திருவண்ணாமலை
இடுக்குப் பிள்ளையார்
கோவிலுக்குள் நுழைய
முடியாமல் நுழைந்து
வெளியே வர இயலாமல்
சிக்கத்தவித்த ஆந்திர பக்தர்
மணிக்குமார் இறந்துபோனார்..
தோழர் ம.கு,வைகறையின்
முக நூல் பதிவு ஒன்றிற்கு
பல ஆயிரம் பேர்
விருப்பக்குறி இட்டிருக்கின்றனர்..
“வாழைப்பழம் இரண்டை
வைத்திருக்கும் சிம்பன்சியிடம்
எனக்கொரு பழத்தைக் கொடுத்தால்
உனக்குச் சொர்க்கத்தில்
நூறு வாழைப்பழம் கிடைக்கும்
எனச்சொல்லி நம்பவைக்க இயலாது..
அப்படிச்சொல்லி ஏமாற்றி ஒரு
வாழைப்பழத்தை வாங்கவும் முடியாது…
ஆனால் சிம்பன்சியைவிட
பல மடங்கு அறிவுடைய
மனிதனை நம்பவைக்க இயலும் ‘
யுவா நோவா ஹராரி சொன்னது இது..
இடுக்குப் பிள்ளையாருக்குள்
போய் வந்தால் நல்ல வாழ்க்கை
கிடைக்கும் என நம்பி
தங்கள் உயிரை இழக்கும்
‘மணிக்குமார்’கள் மாறும்
நாள் உலகில் எந்த நாள்?...
சின்பன்சியை விட உயர்ந்தவர்கள்
நாங்கள் என இந்த
சொர்க்கம் நரகம் கற்பிதங்களை…
காணிக்கை கொடுத்து
கும்பிட்டால் நல்வாழ்வு கிடைக்கும்
எனத் திணிக்கப்பட்ட கருத்துகளை…
மண்டைக்குள் இருந்து
கழற்றி எறியும் நாள் எந்நாள்?
வா.நேரு, 29.07.2026

சமூகம்
ReplyDeleteசுமூகமாய்
சமூகமாய் வாழ,சுயமரியாதையும்
சுய அறிவும்
ஒழுக்கமும்
பாரெங்கும்
பரவும் நாள் ...
கழற்றி எரியும்
நாள்... அந்நாள்'!.
நன்றிங்கம்மா.. தங்கள் கருத்திற்கு....
ReplyDelete