அன்றுமுதல் இன்றுவரை
….
அவரிடம் கொடுக்கப்பட்ட
புத்தகம்
திரும்ப வந்தபோது
அழகிய அட்டையுடன் வந்தது..
நூலகர் கேட்டார்
கொடுத்த புத்தகத்தை
கிழித்துக் கொண்டு
வருபவர்களைப் பார்த்திருக்கிறேன்..
நீங்கள் அட்டைபோட்டு
கொண்டு வந்திருக்கிறீர்கள் என்றார்…
இரவல் வாங்கிய புத்தகத்தை
இரவல் கொடுத்தேன்..அவரின்
கைவண்ணம் இது என்றேன்,,,
நனைந்து போன புத்தகத்தை
புதிதாகக் கொடு எனக்
கொடுத்த நண்பன் கேட்க…
குதிரைக்குப் பதிலாக
மேக்காலில் கட்டிக்கொண்டு
நாள் முழுதும் தான் உழுது
நனைந்த புத்தகத்தை
சொந்தமாக்கிய
ஆப்ரகாம் லிங்கன் என்
நினைவுகளில் வந்தார் !
அன்றுமுதல் இன்றுவரை
அரிதாகப் புத்தகம்
கிடைப்பவர்களுக்குத்தான்
தங்கள் கைகளில் கிடைக்கும்
புத்தகத்தின் அருமை தெரிகிறது…
வா.நேரு, 28.10.2026
No comments:
Post a Comment