Saturday, 18 January 2014

நிகழ்வும் நினைப்பும் (13) : நாத்திகர் என்பதற்காக அகதித் தஞ்சம்

"நான் ஒரு நாத்திகனாகிவிட்டேன், நாடு திரும்பினால் கொல்லப்படுவேன் என்று அச்சம் தெரிவித்த ஆப்கன் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு பிரிட்டன் அகதித் தஞ்சம் அளித்துள்ளது.

ஆப்கனில் நாளாந்த வாழ்க்கையில் மதம் மிக அதிக அளவில் கலந்துள்ளது என்றும், இந்த நபரால் தனது நாத்திக நம்பிக்கைகளை முற்றாக மறைத்து வாழ முடியாது என்று அவரின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

நாத்திகர் என்பதற்காக ஒருவருக்கு பிரிட்டனில் அகதித் தஞ்சம் அளிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது. சம்மந்தப்பட்ட நபரின் பெயர் வெளியிடப்படவில்லை. ஆப்கனில் முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த இவர், 16 வயதில் பிரிட்டனுக்கு வந்தார். இங்கு அவர் நாத்திகரானார்.

இந்த குறிப்பிட்ட வழக்கு குறித்து கருத்துக் கூற உள்துறை அலுவலகம் மறுத்துவிட்டது. தேவைப் படுவோருக்கு அடைக்கலம் அளிக்கும் சிறப்பான பாரம்பர்யம் கொண்ட நாடு பிரிட்டன் என்று அது கூறியுள்ளது."
பி.பி.சி.செய்தி 14.1.14

நல்ல செய்தி. வரவேற்கப்படவேண்டிய செய்தி. உலகில் இன்னும் சில நாடுகளில் கடவுளை மறுப்பது என்பது, கடவுள் இல்லை என்னும் உண்மையைச்சொல்வது தண்டனைக்குரியது, அதுவும் மரணதண்டனைக்கு உரியது என்பது கொடுமையானது. ஒரு பக்கம் 21 ஆம் நூற்றாண்டு, செவ்வாய் கிரகத்திற்குப் போகப் போகின்றோம், வான வீதியில் வீடு அமைத்து வாழப்போகின்றோம், வான வீதியில் சுற்றுலா போகப்போகின்றோம் என்று சொல்லப்படுகின்ற நிலையில், இன்னொரு பக்கம் அறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கைகளை வைத்துக்கொண்டு, அதனைச சந்தேகப்பட்டால் கூட தண்டனை என்பது கொடுமை. கடவுள் காப்பாற்றப்படுவது கடுமையான தண்டனைகளால் என்பது அந்தக் கடவுள் எனும் கருத்துக்கு பெருமை அளிப்பதா ? அளவற்ற அருளாளன், தான் இல்லை என்று ஒருவன் சொல்கிறான் என்றால் நேரில் வந்து இருக்கின்றேன் என்று சொல்லிவிட்டுப் போவதை விட்டு விட்டு, கொல்லச்சொல்வாரா? அப்படிச்சொனனால் அவர் அருளற்ற அருளாரா? இப்படியெல்லாம் கேள்வி கேட்டுவிடக் கூடாது என்பதற்குத்தான்  கடுமையான தண்டனை என்று மதவாதிகள் அச்சுறுத்துகின்றார்கள் போலும். உலகத்தின் பல்வேறு பகுதிகளில் , க்டும் கோட்பாடு கொண்ட மதவாதிகளிடம் சிக்கித் தவிக்கும் நாத்திகர்கள், பிரிட்டனில் தஞ்சம் அடையட்டும். கடவுள் என்னும் பெயரால் தங்கள் நாடுகளில், பகுதிகளில் நடக்கும் கொடுமைகளை பட்டியலிடட்டும். அது ஒரு புதிய பார்வையை, புதிய வெளிச்சத்தை உலகத்திற்கு அளிக்கும். கடவுள் ஒரு பொய் நம்பிக்கை என்னும் புத்த்கத்தில் ரிச்சர்டு டாக்கின்ஸ் சொன்னதைப் போல ஒரு மத நம்பிக்கையிலிருந்து விடுபடலாம், மாறலாம் என்பதே தனக்குத் தெரியாதே எனத் தன் துணைவியார் சொன்னதாக சொன்னது போல , மத நம்பிக்கையிலிருந்து விடுபடலாம், நாத்திகராக வாழலாம், இன்னும் நலமாக பிரிட்டனில் சென்று உழைத்து வாழலாம் என்பது நம்பிக்கைகுரிய செய்தியாக அந்த நாட்டில் வாழ்பவர்களுக்கு, நாத்திகர்களுக்கு  அமையும். உலகில் இத்தகைய அகதி முறையை முதன்முதலில் அமுல்படுத்தியிருக்கும் பிரிட்டனுக்கு பாராட்டுக்க்ள்.

6 comments:

காமக்கிழத்தன் said...

சிறந்த பயனுள்ள பதிவு.

குலவுசனப்பிரியன் said...

நல்ல பகிர்தல். நன்றி.

Unknown said...

ஏதோ இப்படியும் ஒரு நாடு இருக்கிறது என்பதை நினைத்து சந்தோசப் பட்டுக்க வேண்டியதுதான். ஆனால் என்ன கர்மம், இந்த தீவிரவாதிகளின் ஹெட் லிஸ்டில் முதல் வரிசையில் பிரிட்டன் வர் இதுவும் ஒரு காரணமாகும் :(

முனைவர். வா.நேரு said...

படித்து கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி !.

முனைவர். வா.நேரு said...

படித்து கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி !.

முனைவர். வா.நேரு said...

படித்து தங்கள் கருத்தை பதிந்ததற்கு நன்றி !.