Sunday, 5 June 2016

உழைக்காமல் ஊதியம் வேண்டாம், மக்கள் மறுப்பு.....

அரசே எல்லோருக்கும் வருமானம் தரும் திட்டம்: நிராகரிக்கும் சுவிஸ் மக்கள்

  • 38 நிமிடங்களுக்கு முன்னர்
நிபந்தனையற்ற அடிப்படை வருமானத்தை அறிமுகம் செய்யும் திட்டம் தொடர்பாக சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பை வாக்காளர்கள் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
Image captionஅடிப்படை வருமான திட்டத்தை அறிமுகம் செய்ய சுவிட்சர்லாந்தில் வாக்கெடுப்பு
இந்த வருமான திட்டம் வேண்டாமென்று 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் கூறியுள்ளதாக வாக்கெடுப்பின் ஆரம்ப நிலை தகவல்கள் குறித்து சுவிஸ் நாட்டு ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
சுவிஸ் நாட்டில் சட்ட ரீதியாக வாழ்வுரிமை பெற்ற வயது வந்தோர் அனைவருக்கும் மாத வருமானமாக 2500 டாலர்களை வழங்கிட இந்த அடிப்படை வருமான திட்டத்தின் ஆதரவாளர்கள் விரும்புகின்றனர்.
இத்திட்டம் வறுமையை எதிர்த்து போராட உதவும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், மக்களின் பணி புரியும் ஊக்கத்தையே இத்திட்டம் கெடுத்து விடும் என்று சுவிஸ் நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகளில் உள்ள பலரும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

நன்றி : பி.பி.சி. தமிழ் செய்திகள் 05.06.2016

No comments: