மதுரை, ஜன.22 மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக சிறப்புக்கூட்டம் 30.12.2017 அன்று மாலை 6.15 மணிக்கு மதுரை யானைக்கல்லில் உள்ள எஸ்.ஏ.எஸ். அரங்கில் நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் பா.சடகோபன் அனைவரையும் வரவேற்றார். ஓய்வுபெற்ற நீதியரசர் பொ.நடராசன், மதுரை மண்டல செயலாளர் மா.பவுன்ராசா, திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் வே.செல்வம் ஆகியோர் முன் னிலை வகித்தனர். கூட்டத்திற்கு பகுத்தறி வாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு தலைமை தாங்கினார்.
அவர் தனது தலைமை உரையில் “கவிஞர் வைரமுத்து அவர்கள் ஒரு கவிதையில் மனிதனுக்கு மலச்சிக்கலும், மனச்சிக்கலும்? இருக்கக்கூடாது என்பார். மனச்சிக்கல் நம்மைப் பலவிதத்திலும் தொல்லைப்படுத் துவது. மனச்சிக்கலில் மாட்டிக்கொள்பவர்கள் அதனை முறையாக அணுகத் தெரியாமல் கார்ப்பரேட் சாமியார்களிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படுகின்றார்கள். மனச்சிக்கலில் மாட்டிக் கொள்பவர்கள் படிக்காதவர்கள் அல்ல, மெத்தப்படித்தவர்கள், சாப்ட்வேர் போன்ற துறைகளில் பணியாற்றுபவர்கள், நிறைய சம்பாதிப்பவர்கள். சிலர் மனச்சிக்கல் களில் மாட்டிக்கொண்டு, அதனைத் தீர்ப்பதற் காக என்று சொல்லி கார்பரேட் சாமியார்களின் அடிமைகளாக மாட்டிக்கொண்டு முழிக்கின் றார்கள். இன்றைய சிறப்புப்பேச்சாளர் ஜெ. வெண்ணிலா பகுத்தறிவுக் குடும்பத்தைச் சார்ந்தவர். பல ஆண்டுகளுக்கு முன்னால் மதுரையில் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டியில் முதல் பரிசு பெற்றவர்” எனக்குறிப்பிட்டு உரையாற்றினார்.
“மானம், மானுடம் பெரியார்”
நூல் அறிமுகம் பகுதியில் புத்தகத் தூதன் பா.சடகோபன் திராவிடர் கழகத்தின் செயலவைத்தலைவர் சு.அறிவுக்கரசு அவர்கள் எழுதிய “ மானம், மானுடம் பெரியார் “ என் னும் நூலை அறிமுகம் செய்து உரையாற்றினார். அவர் தனது உரையில் “ சு.அறிவுக்கரசு அவர் களால் எழுதப்பட்டுள்ள இந்த நூல் மிகப் பெரிய வரலாற்றுக் கருவூலம். கருவூலம் என்பது சேர்ப்பவருக்கும் பயன்படும், பயன் படுத்துபவருக்கும் பயன்படும். அப்படி அய்யா அறிவுக்கரசின் மன ஓட்டத்தை மட்டு மல்ல, வாசிக்கும் நமது மன ஓட்டத்தையும் செலுமைப்படுத்தும் கருவூலம் இந்தப்புத்தகம்.
இந்த நூலின் அறிமுகவுரையில் நேரு அவர்கள், ஆற்றில் ஓடும் வெள்ளம், கரை புரண்டு ஓடும். அது சுழற்றி சுழற்றி அழுக்கு களை அடித்துச்செல்லும் . அப்படி உணர்ச்சி வெள்ளமாகச்செல்லும் அறிவுக்கரசு அவர் களின் எழுத்துகள் சமூக அழுக்குகளை அடித்துச்செல்லும் தன்மை உள்ளதாக உள்ளது என எழுதியிருப்பார். அப்படி ஒரு உணர்ச்சி வெள்ளமாக இந்த நூல் வந்துள்ளது. மனி தனை அச்சத்திலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் விடுதலை செய்வதுதான் பெரியாரின் கருத் துக்கள் என்று இந்த நூல் ஆசிரியர் எழுதியிருக்கின்றார். உண்மை, அச்சம் பல வகை என்றாலும் மனிதனுக்கு முதலில் ஏற் பட்ட அச்சம் உடல் வலியாகத்தான் இருக்கவேண்டும். உடல் வலிதான் மனிதனை முடக்குகின்றது.உடல் வலிக்குப்பின்புதான் உயிர் அச்சம், இழப்பு அச்சம் போன்ற பல அச்சங்கள். ஆனால் உடல் வலி என்னும் அச்சம் தந்தை பெரியாரை ஒன்றும் செய்ய இயலவில்லை.சிறுவயது முதல் இறப்புவரை தந்தை பெரியாரை உடல் வலி தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. ஆனால் அதனை மீறி வெற்றி படைத்தவர் பெரியார்.
