Wednesday 5 February 2014

நிகழ்வும் நினைப்பும்(17):மாட்டுக் கொட்டகை பள்ளிக்கூடத்தில் படித்த துணைவேந்தர்

மதுரையில் எனது மகன் சொ.நே.அன்புமணி படித்த பள்ளியின்(சி.இ.ஓ.ஏ) ஆண்டு விழா இன்று (5.2.2014) நடைபெற்றது. அந்தப் பள்ளியில் படித்து மாநில, மாவட்ட ரேங்க்(+2, 10) எடுத்தவர்கள், பாடங்களில் 100க்கு நூறு எடுத்தவர்களுக்கு ரொக்கப்பரிசுகளை அந்தப் பள்ளியில் வழங்கினார்கள். ஏறத்தாழ 20 ல்ட்சம் ரூபாய் வழங்கினார்கள். எனது மகன் பெற்ற பரிசை வாங்க நான் போயிருந்தேன்.    நிகழ்வின் சிறப்பு விருந்தினராக தஞ்சை பல்கலைக் கழகத் துணைவேந்தர் முனைவர் திருமலை அவர்கள் கலந்து கொண்டார். தன்னுடைய உரையில் தான் படித்த காலத்திற்கும் இன்றைக்கும் இருக்கின்ற பள்ளிக்கூட கட்டமைப்பு வசதிகள் பற்றிக் குறிப்பிட்டார். மதுரையில் இவ்வளவு பெரிய நிலப்பரப்பில், பெரிய பெரிய கட்டங்களோடு இந்தப் பள்ளி இயங்குகிறது. 50,60 ஆண்டுகளுக்கு முன்னால், அருப்புக்கோட்டை அருகில் உள்ள பந்தல் குடியிலிருந்து எங்கள் ஆசிரியர் , எங்கள் கிராமத்திற்கு வருவார். அவர் பெயர் தெரியாது, ஆனால் எல்லோரும் பந்தல்குடி வாத்தியார் என்றுதான் அழைப்பார்கள். எங்கள் ஊரின் செல்வந்தர் ஒருவர் , தன்னுடைய மாட்டுக் கொட்டகையின் ஒரு பகுதியை பாடம் நடத்த, பள்ளிக்கூடமாக அனுமதித்திருந்தார். பள்ளிக்கூடம் தொடங்கும் வரை மாடுகள் இருக்கும். மாணவர்கள் வந்தவுடன், மாடுகள் மேயப்போய் விடும்,மாலையில் மாணவர்கள் போனவுடன் மாடுகள் வந்து விடும். மழை வந்து விட்டால், மாடுகள் மேயப்போகாது, நாங்களும்(மாணவர்களும்) , மாடுகளும் ஒரே இடத்தில்தான் இருப்போம் ,ஆனால் பாடம் நடக்கும். அப்படிப்பட்ட நிலைமை அன்றைக்கு இருந்தது. இன்றைக்கு இருக்கும் மாற்றத்தை நினைக்கின்றபோது பெருமிதமாக இருக்கிறது. இன்றைக்கு படிக்கும் மாணவர்களுக்கு எவ்வளவு வசதி, வாய்ப்புக்கள் இருக்கின்றது  என்றார்.

அன்று ஒவ்வொரு வீட்டிலும் சில குழந்தைகள் சாகும். சாதாரணமாக ஒரு பெண்ணிடம் , உனக்கு எத்தனை குழ்ந்தைகள் என்றால், ஒரு நாலு குழந்தை செத்துப்போச்சு, மீதம் 8 இருக்கு என்பார்கள். 6-வது குழ்ந்தை பெயர் என்ன்வென்றால் , பட்டென்று சொல்ல மாட்டார்கள். யோசித்துத்தான் சொல்லுவார்கள். அப்பாவிடம், உனது 6-வது பிள்ளை எத்தனாவது வகுப்பு படிக்கிறது என்று கேட்டால், தெரியாது என்பார்கள். என்னமோ, ப்ள்ளிக்கூடம் போறான், வர்றான், என்ன படிக்கிறான் என்றெல்லாம் தெரியாது என்பார்கள்.குழ்ந்தை பெற்றுக்கொண்டே இருப்பார்கள். கேட்டால் கடவுள் கொடுக்கிறான் என்பார்கள் . இன்றைக்கு அப்படி இல்லை. பையனின், பெண்ணின் படிப்பைப் பற்றி பெற்றோர்கள் தெரிந்து வைத்திருக்கின்றார்கள் என்றார். சாதாரண கிராமத்தில் பிறந்து , பகுதி நேர மாட்டுக் கொட்டகை பள்ளிக்கூடத்தில் படித்த நான், தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக, படிப்பால்,உழைப்பால் உயர்ந்திருக்கிறேன் என்றால், நீங்கள் எல்லாம் இவ்வளவு வசதி இருக்கும் காலத்தில் உழைத்தால் எவ்வளவு தூரம் உயர முடியும் என்பதனை உணருங்கள் என்றார். மிக எதார்த்தமான உரையாக, ஆனால் மாணவர்களின் மனதில் சுருக்கெனத் தைக்கும் உரையாக அவரின் உரை இருந்தது.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவரும் உணர வேண்டிய உரை...

முனைவர் திருமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

பகிர்வுக்கு நன்றி ஐயா...

J.Jeyaseelan said...

மிக அற்புதமான தன்னம்பிக்கை ஏற்படுத்தும் உரையை வழங்கி உள்ளார் துணை வேந்தர். ஐயா அதை நீங்கள் பதிவு செய்த விதமும் மிகவும் நன்று.

இது என்னுடைய வலைப்பக்க முகவரி... நேரமிருந்தால் வந்து பார்த்து உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் ஐயா!
http://pudhukaiseelan.blogspot.com/

முனைவர். வா.நேரு said...

நன்றி தனபாலன் அவர்களே!

முனைவர். வா.நேரு said...

நன்றி ஜெயசீலன் அவர்களே! தங்கள் வலைப்பக்கத்தையும் பார்க்கின்றேன்.

தமிழ் ஓவியா said...

//மாணவர்களின் மனதில் சுருக்கெனத் தைக்கும் உரையாக அவரின் உரை இருந்தது//

கடந்த காலங்கள் எப்படியிருந்தது என்பது பலருக்கும் தெரியாது. இப்ப்இருப்பது போல் தான் இருந்திருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். இடஒதுக்கீடு வரலாறே தெரியாமல் பல் மாணவர்கள் இருக்கிறார்கள். இடஒதுக்கீடு இந்நிலையை அடைய எத்தனை போராட்டங்கள் யப்பபா சொல்லி மாளாது.. அதை உணர்ந்தவர்களுக்குத்தான் அதன் அருமை தெரியும்,புரியும் அது போல் துணைவேந்தரின் உரையை உணர்ந்து மாணவர்கள் மட்டுமல்லாது அனைவரும் செயல் படட்டும். நன்றி அய்யா

முனைவர். வா.நேரு said...

நன்றி தோழரே !