படித்த செய்தியில் பிடித்த செய்தி (1) : கற்றதனால் ஆய பயனென் கொல்
கல்வியின் அவசியத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் 10 அதிகாரத்தில் தெளிவு படுத்தியுள்ளார். உலக நாகரிக வளர்ச்சியை எடுத்துக் கொண்டால் கல்வி அறிவு வளர வளர நாகரிகமும் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. அய்ரோப்பிய கண்டங்களில் கல்விமுறை, அந்த மக்களை மேலும் மேலும் அறிவுடை யோராக மாற்றியது இது சுபாஷ் சந்திர போஸ் ஆஸ்திரியாவில் மருத்துவ சிகிச் சைக்காக தங்கி இருந்தபோது கூறியது. அப்படி என்னதான் இருக்கிறது அய்ரோப்பிய கல்விமுறையில்? உலக அளவில் கல்வியின் கலங்கரை விளக்கம் என அழைக்கப்படுவது பின்லாந்து தான். அமெரிக்க, அய்ரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலை யில் இருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை.
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (Oced-Organisation for economic co-operation and Development) என்பது வளர்ச்சி யடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப் போது நடைபெறும். இதற்கு - - PISA-Programme for International Students Assessment என்று பெயர். மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில் சேர்ந்துகொள் ளலாம். இந்த ஆய்வில் பின்லாந்து எப்போதும் முன்வரிசையிலேயே இடம் பிடிக்கிறது.
பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்கு கிறது. சுமார் 6 வயது வரையில் ஆன அனைத்து காலமும் கற்றலுக்கான துடிப் புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ் சிறு மூளை, தனது சுற்றுப்புறத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் கற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுகிறது.
ஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தைக்கு கல்வியுடன் இசை, ஓவியம், விளையாட்டு, என அவரவர்களுக்கு பிடித்தமான பாடங்களைத் தேர்ந் தெடுத்து படிக்க முழு சுதந்திரம் உண்டு. பெற்றோர்கள் தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும் பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப் பித்து தெரிந்து கொள்ளலாம்.
1. கற்றலில் போட்டி கிடையாது என்ப தால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர் களுக்கு இல்லை.
2. சக மாணவர்களைப் போட்டியாளர் களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை.
3. இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப் படுவது இல்லை.
5. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத் துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்.
6. ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது.
7. முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம். அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி அங்கு உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பின்லாந்தில் 99 சத விகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வி யைப் பெற்றுவிடுகின்றனர்.
8. அதில் 94 சதவிகிதம் பேர் உயர் கல்விக்குச் செல்கின்றனர். பயிற்சி வகுப்பு கள், சிறப்பு வகுப்புகள் போன்றவை பின் லாந்து கல்வி முறையில் கிடையாது.
9. தேர்வுகளை அடிப்படையாகக் கொள்ளாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உல களாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக் கின்றனர். இது எப்படி என்பது கல்வி யாளர்களுக்கே பெருங்கேள்வியாக எழுந்தது. அந்தக் கேள்விக்கான விடை தேட அய்.நா சபை ஆய்வு ஒன்றை நடத்தியது.
உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, அய்க்கிய நாடுகள் சபை ஒவ் வோராண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது. பின்லாந்து கல்விமுறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர்.
உல கின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதி நிதிகள் ஒவ்வோராண்டும் செல்கின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிச மான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது.
இத்தகைய சிறந்த கல்விமுறையை உருவாக்கியதிலும், பராமரிப்பதிலும் பின் லாந்தின் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.
பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, சமூகத்தில் மிகுந்த மதிப்பு உடையது. அரசின் கொள்கை வகுக்கும் முடிவு களில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்குண்டு. மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ்நாள் லட்சியம். பள்ளிக்காலங்களில் இருந்தே தனக்கான தகுதிகளை வளர்த் துக்கொள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் முழு உரிமை உண்டு. பின்லாந்தின் கல்வி முறையின் தாக்கம். டென்மார்க், ஆஸ் திரியா, சுவிசர்லாந்து, நெதர்லாந்து, இத்தாலி, ஜெர்மன், நார்வே,ஸ்வீடன் போன்ற நாடுகளிலும் கடைப்பிடிக்கப்படு கிறது. இப்பொழுது புரிகிறதா அவர்கள் கற்றதனால் எழுந்த பயன் என்னவென்று
: சரவணா ராஜேந்திரன்
நன்றி : விடுதலை 22.02.2015
Read more: http://www.viduthalai.in/page1/96684-2015-02-22-10-29-45.html#ixzz3SfdV45Bf

No comments:
Post a Comment