அதனைப் போலவே ஆதிக்கத்திலிருந்து விடுதலை. காட்டில் வாழ்ந்த மனிதனை முதலில் ஆதிக்கப்படுத்தியது அவன் விரும் பிய உணவு என்று நான் கருதுகின்றேன். எந்த உணவு மீண்டும் மீண்டும் உண்ண வேண்டு மென்று தோன்றியதோ அதுதான் அவனை ஆதிக்கப்படுத்தியிருக்க வேண்டும்.ஆனால் எந்தவொரு ஆதிக்கமும் தந்தை பெரியாரை ஆட்கொள்ள இயலவில்லை. ஒடுக்கப்படு பவர்கள் அவர்களை ஒடுக்குபவர்கள், இரு வருக்கும் ஒருவர் நல்லவராக இருக்கமுடியாது. இதற்கு பெரியார் ஒரு எடுத்துக்காட்டு சொல் கின்றார். .திருடனுக்கும் திருட்டுக்கொடுப்பவ னுக்கும் ஒருவன் நன்மை செய்யமுடியாது. அப்படித்தான் திருடுபவர்கள் ஒரு வகுப்பார். திருட்டு கொடுப்பவர்கள் ஒரு வகுப்பார் எனச்சொல்கின்றார். ஆனால் எல்லாவிதமான ஆதிக்கத்தையும் எதிர்ப்பேன் என்று சொல் கின்றார் பெரியார். பார்ப்பனர்கள் ஏதாவதொரு ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டால் அந்த ஆதிக்கத்தையும் நான் எதிர்ப்பேன் என்று சொல்கின்றார் பெரியார். இப்படி ஏராளமான செய்திகள் இந்தப்புத்தகத்தில் இருக்கிறது” எனக் குறிப்பிட்டு உரையாற்றினார்.
திராவிடர் கழகத்தின் அமைப்புச்செயலாளர் வே.செல்வம் சிறப்புரையாற்றிய ஜெ.வெண் ணிலா மகேந்திரன் பற்றிய அறிமுக உரையை ஆற்றினார். மதுரை அய்.ஜெயராமன் அவர்களின் மகள். தூத்துக்குடி மாவட்டத்தின் தலைவராக இருந்து மறைந்த சிவானணைந்த பெருமாள் அவர்களின் மருமகள், அண்ணன் மறைந்தும் மறையாமல் இருக்கின்ற தூத்துக் குடி பொறியாளர் மனோகரன் அவர்களின் தம்பி- திண்டுக்கல்லில் பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் மகேந்திரன் அவர்களின் மனைவி என்னும் சிறப்புக்குரியவர். சமூக அறிவியல்,உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் நிறுவனத்தில் உளவியல் ஆலோசகராக,தற்போது மேலாளராகப் பணியாற்றுபவர். தொடர்ந்து இளைஞர் களின், பெண்களின், மாணவ, மாணவி களின் பிரச்சினைகளைப் பேசித்தீர்த்து வைப்பவர்..” என்று சிறப்பாக சிறப்புரையாற்றுபவரின் தனித்தன்மைகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து “ தந்தை பெரியாரும் உளவியலும்” “ என்னும் தலைப்பில் ஜெ.வெண்ணிலா அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில் “சிறு வயது முதல் பெரியாரைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்து, படித்து வருபவள் நான். எனது இணையர் மகேந்திரனின் குடும்பமும் பெரியாரைப் பின்பற்றும் குடும்பம். எனது கணவரின் அண்ணன் மறைந்த எனது மாமா மனோகரன் எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்பவர். எனவே பெரியாரைப் பற்றிப் பேசுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடியது. அதிலும் பகுத்தறிவாளர் கழகக் கூட்டத்தில் பேசுவது மிகுந்த மகிழ்ச்சி தருவது ஏன் என் றால் பகுத்தறிவாளர் கழகம் என்றால் மனி தர்கள் கழகம் என்றார் பெரியார். மனிதர்கள் கழகத்தில் பேசப்போகிறோம் என்பது எனக்கு மகிழ்ச்சி.
“தந்தை பெரியாரும் உளவியலும்” என்பது என் தலைப்பு. உளவியல் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நிறுவனத்தில் பணி புரிபவள் நான் “ எனக்குறிப்பிட்டு உளவியல் தத்துவம், தந்தை பெரியாரின் கருத்துக்கள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் கருத்துக்களை இணைத்து பவர் பாயிண்ட் மூலம் காணொலிக் காட்சிகளாவும் காட்டி, திரை யிட்டும் திரையிட்டதை விளக்கியும் புதிய அணுகுமுறையில் புத்துணர்ச்சி தரும் அடிப்படையில் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தின் முடிவில் கேட்கப்பட்ட அய்யங்களுக்கு எல்லாம் ஜெ.வெண்ணிலா பதில் அளித்தார். கூட்டத்தின் நிறைவில் கல்லூரி மாணவி சொ.நே.அறிவுமதி நன்றி கூறினார்.
கூட்டத்தில் உசிலை மாவட்டத்தலைவர் சிவகுருநாதன்,பொதுக்குழு உறுப்பினர் இராக்கு தங்கம், வழக்குரைஞர் அணி மாநில துணைச்செயலாளர் நா.கணேசன், பொறியாளர் முத்தையா, ந.முருகேசன் -அவரது துணைவி யார்,வழக்குரைஞர் தியாகராசன்,வடக்குமாசி வீதி செல்லதுரை, சுமதி செல்வம், மாரிமுத்து, பேக்கரி கண்ணன், ஆட்டோ செல்வம் உட் பட்ட பொறுப்பாளர்களும், மகளிரும், ஆர்வ லர்களும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment