Saturday, 25 January 2014

எங்கே கடவுள் ?

                                        எங்கே கடவுள் ?

ஆத்திகர்களாய் அடையாளம்
காட்டிக் கொண்டவர்களின்
கைகளில் கடப்பாரைகளும்
கத்திகளும்.....

இடித்தே தீருவோம்
உடைத்தே தீருவோம்
கட்டியே தீருவோமென்னும்
உறுதி மொழிகள்

எனது கடவுளே பெரிது
இடிக்கப்பட்டன்
புத்தர் சிலைகள்
தகர்க்கப்பட்டது மனித நாகரீகம்
ஆப்கானில் .........

எனது கடவுளே பெரிது
உனது வழிபாடு இருந்த
இடத்தில்தான் கட்டவேண்டும்
எனது வழிபாட்டுத்தலம்
இராம ஜென்ம பூமியா?....
பாபர் மசூதியா ?.....
வெறிபிடித்த கோஷங்களோடு
வளையவரும் மத-மனிதர்கள்...

மூன்று வய்துக்
குழந்தையின் முகத்தில் கத்தி
பாய்ச்சும் ஆத்திகர்கள்...
மொத்தமாய் ரெயிலுக்குத்
தீவைத்து பொசுக்கும்
மிருக எண்ணங்கள் !   ....

எரிக்கப்படும் உயிர்கள்.....
தகர்க்கப்படும் மனித நேயம்....
சிதைக்கப்படும் மனித உடல்கள் !...
அனைத்தும் ஆண்டவனின் பெயரால்....

எந்தக் கடவுள் பெரிது ?
எங்களுக்குத் தெரியவில்லை..
கடவுள் இருப்பது உண்மையெனில்
ஏதாவது ஒரு கடவுள்
இங்கே வாயேன்....
எதிரிகளிடம் சென்று
நானிருக்கும் இடமென்று
சொல்லித் தொலையேன்
                                                        - வா. நேரு-

தோழர் ந,முருகன் அவர்கள் நடத்திய 'புதிய காற்று' தனிச்சுற்றுப் பத்திரிக்கையில் 2002-ல் எழுதியது.

4 comments:

காமக்கிழத்தன் said...

வந்து சொல்வதற்கு, ‘நான்...நீ...’ என்று கடவுள்களும் போட்டியிட்டு அடித்துக் கொள்கிறார்களோ என்னவோ?!

மனதில் பதியும் கவிதை.

முனைவர். வா.நேரு said...

'மனதில் பதியும் கவிதை.', ந்ன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

இருந்தால்தான் வந்துவிடுவாரே

முனைவர். வா.நேரு said...

த்ந்தை பெரியார் சொன்னதுதான், வந்தா, இருக்கார்ன்னு சொல்லிட்டுப்போரோம். வரலையே, அப்ப இல்லைங்கறதுதானே உண்மை.