Wednesday, 2 October 2013

நிகழ்வும் நினைப்பும் (4)-ப்ரண்டலைன் பத்திரிக்கையும் மூட நம்பிக்கை தொழிற்சாலைகள் கட்டுரையும் :...

நிகழ்வும் நினைப்பும் (4)- ப்ரண்டலைன் பத்திரிக்கையும் மூட நம்பிக்கை தொழிற்சாலைகள் கட்டுரையும் :

                                திராவிடர் கழகத்தின் சொற்பொழிவாளர், வழக்கறிஞர் பூவை புலிகேசி அவர்கள் இன்று (02,10.2013) காலை அலைபேசியில் அழைத்து, அய்யா ப்ரண்டலைன் பத்திரிக்கை(அக்டோடபர் 4) வாங்கிப் படித்துப்பாருங்கள் என்றார். தி ஹிந்து பத்திரிக்கை குழுமத்தில் இருந்து வரும் மாதம் இருமுறை பத்திரிக்கை, தலைப்பே 'Superstition Industry '- மூட நம்பிக்கை தொழிற்சாலை என்று தலைப்பிட்டு வந்திருந்தது. வாங்கிப் படித்துப்பார்த்தால் , ஆச்சரியம். நடமாடும் கடவுள்கள் எனப்படும் சாமியார்களைப் பற்றிய விரிவான கட்டுரைகள், ஆசிரமம் பாபு என்றழைக்கப்படும், 16 வய்துப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக சிறையில் இருக்கும் ஆசிரமம் பாபு, அந்தக் கிரிமனலோடு மேடைகளைப் பகிர்ந்து கொண்ட அதவானி, உமாபாரதி படங்கள், தங்களைத் தாங்களே கடவுள் என்று அழைத்துக்கொள்ளும் சாமியார்கள்,அவர்களுக்குத் துணை நிற்கும் அரசு இயந்திரங்கள், அரசு, அரசியல் தலைவர்கள், அரசியல் தரகர்கள், கார்பரேட் நிறுவனங்கள் .இவர்களெல்லாம் இணைந்து எப்படி , பக்தி என்ற பெயரில் சாதாரண மனிதர்களை சுரண்டுகிறார்கள் என்பதனை விரிவான கட்டுரைகளாக கொடுத்துள்ளார்கள். திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் வீரமணி அவர்கள் ஊடகங்கள் எப்படியெல்லாம் மூட நம்பிக்கைகளைப்  பரப்புவதற்கு துணை போகின்றார்கள் என்பதனையும் அவர்களின் போக்கு மாறவேண்டும் என்பதனையும் அவரது பேட்டியில் கொடுத்திருக்கின்றார். பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் அவர்கள் பகுத்தறிவாளர் கழக, திராவிடர் கழகத்தின் பணிகளைப் பற்றியும், அறிவியலுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான முரண்பாடுகள் பற்றியும், மூட நம்பிக்கை ஒழிப்பினை எந்தெந்த முறையில் எல்லாம் , எந்தெந்த் வடிவங்களில் எல்லாம் எடுத்துச்சென்று கொண்டிருக்கின்றோம் என்பதனைக் குறிப்பிட்டிருக்கின்றார்.அகில இந்திய நாத்திகக்கூட்டமைப்பின் தலைவர் பேரா.நரேந்திர நாயக், ஆந்திரா நாத்திக மையத்தின் தலைவர் டாக்டர் விஜயம், மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பாடுபட்டதிற்காக கொல்லப்பட்ட நரேந்திர தபோல்கரின் பேரன் சுகாத் தபோல்கர், கேராளவைச்சேர்ந்த சானல் இடமருகு- இவர்களிடம் எல்லாம் பேட்டி கண்டு வெளியிட்டிருக்கின்றார்கள். 'திராவிட நிலத்தில்' எனத் தலைப்பிட்டு   தந்தை பெரியாரின் பணியையும் இன்றைய திராவிடர் கழகத்தின் பணியைப் பற்றியும் நன்றாகவே விரிவாகவே வெளியிட்டிருக்கின்றார்கள். பாராட்டப்பட வேண்டிய கட்டுரைகள். ஏறத்தாழ 21 பக்கங்களை மூட நம்பிக்கை ஒழிப்பு சம்பந்தமாக வெளியிட்டிருக்கின்றார்கள். உளமாற பாராட்டுகிறோம்..மனதார பாரட்டுகின்றோம். ஒவ்வொரு இதழுக்கும் சில பக்கங்களை இப்படி ஒவ்வொரு பத்திரிக்கையும் ஒதுக்கினால் ,நிச்சயமாக 'நாடு ஒளிரும்'..   கட்டுரை மட்டுமல்ல, கட்டுரைக்கு போடப்பட்டிருக்கும் சில கமெண்ட்ஸ் நன்றாக உள்ளது.
http://www.frontline.in/cover-story/in-the-name-of-faith/article5137396.ece
http://www.frontline.in/cover-story/asarams-empire/article5137420.ece
http://www.frontline.in/cover-story/thriving-business/article5137608.ece
சில பேர் இந்தக் கட்டுரைகளுக்காக ப்ரண்ட்லைன பத்திரிக்கையை குற்றமும் சொல்கின்றார்கள். படித்துப்பாருங்கள்.

