களைப் பார்த்த பின்பும், அவர்கள் மீது நடைபெறும் வழக்குகளை எல்லாம் கேட்ட பிறகும் நல்லவனாக வாழ்வதற்கு கடவுள் நம்பிக்கையா ? கெட்டவனாக வாழ்வதற்கு கடவுள் நம்பிக்கையா ? என்று மக்களிடம் கேட்டால் கெட்டவனாக வாழ்வதற்குத்தான் கடவுள் நம்பிக்கை என்று பெரும்பாலானாவர்கள் சொல்லக்கூடும். கடவுள் கதையெல்லாம் நார், நாராய்க் கிழிகின்றது, ஒழுக்கமாக இருப்பதற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் சம்பந்தமில்லை என்பதனை உலகம் உணர்கிறது......

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஒழுக்கமாக இருப்பதற்கும் கடவுள் நம்பிக்கைக்கும் சம்பந்தமில்லை என்பதனை உலகம் உணர்கிறது......
தமிழகம் உணர வேண்டும் ஐயா
நன்றி

முனைவர். வா.நேரு said...

தந்தை பெரியாரால் தமிழகம் உணர்ந்துதான் இருக்கிறது. இன்றைக்கு நடிப்பு பக்தர்கள் அரசியலில் கூடிவிட்டார்கள். இளைஞர்கள் குறிப்பாக பெண்கள் உணர்ந்துதான் இருக்கின்றார்கள். நாமும் கூட ஒரு ஆய்வு செய்யலாம்...செய்வோம்