Tuesday, 24 March 2026

அண்ணன் ஆதவனின் பிறந்த நாள்...

 

எனக்குத் தெரிந்த

நாள்முதல்

இன்றுவரை

இயக்கப்பணி ஒன்றே

மூச்சாய் இயங்கும்

அன்பு அண்ணன் ஆதவன்!

அருப்புக்கோட்டை என்றாலே

கண்முன்னால் வரும்

உருவம் இவரின் உருவம் !

 

விடுதலையை உண்மையை…

கழக ஏடுகளை…

வீதி வீதியாய்

வீடு வீடாய்ச் சென்று

சேர்க்கும் வேலையைப்

பல்லாண்டுகளாய்

சிரித்த முகத்தோடு

தேனீ போலப் பரப்பும்

பரப்புரையாளர் இவர்!...



 

தந்தையின் வழியில்

திராவிடர் கழகப்பணியைத்

தீயாய்த் தொடரும்

களப்பணியாளர் இவர் !

 

எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல்

தந்தை பெரியாரின் கொள்கையை

அய்யா ஆசிரியர் வழியில்

செயல்படுத்தும் தொண்டர் இவர்!

 

இவரைப் போன்றோர்தான்

திராவிடர் கழகத்தின்

உயிர் போன்றோர்!

சமூகத்திற்கு விழி போன்றோர்..

வாழ்க ! வாழ்க ! என

அண்ணன் ஆதவனை

இப்பிறந்த நாளில்

வாழ்த்தி மகிழ்கிறோம்!...

                                  வா.நேரு,25.03.2026

 

8 comments:

Anonymous said...

உண்மை உண்மை உண்மை

விடுதலை ஆதவன் என்று சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும் என்கின்ற அளவிற்கு விடுதலை நாளிதழுடன் ஐக்கியபட்டவர் ஆதவன்

முனைவர். வா.நேரு said...

@ எழுத்தாளர் மதிகண்ணன், கதவு பதிப்பகம்....நன்றி தோழர்

Anonymous said...

ஆதவன் அய்யா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

முனைவர். வா.நேரு said...

வாழ்த்துவோம்

சுப.முருகானந்தம் said...

ஆதவன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

முனைவர். வா.நேரு said...

இணைந்து வாழ்த்துவோம் அண்ணே. நன்றி

ஸ்டார் நாகராசன்,ஆண்டிபட்டி said...

அய்யா சிறப்பான பதிவு

முனைவர். வா.நேரு said...

நன்றி.மகிழ்ச்சிங்க அய்யா.