6 comments:

தமிழ் ஓவியா said...

அய்யா, மூடநம்பிக்கை ஒழிப்புக்காக 21 பக்கங்கள் ஒதுக்கி கட்டுரை வந்திருப்பது வியப்பாகத்தான் உள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

முனைவர். வா.நேரு said...

இனி வரும் உலகம் மனித நேய உலகம்தான். மறைக்க நினைததாலும் இயலாது. நன்றி !

anandam said...

'திராவிட நிலத்தில்' எனத் தலைப்பிட்டு தந்தை பெரியாரின் பணியையும் இன்றைய திராவிடர் கழகத்தின் பணியைப் பற்றியும் நன்றாகவே விரிவாகவே வெளியிட்டிருக்கின்றார்கள். பாராட்டப்பட வேண்டிய கட்டுரைகள். ஏறத்தாழ 21 பக்கங்களை மூட நம்பிக்கை ஒழிப்பு சம்பந்தமாக வெளியிட்டிருக்கின்றார்கள். உளமாற பாராட்டுகிறோம்..மனதார பாரட்டுகின்றோம். ஒவ்வொரு இதழுக்கும் சில பக்கங்களை இப்படி ஒவ்வொரு பத்திரிக்கையும் ஒதுக்கினால் ,நிச்சயமாக 'நாடு ஒளிரும்'.. // பத்திரிக்கைகள் திருந்துமா? காத்திருப்போம்..

anbu said...

பாராட்டத்தக்க செயல்

கருப்பையா.சு said...

சோதிடம், வாஸ்து , மாந்தரீகம் போன்ற மூட நம்பிக்கைகளை நம்மீது திணித்தவர்களை விட, சாதாரண மக்களே இன்று அதற்கு மிகவும் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். அவர்களை மீட்டெடுக்க வேண்டிய கடுமையான பணி நம் போன்ற முற்போக்கு எண்ணம் கொண்டவர்களுக்கு காத்திருக்கிறது என்பதற்கு அடையாளமாக இக்கட்டுரையைப் பார்க்கிறேன்.

முனைவர். வா.நேரு said...

மீட்டெடுக்க வேண்டிய கடுமையான பணியில் தன்னையும் இணைத்துக்கொள்வதாக தாங்கள் எழுதியிருப்பது மிக்க மகிழ்ச்சி. ஆனால் அது அவ்வளவு எளிதான பணி அல்ல. கடவுள், பில்லி, சூனியம், ஜாதக, மாந்தீரிக நம்பிக்கைகள் மக்கள் மனதில் புரையோடிக்கிடக்கிறது. படிக்காதவர்களை விட படித்தவர்களிடம் இப்படிப்பட்ட குப்பைகள் மூளையை முழுவதுமாக அடைத்துக்கொண்டுள்ளது. ஆனால் அப்படி இருந்தவர்கள், உண்மையை உணர்ந்து வெளியே வந்து விட்டால், மிகத் தீவிரமாக மற்றவர்களையும் விடுவிக்க முயற்சி செய்கின்றார்கள். நன்றி தங்கள் கருத்திற்கும், எபொழுதும் உற்சாகப்படுததி என்னை எழுத வைப்பதற்கும். .