Tuesday 6 May 2014

வயலில் விடிந்ததுபோல....

கணினி முகத்தில்தான்
எனது விடியல்
எனது தாத்தா பாட்டன்
வாழ்க்கை
வயலில் விடிந்ததுபோல

சூரிய ஒளிக்கதிர்கள்
தரையில் விழுவதற்குமுன்னே
துயில் எழுகின்றேன்
என் முன்னோர்கள் போலவே

அவரக்ள் வெளி உலகில்
விடியலுக்காக
கால்வைத்த வேளைகளில்
நான் வீட்டிற்குள்ளேயே
ஒரு மூலையில்
கணினினுக்குள் மூழ்குகின்றேன்
இதுவும் கூட விடியலுக்காக

வயிற்றுப் பசி அடங்கியது
என் காலத்தில்
அறிவுப் பசி தொடர்கிறது
என் காலத்திலும்
என் பிள்ளைகள் காலத்திலும்

அடக்கப்பட்டோம் - ஏன்?
ஒடுக்கப்பட்டோம் -ஏன் ?
எனும் கேள்விகள்
அன்று விடை தெரியாத
வினாகக்ள் ?
இன்று தெரிந்த
விடைகளால்
மீண்டும் ஒருமுறை
அந்த நிலைக்கு ஆட்படோம்
எனும் தெளிவு நிலையால்
கணினினுக்குள் மூழ்குகின்றேன்

ஒரு நாள் முழுதாய் விடியும்
எனும் நம்பிக்கை இருக்கிறது !
உண்ண உணவில்லா நிலையில்
எவரும் இல்லை என்னும்
நிலை வரும் என்னும்
நம்பிக்கை வலுக்கிறது !

ஒடுக்கப்பட்டு மூலையில்
கிடந்தோரெல்லாம்
ஒன்றிணையும்
இணைப்புப் புள்ளிகளாய்
சமூக வலைத்தளங்களைப்
பார்க்கிறபோது
இணையத்திற்குள்
கருத்துக்களால்
இணையும்
இளைஞர்களைப் பார்க்கிறபோது
ஒரு நாள் முழுதாய் விடியும்
எனும் நம்பிக்கை
வலுக்கிறது மனதில் !
                                                   ...........வா. நேரு ....................
நன்றி : எழுத்து.காம்

4 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

நம்பிக்கை தரும் கவிதை.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அப்படிப்போடுங்க கவிஞரே! புத்தக விமர்சனம், பொதுவான சமூக விமர்சனம் எல்லாம் இருக்கட்டும் அப்பப்ப நம்ம படைப்பும் வரணும்ல? வந்துருச்சில்ல...?
ஒரு நாள் முழுதாய் விடியும்
எனும் நம்பிக்கை இருக்கிறது !
உண்ண உணவில்லா நிலையில்
எவரும் இல்லை என்னும்
நிலை வரும் என்னும்
நம்பிக்கை வலுக்கிறது !
-- அதுதான் நம் நம்பிக்கை! எழுதுங்கள் தோழரே! எழுதுங்கள்! இதோ என் வலைப்பக்கத்தில் இட்டிருக்கும் விவரத்தை நண்பர்களுக்குச் சொல்லி உதவுங்கள்.. நாம் முன்னேறுவோம்.
http://valarumkavithai.blogspot.in/ நன்றி பாராட்டுகள் தோழரே!

முனைவர். வா.நேரு said...

நன்றி முனைவர் குணசீலன் அவர்களே, வருகைக்கும் தங்கள் கருத்திற்கும்

முனைவர். வா.நேரு said...

நன்றி , தோழரே, இலக்கிய உலகில் கால் நூற்றாண்டாய் தடம் பதிக்கும் உங்களைப் போன்றவர்களின் எழுதுங்கள், தோழரே, எழுதுங்கள் என்னும் வார்த்தைகள் இன்னும் நிறைய எழுதத்தூண்டுகிறது. நேரம் ஒதுக்கி வாசித்தும், வளப்படுத்தும் கருத்துக்களையும் அள்ளித்தந்தும் உதவுவதற்கு நன்றி.